Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!
Joined
May 18, 2024
Messages
29
அவள் உதட்டின் அசைவுகளையே அவன் ரசித்தான்.. "கேக்குதா? உனக்கு "என அவள் சத்தம் போட்ட பிறகு தான் பூமிக்கு வந்தான் ருத்ரன்... "ம்ம் நீ ! கேக்ற கேள்வி சரி தான்" என்று அவளை உரசியவாறு அவன் அமர, தள்ளி உட்கார்ந்தவள் தலையணை எடுத்து அவனை அடித்தாள்.. இந்த உணர்வுகள் எல்லாமே அவனுக்கு புதிது… பணம் கொடுத்தால் காரியம் முடியும்.. "வெட்டு ஒன்று துண்டு இரண்டு" என பாசம் என்ற வார்த்தை அவன் அகராதியில் இன்றி வாழ்ந்தவன்..இச் சிறு பெண் மீது தான் கட்டுண்டு போவோம் என அவன் கனவில் கூட எண்ணி இருக்க மாட்டான்...

அவளின் கையில் இருந்த தலையணையை பிடுங்கியவன் "நான் ஒன்னும் குடிகாரன் இல்லை யினி.. அன்னைக்கு தான் முதல் டைம் சரக்கு சாப்டேன்.. கிக்கா இருந்துச்சா அது தான் கிளைண்ட் பார்ட்டிக்கு வெச்சிருந்த எல்லாத்தையும் நானே குடிச்சிட்டேன்" என கண் சிமிட்டி அவன் கூற; "மொடாக் குடிகாரன் ரேஞ்ச்கு குடிச்சிட்டு வியாக்கியானம் பேசுற பாரு" என மூஞ்சை திருப்பினாள்...

அவள் தாடையை தன் பக்கம் திருப்பியவன் "இனிமேல் அந்த தப்பு நடக்காது நீ நம்பலாம்" என்றவனிடம் "அப்போ அந்த கஞ்சா சுருட்டை என்ன பண்ண போற" எனக் கேட்டாள்..

"நான் சிகரெட் அடிப்பேன் இல்லைனு சொல்லல... கஞ்சா சுருட்டு ஓவர் டென்ஷன் ஆகினா மட்டும் தான் அடிப்பேன்..." " அப்போ அது போதை இல்லையா?" என அவள் கேட்க;
" கஞ்சால மருத்துவ குணம் இருக்கு... நம்ம மூளைய ரொம்ப சுறுசுறுப்பா இயங்க வைக்கும்... அத அப்டியே ஸ்மோக் பண்ணா தான் போதை. ஆனா அதை மருந்தா மாத்தணும்னா ஏழு முறை தூய நீர்ல கழுவி காய வெச்ச பிறகு தான் யூஸ் பண்ணனும். சோ மை வைஃப் நான் அப்டி தான் யூஸ் பண்றேன்.." என அவன் கூற; " எல்லாத்துக்கும் ரெடி மேட் பதில் இருக்கு உன் கிட்ட" என சிலுப்பிக் கொண்டாள் வெயினி...

"ஆமா நீ! வேணும்... நீ! வேணும்னு சொல்லி என்னை அடிச்சாலே ஒருத்தி அவள நீ லவ் பண்ணியா என்ன? (இல்லைனு சொல்லுடா என மனதில் வேண்டிக் கொண்டு தான் இந்த கேள்வியை கேட்டாள் வெயினி).. அவளை உறுத்து பார்த்து "ஆமா" என்றான் அவன்.. இந்த பதிலை எதிர்பாரா வெயினி முகம் தொங்கி விட்டது ...அவளை அப்படி பார்க்க பிடிக்காதவன் "அதெல்லாம் ஒன்னும் இல்லை காதல், அன்பு எல்லாம் உன் ஒருத்தி கிட்ட தான் பீல் ஆச்சு... அது காதலானு கூட தெரியாது பட் எனக்கு நீ வேணும்... எனக்கு மட்டும் தான் நீ!... அவ்வளவு தான் எனக்கு தெரியும்..." என்றான் ருத்ரன்...

" அப்பறம் எதுக்கு அவ உன்னை லவ் பண்ற மாதிரி சீன் போட்டா" என அவள் கேட்க ; "அவ பேர் ரீட்டா" என ருத்ரன் கூற; " மேட்டர் பேர் ரீட்டா நல்லா இருக்குல" என சிரித்தாள்... அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.. "இவளுக்கு என் கூட டச் இருக்குனு தெரிஞ்சு ரவி அவளை பாக்க போய் இருக்கான்... உன்னை கடத்துறது தான் இன்னைக்கு ரவியோட பிளான்... ரீட்டாவை அதுக்கு துருப்பா யூஸ் பண்ணிக்க இருந்தான்.. பட் மிஷன் மிஸ் ஆகிட்டு.." என ருத்ரன் கூற; " எதுக்கு என்னை கடத்தனும்" என வெயினி கேட்டாள்... "ரெட் லைட் ஏரியால விற்க தான்" என்றான்...

" எதேய் "என்றவள் அதிர்ச்சியாகி வாயை பிளக்க, "உன்னை கல்யாணம்
பண்ணிக்றது ரவியோட பிளான்லயே இல்லை ..அவனுக்கு அமெரிக்கால கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.. அவன் ஒரு வுமனைசரும் தான்"..
"ஆமா அதுக்கு நீயே பரவாலனு என்னை கல்யாணம் பண்ணி காப்பாத்திட்ட அதானே" என வெயினி பேச "இல்லை நீ! எனக்கு மட்டும் தான் என்கிற உணர்வு.. அது தான் காரணம்" என்றான் ருத்ரன்..

"டின்னர் என்ன செய்ய?" என வெயினி கேட்க ; "ஆர்டர்" பண்ணிக்கலாம் என்றான்... "வேணாம் எதுக்கும் கிச்சன்ல எதுவும் இருக்கா சமைக்கனு பாக்கிறேன்" என்றவள் பிரிட்ஜில் நூடில்ஸ், முட்டை, வெங்காயம் இருப்பதைப் பார்த்தாள்..நூடில்ஸை அவித்து , அதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சிறிதாக நறுக்கி சேர்த்து, அளவாக உப்பு போட்டு மூன்று முட்டைகளை ஊத்தி பத்து நிமிடம் கழித்து தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையில் ஊறி இருந்த நூடில்ஸை தோசை போன்று வட்டமாக பரப்பி சுட்டெடுத்தாள்....

"இந்தா!" என ஒரு தட்டை அவனிடமும் ஒரு தட்டை அவளும் எடுத்து கொண்டனர்...
வாயில் உணவை வைத்தவன்" ம்ம் குட் நல்லாருக்கு யினி" என்றான்... அவள் இரண்டு வாய் உண்டு முடிப்பதற்குள் அவன் அனைத்தையும் உண்டு விட்டான்..

அவள் சிரித்து கொண்டே தனது உணவை அவனுக்கும் ஊட்டி தானுமாக உண்டாள்...
தூங்கும் நேரம் வந்ததும் வெயினிக்கு இனம்புரியாத தடுமாற்றம் ..அவனுடன் தன் அறையில் உறங்குவதா? இல்லை தான் மட்டுமா? இல்லை அவனை வேறு அறையில் உறங்க வைப்பதா? என்று இரு கொள்ளி எறும்பு நிலை அவளுக்கு ..

அவன் நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுத்து காலாட்டி கொண்டு போனை நோண்டினான்..போனை பார்த்து கொண்டே" இங்கயே தூங்கு வெயினி நான் எதுவும் நினைக்க மாட்டேன்" என கூற அவன் பேச்சில் சிரிப்பு தான் வந்தது.. வெளியே சிரித்தால் எங்கு அதிக உரிமை எடுத்துக் கொள்வானோ? என்று முறைத்து பார்த்தாள்... உடனே அவன் அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டான்.. வெளியில் வேறு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது ‌ வெயினி அமைதியாக அவன் அருகில் படுத்து கொண்டாள்.. அந்த பக்கம் திரும்பி படுத்த ருத்ரன் இவள் செயலில் வாய் பொத்தி சிரித்தான்...

சிறிது நேரத்திற்கு பிறகு வெயினியை பார்த்தது போல திரும்பியவன், அவளுமே அவனை தான் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்...
அவள் நெற்றியில் தவழ்ந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டான்... அவளது மேனியின் மென்மை அவன் முரட்டு கரங்களில் ஒட்டிக் கொண்டது..அவளது கையை பிடித்து ஒவ்வொரு விரலாக வருடினான்.. அவளின் கன்னங்களில் இயற்கை சிவப்பு வர்ணம் பூசியது...இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிட்டு அவள் முகம் பார்த்து" முதல் கூடலும், திருமணமும் உன்னை கேக்காம நடந்துச்சு.. இதுல உன் விருப்பம் ரொம்ப முக்கியம்.. அந்த ரெண்டுக்குமே நான் சாரி சொல்ல மாட்டேன்.. ஏன்னா நீ எனக்கானவ "என்று அவன் பேசிட அவன் வலது கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்தாள் வெயினி...

"ஏன்" என கேள்வியாய் அவன் பார்க்க, இமைகளை தாழ்த்தி கொண்டு "ரெண்டு மாசமா எனக்கு பீரியட் வரல" என்றாள்.. "டாக்டர வர சொல்லட்டுமா ?" என ருத்ரன் கேட்க; ஐயோ என தலையில் அடித்து கொண்டு "ரெண்டு மாசத்துக்கு முன்னாடி முதல் இரவுக்கு பதிலா முதல் பகல் கொண்டாடீனீங்களே சேர்! அதுக்கு அப்புறம் இருந்து தான் பீரியட் வரல" என அவள் சொல்ல அப்பொழுதும் அவனுக்கு புரியவில்லை....

சிறிது நேரத்திற்கு பிறகே அவனுக்கு புரிந்தது... வெயினிக்கு பல அதிர்ச்சிகளை கொடுத்தான் ருத்ரன்.. எனினும் அவள் சோர்ந்து போகவில்லை.. வெயினி ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னாள் ருத்ரன் வாய் அடைத்து கொண்டது..உண்மையா தான் நீ! சொல்றியா யினி?" என அவன் கேட்க; "ம்ம்" என்றாள்... கட்டிலில் இருந்தவாறே அவளை அள்ளி மடியில் போட்டவன் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான்.. "யினி! யினி!" என அவன் வாயில் இருந்து வேறு வார்த்தை வரவில்லை...

"அது! அது! இப்போ!" என அவன் தவித்தான்.. மெதுவாக அவனது அங்கியை கலைந்து அவன் புஷ்டி போன்ற வெற்று மார்பில் தன் தலை சாய்த்தாள் வெயினி... "யார் இவள் எனக்கும் அன்னையாகி, என் பிள்ளைக்கும் தாயானவள்" என ருத்ரன் நெகிழ்ந்தான்.. "யினி" என அவன் மிருதுவாக அழைக்க "எனக்கு ஓகே ஈஸ்வர்" என்றாள்.. "இல்லை அது வந்து.. எதுவும்.." என்று அவன் உளர "எதுவும் வராது பத்திரமா பண்ணிக்கலாம்" என சம்மதம் சொன்னாள்...

அவளை மழலை போல கெஞ்சி ,குமரி போல கொஞ்சி அவளுக்கே தெரியாமல் தயார் செய்து வைத்திருந்த அவளது
பெற்றோரின் அறையில் தூக்கி கொண்டு நிறுத்தினான்... அங்கு வண்ண வண்ண பலூன்கள் மற்றும் மிளிரும் மின் விளக்குகள் ரோஸ் வெல்வெட் கேக் என அனைத்தும் தயார் நிலையில் இருந்தது...
வெயினி அனைத்தையும் பார்த்து அவனை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ‌... "ஹாப்பி பர்த்டே இளவெயினி ருத்ரேஷ்வரன்" என கூறி அவள் இதழில் தன் இதழ்களை பொருத்தி சிறு நாழிகை கவி எழுதினான் வெயினியின் ஈஸ்வரன்... இன்னைக்கு நிறையவே குழப்பம் ,தெளிவு ,சந்தோஷம், சப்பிரைஸ்னு எல்லாமே அதிகப்படி தான்" என்ற வெயினி "எப்டி தெரியும் பர்த்டேனு" எனக் கேட்க; "ஜாமின் எடுக்கும் போது பர்த் சர்ட்டிபிகேட்ல பாத்தேன்" என்றான்... கேக் வெட்டி இருவரும் ஆள் மாறி ஊட்டிக் கொண்டனர்

வெயினியை அங்கேயே விட்டுவிட்டு ருத்ரன் "இரு வரேன்" என சென்றான்.. "இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறான்" என எண்ணியவள் அவனின் பின்னால் செல்ல ஒரு நாற்காலியில் ஏறி சீலிங் பேனை நோண்டிக் கொண்டு நின்றான் ருத்ரன்.. "என்ன பண்ற" என்ற வெயினியின் குரலில் கட்டிலில் தடுமாறி வீழ்ந்தான்... கையில் ஏதோ வைத்திருக்க அருகில் வந்த வெயினி என்னவென்று பார்த்தாள் சிறிய ரக கமெரா இருந்தது..." என்ன இது... இங்க எப்டி?" என அவள் கேட்க "வீடு புல்லா இப்டி கமெரா வெச்சேன்... ஒரு தடவை நேரம் கூட தெரியாம நீ அசந்து தூங்கினப்போ ரெண்டு மணி நேரம் உன்னை பாத்துட்டே இருந்தேன் நீ விழிக்கிற டைம் வரும் போது தான் எந்திருச்சு போனேன்" என்றான்...

"கமெரா என் சேப்டிக்கு வெச்ச ஓகே... பட் ஏன் பெட்ரூம்ல வெச்ச"என கேட்டவள் மூளையில் அப்போது தான் ஒரு பொறி தட்டியது ...

தொடரும்...
 
Back
Top