இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
ருத்ரனிடம் வேலை செய்த பெண்ணின் சடலம் போலீசாரால் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு ,அவளது கணவனையும் உடன் ஏற்றி நகரத்தின் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது ..போலீஸ் சென்ற பிறகு ருத்ரன் "அசோக் வண்டிய எடு வெயினிய பாக்க போகலாம் "என கூறினான்... போகும் வழியில் கவிக்கு அழைப்பு விடுத்து எங்கு வெயினி அனுமதிக்கப்பட்டுள்ளாள் என அறிந்து கொண்டு அவ் வைத்தியசாலைக்கே சென்றனர்... ருத்ரன் மயங்கும் தருவாயில் இருந்தான் அதிக இரத்தம் வெளியாகி இருந்தது..
முதலில் ருத்ரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது ... பின்னரே அவனை வெயினியைப் பார்க்க அனுமதித்தனர்.. கொடியில் இருந்து வீழ்ந்த மலராக வெயினி வாடி வதங்கி கிடந்தாள்.. கவி, மீனா ,சுமி ,சுமியின் பெற்றோர் என அனைவரும் நின்றனர்..
வெயினி கண் திறக்கவில்லை.. ருத்ரனுக்கு அவளை கண்டதும் மனது ரணமானது.. அவளது கையை பிடித்து மிருதுவாக வருட அவள் விழிகள் மலர்ந்தது.. "ஈஸ்வர்" என்ற கேவலோடு அவனை அனைத்து கொண்டாள்.. "ஈஸ்வர்! ஈஸ்வர்! அவங்க வயித்துல அடிச்சாங்க தானே நம்ம.... நம்ம... பாப்பா போச்சு" என தேம்பினாள்... ருத்ரன் இது எதிர்பார்த்த ஒன்று தான்..
" ஓகே யினி ரிலாக்ஸ்! பிளீஸ்!" என அவளது முதுகை வருடி படுக்க வைத்தான் ருத்ரன்... டாக்டர் வந்து அவளுக்கு ஊசி போட்டதும் சற்று நேரத்தில் வெயினி தூங்கி விட்டாள்...அவளது அழுகை, தவிப்பு, தன்னால் பூத்த உயிரின் உதிர்வு என ருத்ரன் மன வேதனையில் இருந்தான்... எதையும் வெளியே காட்டுபவனா அவன்?
"சரி நான் போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு, ப்ராப்பரா எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன்" என எழுந்து வெளியே செல்ல கார்ட்ஸும் கூடவே புறப்பட்டார்கள்... நிதானமாக திரும்பிய ருத்ரன்" இப்போ எனக்கு ஆட்கள் தேவல.. வெயினிக்கு பாதுகாப்பா நில்லுங்க" என கூறி விட்டு, வெளியே வந்த சுமியின் அம்மாவை பார்த்து அருகில் அழைத்தான்.. யாரும் பார்க்கா நேரம் நெற்றியில் துப்பாக்கி முனையை வைத்தான்...
சுமியின் தாய்க்கு ஹக்கீஸ் கட்டாத ஒன்று தான் குறை..."நீ! வெயினிக்கு என்ன என்ன வார்த்தை விட்டனு ஃபுல் டீடைல்ஸ் எனக்கு தெரியும்.. இனியும் ஏதாவது அட்டூழியம் பண்ண நினச்ச பொட்டுனு போட்ருவேன்... பட்டுனு போய்டுவ" எனக் கூறியவன் "கார்ட்ஸ்" என கை தட்ட ஆஜனபாகு போல ஒருத்தன் ஓடி வந்தான்.. "சார்" என சல்யூட் அடித்து நிற்க ,"இந்த லேடி வெயினி அறை வாசலுக்கு கூட வர கூடாது.. காட் இட் "என சுமியின் தாயை காட்டி கர்ஜிக்க "ஓகே சார்" என்றான் அந்த ஆறடி மனிதன்....
ருத்ரன் போலீஸ் ஸ்டேஷன் சென்று அனைத்தையும் முடித்து விட்டு வெயினியை வீட்டிற்கு அழைத்து வந்தான்... ரத்னா அக்கா, மீனா, கவி, சுருதி என அனைவரும் வெயினியுடனே அவளது வீட்டில் இருந்தனர்.. வெயினியைப் பார்க்க சுருதி வந்திருந்தாள்... அனைவருக்கும் அவளை கண்டதும் மிகவும் மகிழ்ச்சி...அதே போல் அவளும் சந்தோஷமான செய்தியைத் தான் சொன்னாள்... "அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் தான் ஊரில் இல்லை.. சித்த மருத்துவம் பார்க்க சென்றதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை ...நடந்நது அனைத்தும் ஊரிற்கு வந்த பிறகு நேற்று தான் அறிந்து கொண்டேன்.. ஸ்டீவ் ஸ்கூபா டைவிங்கில் தெரிவாகி வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு சென்று விட்டான்"... என சுருதி கூறிக் கொண்டே போக"இது தான் இவ்வளவு நாளும் நீ தலை மறைவா இருந்த காரணமா அக்கா?" என கவி கேட்க எல்லோரும் சிரித்தனர்...
மேலும் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது ..."அனைவரும் வர வேண்டும்" என்றும் அன்புக் கட்டளை விதித்தாள் சுருதி.. "மாப்பிள்ளை யாரென்று" ரத்னா அக்கா கேட்க "மாமா மகன்" என்றாள்...கவி மிகவும் சோகமாக இருந்தான்... "ஏன்டா! இப்டி இருக்க? "என வெயினி கேட்க "பேஸ் புக்ல மகா! மகா!னு ஒருத்தங்க கிட்ட பேசினேன்... கடைசில பாத்தா அது மகாலிங்கம்" என தலையில் துண்டை போட்டுக் கொண்டு கூற எல்லோரும் சிரித்தனர்..
மீனா முகத்தில் சிரிப்பு மறந்து போய் இருந்தது ..அனைவருக்கும் காரணம் தெரிந்தும் செய்ய ஏதுமில்லை என்று இருந்தனர்... சுருதியின் திருமண நாளும் வந்தது.. வெயினி முன்னை விட சற்று பூசினால் போல் இருந்தாள்... இவள் ஆடி, ஓடி வேலை செய்வதையே ருத்ரன் பார்த்துக் கொண்டு இருந்தான்... அருகில் வந்த கவி ஒரு துண்டைக் கொடுத்து "வழியுது" என கூறி விட்டு சென்றான்... "இவனுக்கு முதல்ல ஒரு பொண்ணை பாக்கனும்.. எப்ப பார்த்தாலும் யினி பின்னாடியே சுத்துறான்" என கருவினான் ருத்ரன்..
"எங்க இவ ஆள காணோம்.. கண் முன்னாடி தானே ஓடினா" என்று வெயினியைத் தேடிக் கொண்டு ருத்ரன் செல்ல ;அங்கு சுமி, அவள் அம்மா, வெயினி ,அசோக் மற்றும் கவி என வளைத்து நின்றனர்... சுமியின் தாய் அசோக்கை திட்டுவது ருத்ரனின் காதில் கேட்டது.."படிச்ச வசதியான வீட்டு பொண்ணுனா நாக்கை தொங்க போட்டு வந்துடுவாங்க இந்த மிடில் க்ளாஸ் பசங்க.. வளக்கும் போதே ஆத்தா, அப்பன் சொல்லி சொல்லி வளர்ப்பாங்க போல" என பேச ருத்ரன் எதிரில் வந்து நின்றான்..
"கொஞ்சம் எல்லாரும் போங்க ... நான் சின்ன அத்தை கிட்ட முக்கியமா பேசனும்" என கூறிய ருத்ரன் சுமியின் அம்மாவை தனியாக அழைத்து சென்று, "யாருக்கு பணம் மேல ஆசைனு சொல்றீங்க! ரவி தந்த அஞ்சு லட்சத்துக்கு ஆசைப்பட்டு தானே நீங்க வெயினிய ரவிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு முடிவு பண்ணீங்க... அப்படிப்பட்ட நீங்க அசோக்கை பார்த்து பணத்துக்காக நாக்க தொங்க போட்டு வந்துருவீங்கனு சொல்றீங்களா? அன்னைக்கே ஹாஸ்பிடல்ல வெச்சி உன்ன நான் வார்ன் பண்ணினேன்.. ரொம்ப பேசாத அப்படியே சொருகிடுவேனு ... என்ன சொல்றா? சுமிக்கும் ,அசோக்குக்கும் கல்யாணம் பண்ணி வைப்போமா? இல்லையா?" என ருத்ரன் கேட்க கதிகலங்கிய சுமியின் தாயோ' அனிச்சையாக தலை அசைத்தார் சம்மதம் என்று....
எங்கே தனது தாய் வேண்டாம் என சொல்லிவிடுவாரோ என்று தயங்கி நின்ற சுமிக்கு ,ருத்ரனின்" உங்க அம்மாக்கு சம்மதம்" என்ற வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது... வெயினி ஏதோ ஒரு வழியாக "சுமியின் காதலுக்கு சித்தி பச்சை கொடி காட்டிவிட்டார்" என மிகுந்த சந்தோஷமாக இருந்தாள்..
ஐயர் மந்திரம் கூறி "நாழி ஆகிட்டு பொண்ணை அழைச்சினு வாங்கோ"என்ற டயலாக்கை அச்சு பிசகாமல் கூற, " யோவ் ஐயரே! சிங்கிள்ஸ் சாபம் உன்னை சும்மா விடாது" என கருவினான் கவி... இவனது அத்தனை நடவடிக்கைகளையும் இரு விழிகள் அழகாக படம் பிடிப்பது இவன் அறியாதது தான் சோகம்...
சுருதியின் கழுத்தில் அவளது மாமன் மகன் பிரகலாதன் மங்கள நாணை சூட்ட இனிதே திருமணம் நிறைவேறியது... தம்பதியர் திருமணம் முடிந்த கையோடு தேன் நிலவு கொண்டாடிட வெளிநாட்டு பயணமொன்றை தன் மனைவியின் தோழி என்ற வகையில் ஏற்பாடு செய்திருந்தான் ருத்ரன்...
அனைத்து சடங்குகளும் நிறைவேறிட அவுஸ்திரேலியா பறந்தனர் சுருதியும் அவள் கணவனும்..."கவி எங்க காணோம்.. வீட்டுக்கு போக லேட் ஆச்சு" என வெயினி தேட "பக்கத்துல புருஷன் நிக்கிறேன்.. நீ அவனை தேடுற.. முதல்ல அவனை நாடு கடத்தனும்" என மூக்கில் புகை விட்டான் ருத்ரன்...
மீனாவும் ரத்னா அக்காவும் முதலிலேயே வீட்டுக்கு சென்று விட்டனர்..
கவி சோகமாக வந்து வண்டியில் ஏறினான்..." டேய் கவி என்னாச்சு!" என வெயினி கேட்க..."வா வீட்டுக்கு போய் சொல்றேன்" என்றான்... "என்னாச்சு இவனுக்கு? இஞ்சி திண்ட குரங்கு மாதிரி மூஞ்சி தொங்கி போய் இருக்கு" என வெயினி கூற; "அவன் மூஞ்சி எப்போவும் அப்படிதான்" என்றான் ருத்ரன்.. அதைக் கேட்ட கவி "ஆண்டி! அங்கிள் வாய கொஞ்சம் அடைக்கிறீங்களா?" என்றான்..
"பாரு யினி! அவன் கொழுப்பை" என்றான் ருத்ரன்..
முன்பை விட ருத்ரன் நிறையவே மாறி இருந்தான் .. எல்லோருடனும் சகஜமாக பேச பழகி இருந்தான்.. வீடு வந்து சேர்ந்தார்கள் அனைவரும்... ஹாலில் மீனாவும், ரத்னா அக்காவும் காத்துக் கொண்டிருந்தனர்...
காரில் இருந்து இறங்கியதும் வெயினி கவியைப் பிடித்துக் கொண்டாள்.."சொல்லு என்னனு... ஏன் இப்டி இருக்க ?" எனக் கேட்க தன் சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான் கவி... " என்னடா! இது ?" என பிரித்து படித்த வெயினி கடைசியில் வயித்தை பிடித்துக் கொண்டு சிரித்து சோஃபாவில் வீழ்ந்தாள்....
"அன்புள்ள ஐத்தான் கவி! .. நீங்க பல வருஷமா தேடுற தொலை தூர காதலி எழுதுறேன்... உங்க மேல ரொம்ப லவ்சா சுத்துறேன்... உங்க கலரு என்னை கவருது..முடில நரை விழுந்தாலும் உங்க மனசுல கரை விழாது..ஐ லவ் யூ ஐத்தான்...💋"என இருந்தது அந்த கடதாசியில்....இதைப் பார்த்த மீனா பல மாதங்களின் பின் மனம் விட்டு சிரித்தாள்....
"என்னடா? யார்ரா இது ?" என வெயினி கேட்க "எனக்கென்ன தெரியும்... ஒரு குட்டி பொண்ணு கொண்டு வந்து கொடுத்துட்டு போய்டா...அதுல என் பேரு மட்டும் இல்லைனா... நான் தூக்கி போட்ரிப்பேன்" என கவி வருத்தமாக கூற ருத்ரன் சிரித்தான்.. அவன் சிரிப்பதையே எல்லோரும் ஆவென பார்த்தனர்... இவனுக்கும் சிரிக்க தெரியுமா? என எண்ணினர்...
"மீனா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என ருத்ரன் கூற, "சொல்லுங்க" என அவள் அமைதியாக இருந்தாள்.."உன்னை ஒருத்தருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னை கட்டிக்க ஆசை படுராரு... உன்னை கேக்காம நான் எதுவும் சொல்லல.." என ருத்ரன் பேச, நான் இங்க இருக்றது பிடிக்கலனா போயிடுறேன்.. பிளீஸ் இத பத்தி பேசாதீங்க" என எழுந்து சென்றாள்..
வெயினி ருத்ரன் கையை அழுத்தி பாத்துக்கலாம் என கண்களை மூடி திறந்தாள்...அனைவரும் உறங்க சென்றனர் ...
அடுத்த நாள் காலை பல அதிர்ச்சிகளோடு புலர்ந்தது..கவி தான் முதலில் கண் விழித்தான்... அறையில் இருந்து வெளியே வந்தவன் ஒரு இளம் பெண் ருத்ரன் வீட்டு தோட்டத்தில் உலாவுவதைக் கண்டான்...உடனே கீழே வந்து அவளை மடக்கி பிடித்து "யார் நீ!"என கேட்க; "தம்பி அவ என் பேத்தி ஊர்ல இருந்து வந்து என் கூட தானே தங்கி இருக்கா" என பின்னால் இருந்து சமையல் செய்யும் பாட்டியின் குரல் கேட்டது ...
தொடரும்...