Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -22)

Joined
May 18, 2024
Messages
29
என்ன கமெரா வெச்சியா? அதுவும் பெட்ரூம்ல." என அவள் வாய் பிளக்க "இல்லை! இல்லை! நீ ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுறப்போ, கண்ணாடி முன்னுக்கு நின்னு டவலை கழட்றப்போ, அப்பறம் இன்னர் செலக்ட் பண்றப்போ, சுடிதார் ஜிப் போட கஷ்ட பர்ரப்போ, பின்னலா? இல்லை லூஸ் ஹெயாரானு? சீப்பை வெச்சி யோசிக்கிற டைம், ரெடியாகிட்டு மிரர் முன்னாடி நின்னு எல்லாம் கரெக்டா இருக்கானு முன்னுக்கு பின்னுக்குனு பாக்றப்போ? உன் குட்டி தொப்பைய பிடிச்சிட்டு வயித்தை எக்கி பாக்றப்போ, இப்படி எல்லா நேரமும் நான் கண்ணை முடிப்பேன் யினி.. எதையுமே பாத்தது இல்லை.. முக்கியமா முதுகுல வலது சைட் தோள்ல இருக்ற சிவப்பு கலர் மச்சம் அத பாத்ததே இல்லை.." என அவளை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்து கொண்டே கூற வெயினி உறைந்து விட்டாள்...

"அடப்பாவி" என வாயை பொத்தி கட்டிலில் அமர்ந்து விட்டாள்... "எவ்வளவு நாளா இது நடந்துச்சு?" என அவள் மாறா அதிர்ச்சியோடு கேட்க "ஜஸ்ட் ஒன் மன்த் தான்.. அதுக்கு அப்பறம் எதுவும் இல்லை... நாம தான் கல்யாணம் பண்ணி சாமியார் ஆகிட்டோமே "என பாவமாக மூஞ்சை வைத்து கொண்டு கூற "உனக்கு குழந்தை பிறக்ற வரைக்கும் எதுவும் இல்லை போடா" என வெயினி காட்டமாக கூறி வெளியே தள்ளி கதவடைத்தாள்...

வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டி "அடியே யினி! புருஷன் பாவம் உன்னை சும்மா விடாதுடி... ஒன்னுக்கு நாலு மடங்கா வரும்டி..." என அவன் கத்த "பரவால பத்து ருத்ரனை கூட நான் சமாளிப்பேன்" என்றாள் வெயினி.. "பிளீஸ் யினி எதுவும் பண்ண மாட்டேன் பக்கதுலயாச்சும் தூங்க விடு" என அவன் கெஞ்ச படாரென கதவு திறக்கப்பட்டது... வெயினி போய் கட்டிலில் படுத்து கொண்டாள்... ருத்ரன் சமத்தாக வந்து அவள் அருகில் அவளையும் அவன் கருவையும் அணைத்து கொண்டு உறங்கினான்..

காலையில் வெயினி கண் முழிக்க ருத்ரனை காணவில்லை... எழுந்து வெளியே செல்ல வேலையாட்கள் இருவரும் வந்து இருந்தார்கள்... வெயினி டீ குடித்து விட்டு குளித்து முடித்து வர காலை உணவு இருந்தது.. அந்த வேலைக்கார பெண் தான் "ஐயா எங்கயோ அவசர வேலையா போறாங்களாம்மா.. சாயங்காலம் வந்திருவேன்னு சொல்ல சொன்னாங்க" என்றாள்... ருத்ரனை தொடர்பு கொள்ள அவன் போன் நம்பரும் அவளுக்கு தெரியாது.. என்ன செய்ய என்று சிந்தித்தாள்.‌.

கவியும் அசோக்கும் வெயினி வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து பார்க்க வந்தனர்... அவர்களைக் கண்டதும் வெயினி "வாங்க சாப்பிடலாம்" என அழைத்தாள்... மூவரும் உணவு உண்ணும் மேசையில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே சாப்பிட்டனர்...

வெயினியின் சித்தி திடீரென அழுது கொண்டே ஓடி வந்தாள்..." என்னாச்சு" என வெயினி கேட்க "காலைல பால்காரன் வரல... டீ வேணும்னு சுமி தான் அடம்பிடிச்சா... அப்போ நான் தான் அவளை பால் வாங்க அனுப்பினேன் ... போனவ இன்னும் வர காணோம்னு அவங்க அப்பா தேடி போனாரு.‌‌ அங்க போய் பாத்தா அவ செருப்பு ஒன்னு சிதறி கிடக்கு... பால் பக்கட் கீழே விழுந்து கிடக்கு.. சுமிய காணோம்" என ஊரை கூட்டும் அளவுக்கு அழுதார்

அந்த நேரம் பார்த்து வெயினியின் வீட்டு அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது‌.. வெயினி தான் எடுத்துப் பேசினாள் "ஹலோ இளவெயினி வீடா ?"எனக் கேட்க; "ஆமா "என்றாள்.. "நாங்க ஜிஎச்ல இருந்து பேசுறோம்.. மீனாவ தெரியுமா?" எனக் கேட்க; "ஆமா என் பிரண்ட் தான் சொல்லுங்க.. என்னாச்சு?" என்றாள்.. "அவங்க கண் முழிச்சிட்டாங்க ..உங்கள தான் வர சொல்றாங்க" என கூறப்படவும் "இதோ வரேன்" என்றவள், காலை கட் செய்து விட்டு கை கழுவிக் கொண்டு மீனாவைப் பார்க்க செல்லத் தயாரானாள்... "என் பொண்ணை காணோம்னு சொல்றேன்.. நீ! எங்க மினுக்கிட்டு போற" என சுமியின் அம்மா கேட்க; இதெல்லாம் என்ன ஜென்மமோ என்ற ரீதியில் அசோக்கும்,கவியும் சுமி அம்மாவை பார்த்து வைத்தனர்..." சித்தி! அதுக்கும் சேர்த்து தான் போறேன்.. எனக்கும் அவ மேல அக்கறை நிறையவே இருக்கு" என்ற வெயினி, "கவி நீ இங்க இருந்து ஆகுறத பாரு... நான் போயிட்டு எதுவும் பிரச்சினைனா அசோக் போன்ல இருந்து கூப்புர்ரேன்" என அசோக்குடன் பைக்கில் ஏறினாள்...

அசோக்கும் வெயினியும் செல்லும் சாலையில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளாகி சன நெரிசலாக இருக்க, மாற்று வழியால் வைத்திய சாலைக்கு சென்றான்.. செல்லும் வழியில் அவனது பைக் டயர் பஞ்சராகவும் பைக்கை நிறுத்த, எங்கிருந்தோ வந்த ஒரு உருளைக் கட்டை அவன் பின் தலையை தாக்க, அசோக் மயங்கி விழுந்தான்...

அசோக்! அசோக்! என வெயினி அலற ஒளிந்து நின்ற நான்கு தடியன்கள் வெயினியை இழுத்து கொண்டு காரில் ஏறி பயணமானார்கள்...
அவளுக்கு மயக்க ஸ்பிரே தெளிக்கவும் வெயினி மயங்கி விட்டாள்... மயக்கத்தில் இருந்து தெளிந்தவள் அருகில் சுமியும் மீனாவும் வாய் ,கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு மயங்கி கிடப்பதை அவதானித்தாள்... என்ன செய்ய என அறியாதவள் சத்தமிட முயன்று தோற்றாள்... அவளது வாயும் கட்டப்பட்டு இருந்தது..தங்களை அடைத்து வைத்த இடத்தை அவதானித்தாள்... காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக்கமாக இருந்தது..

பிறந்த நாள் பரிசாக வெயினிக்கு ருத்ரன் ஓர் மோதிரம் அன்பளிப்பு செய்திருந்தான்... அதில் சின்ன சின்ன முற்கள் போன்று தங்க கம்பிகள் நீட்டி கொண்டு இருந்தன... அதன் மூலம் வாயில் கட்டி இருந்த துணியை குத்தி, நீள் வாக்காக இழுத்து, அதை பிய்த்து, பற்களால் கை கட்டை அவிழ்த்து விட்டாள் ... மெதுவாக வாயில் கட்டியிருந்த மொத்த துணியையும் அவிழ்த்து விட்டு கால் கட்டுகளையும் அவிழ்த்தாள்..சுமி மற்றும் மீனாவின் கட்டுகளையும் அவிழ்த்து விட்டாள் ‌..

இருவரும் மயங்கி கிடந்தனர்.. "இந்த ரெண்டு லூசும் ஏதோ டூர் வந்த மாதிரி தூங்குது" என முணுமுணுத்துக் கொண்டே சுமியின் கன்னத்தை மெதுவாக தட்டினாள்... சுமியோ "அம்மா டீ தா" எனக் கேட்க, ஒரு அறை விட்டாள் வெயினி... "அம்மா" என அலற போக வெயினி அவளது வாயை கைகளால் பொத்தினாள்...

"ஏய்! சத்தம் போடாதே" என்று கூற "அக்கா......" என வெயினியை கட்டி கொண்டு, தன்னை கடத்தியது பற்றி கூறினாள் சுமி ... "எனக்கு தெரியும் விடு... " அங்க பாரு மீனா" என வெயினி காட்ட, "மீனாக்கா? அவங்க எதுக்கு? யார் இதெல்லாம் பண்றாங்க?" என சுமி கேள்வியாய் அடுக்க, வெயினி ரவி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொன்னாள்..." அப்போ இதெல்லாம் பண்றது ரவியா? ருத்ரன் மாமா தான் காப்பாத்தினாரா?" என சுமி கேட்டாள்...

"அப்றமா அத பத்தி முழுசா சொல்றேன்... இப்போ வா! மீனாவை பாப்போம் "என மீனா அருகில் வந்தாள் .... மீனா கைகளை தேய்த்து மெதுவாக கன்னத்தில் தட்ட மீனா கண் திறந்தாள்.. வெயினியைக் கண்டதும் அவளுக்கு மிகுந்த மகிழ்வு.. "வெயினி! இப்போ நான் எங்க இருக்கேன்" என மீனா கேட்க , "காலம் காலமா மயக்கம் தெளிஞ்சதும் இந்த கேள்வி கேக்றதை யாரும் விடலடா சாமி!"என சுமி சலித்து கொண்டாள்.. "கொஞ்சம் பேசாம இரு சுமி "என வெயினி அவளை அதட்டி விட்டு ‌‌. "நீ எப்டி மீனா இங்க வந்த? "என கேட்டாள்...

"நான் ஹாஸ்பிடல்ல கண் முழிக்கும் போது எசக்கி தான் எதிர்ல இருந்தான்... அவனை பாத்ததும் அவ்வளவு ஒரு சந்தோஷம்... அவனுக்கும் சந்தோஷம் தான்... கொஞ்சம் நேரத்துக்கு அப்பறம் 'இருமா நான் ரெஸ்ட் ரூம் போய்டு வாரேன்னு' சொன்னான்... நானும் சரினு தலையாட்டினேன்... அவன் போன பிறகு பின்னாடி இருந்து யாரோ வாய பொத்தினாங்க... மூஞ்சில ஏதோ தெளிச்சாங்க... நான் மயங்கிட்டேன்... கண் திறந்தா நீ! நிக்கிற " என்றாள் மீனா... வெயினிக்கு புரிந்து விட்டது இதெல்லாம் சதி வேலை என்று...ரவி தான் அனைத்தும் செய்துள்ளான் என எண்ணினாள்...

அங்கு தெருவில் மயங்கி கிடந்த அசோகை வழியில் வந்தவர்கள் ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தனர்... மயக்கம் தெளிந்ததும்
கவிக்கு கால் பண்ணிய அசோக் நடந்ததை கூற கவி பதற்றமடைந்தான்.. ருத்ரன் இருந்திருந்தால் நடக்கும் சம்பவமே வேறு... எவ்வாறு இதை கையாள்வது என தெரியவில்லை அவர்களுக்கு... கவி சுமியின் தாயிடம் நடந்ததை கூறும் போது வீட்டு வேலைக்கார பெண் இதை கேட்டு விட்டாள்... உடனே அவள் ருத்ரனுக்கு கால் செய்து நடந்ததை கூறினாள்... அங்கு என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை... அந்த பெண் அவசரமாக தோட்ட வேலை பாக்கும் ஆணையும் கூட்டி கொண்டு வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள்....

அந்த வேலையாட்கள் இருவரும் போய் நின்ற இடம் ரவியின் வீடு.... அங்கு யாரும் இல்லை... இது எதிர் பார்த்த ஒன்று தான்... அவளும் அவள் கணவனும் பின் பக்க மாடி வழியாக மேலே ஏறி வீட்டுக் கதவைத் திறந்து அங்கு எதுவும் ஆதாரம் கிடைக்கிறதா? என பார்த்தனர்... கடைசியாக அங்குள்ள ஓர் அறையில் ஊருக்கு புறம்பாக கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றின் முகவரி கிடைத்தது. ‌ அத்தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளி வருவதால் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது.. ருத்ரனுக்கு இது தெரியப்படுத்தவும் அவன் தனியாளாக அவ்விடத்திற்கு சென்றான்....

தன் உயிரையும், உயிரானவளையும் மீட்க தன் ஆவி துறக்க துணிந்து விட்டான் அவன்.. அங்கு போனதும் அவ்விடம் துர்நாற்றமாக இருந்தது..பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொழிற்சாலையில் எங்கு சென்று வெயினியைத் தேடுவது என தத்தளித்தான் ருத்ரன்... மாஃபியா தலைவன் மனமுருகிய தருணம் அது... பின்னிருந்து ஒரு குரல் கேட்டது யாரென்று பார்க்க எசக்கி நின்றிருந்தான்... "நீ! இங்க என ருத்ரன் கேட்க "மீனாவைத் தேடி வந்தேன்.. அவளையும் கடத்திட்டாங்க "என உடைந்து அழுதான் எசக்கி...

"சரி வா தேடலாம்" என ருத்ரன் அழைக்க; "அந்த பக்கம் யாரோ ஓடுர மாதிரி தெரியுது.. வாங்க சார் பாக்கலாம்" என எசக்கி அவசரமாக ருத்ரனை அழைத்து சென்றான்...

அங்கு சென்று பார்த்தால் மீனா, சுமி, வெயினி மூவருக்கும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டு ,கைகள் பின்னால் கட்டப்பட்டு ,ஆளுக்கொரு நாற்காலியில் தூக்கு கைதிகள் போல் நிறுத்தப்பட்டிருந்தனர்...

தொடரும்..
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -22)
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top