Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -25) இறுதி பாகம்

Joined
May 18, 2024
Messages
29
"ஓஓஓ உங்க பேத்தியா நான் கண்டதே இல்லையே "என கவி கூற; "பின்னாடி தோட்ட வீட்ல இருக்றதால நீங்க பாத்து இருக்க மாட்டீங்க தம்பி" என்றார் பாட்டி...

"சீக்கிரமா வா" என தன் பேத்தியைப் பார்த்து சொல்லி விட்டு சென்றார் பாட்டி... அவளும் சாமி கும்பிட வேண்டிய மலர்களை பறித்து கொண்டு செல்ல அவள் பின்னாடியே கவி மனதும் சென்றது..தலையை சிலுப்பிக் கொண்டு கவி வீட்டினுள் நுழைய ருத்ரனைத் தான் எதிர் கொண்டான்.. "என்ன இந்தாளு மலை போல நிக்கிறான்" என கவி நினைக்க, "என்ன சைட் அடிச்சு முடிஞ்சா?" என கேட்டு வைத்தான் ருத்ரன்..

"ஐயோ நாம பாத்தது இவருக்கு தெரிஞ்சிட்டு போல" என மனதில் நினைத்தவன் "நான் ரொம்ப ரொம்ப நல்லவன் தெரியுமா?" என கவி கூற; அவனை மடக்கி பிடித்த ருத்ரன் "என் பொண்டாட்டி பின்னாடி சுத்ரத விட்டு வேற பொண்ணை பாரு" என கூற "மாட்டேன்னா என்ன பண்ணுவீங்க மிஸ்டர்" என கவி எதிர் கேள்வி கேட்டான்... அப்போ சரி என கவியை விட்ட ருத்ரன் ,"உனக்கு கடிதம் கொடுத்த பொண்ணு யார்னு எனக்கு தெரியும்... ஆனா சொல்ல மாட்டேன்" என்றான்..

"ஐயா சாமி அறியா புள்ள தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடு!.." என கவி கதற பின்னாடி நின்ற வெயினி சிரித்தாள்.. "வெயினி நீயும், உன் புருஷன் கூட சேர்ந்து சதி வேலை பண்றியா?" என கவி பாவமாக மூஞ்சை வைத்து கொண்டு கேட்க "நானா? உனக்கா? அதெல்லாம் பண்ணுவேனாடா" என வெயினி பதில் கேள்வி கேட்க "கண்டிப்பா நீ பண்ணுவ.. ஏன்னா நீ இப்போ என் வெயினி இல்லை... அந்த அங்கிள் பொண்டாட்டி" என்றான் கவி ...

எங்கே நின்றால் ருத்ரன் உதைப்பானோ என்ற எண்ணத்தில்"சரி நான் போறேன்" என கவி கிளம்ப அவனை கை பிடித்து நிறுத்திய வெயினி "இப்போ நீ பேசினியே அவ தான்" என்று சொன்னாள் வெயினி....

கவி மயக்கம் போட்டு விழுந்து விட்டான்... "ஐயோ ஈஸ்வர்! கவி மயங்கிட்டான் "என அவள் கத்த "விடு சாவட்டும் "என்றான் ருத்ரன்..."இருந்தாலும் உன் புருஷனுக்கு எனக்கு வாய்க்கு அரிசி போட ரொம்ப தான் ஆசை.. அந்த ஆளு கையால அட்சதை அரிசி தூவ வைக்கிறேன் பாரு" என கவி சிலுப்பிக் கொண்டு சென்றான்...

கவி போய் நின்ற இடம் பாட்டியின் வீடு தான்.." பாட்டி! பாட்டி!" என அவன் அழைக்க உள்ளிருந்து அவள் குரல் இசைத்தது.... "பாட்டி இல்லை கோயிலுக்கு போய்டாங்க".. "சரி பாட்டி வந்தா சமைக்கனும்னு வர சொல்லு... இந்தாமா பொண்ணு! நீயும் வா இன்னைக்கு என்னை மாப்ள பாக்க வாராங்க... நிறைய பேருக்கு சமைக்கனும்" என கவி கூற உள்ளே இருந்த அவள் வேகமாக வெளியே வந்தாள்...

கவி சிரித்து கொண்டு அமைதியாக நிற்க வந்தவள் அவன் கழுத்தில் அரிவாள்மனையை வைத்தாள்.... கவி மிரண்டு விட்டான்.. உனக்கு கடிதம் கொடுத்தது நான் தான் என்னை தவிர எவளையும் ஏறெடுத்துப் பார்த்தனு வை!, உன்னை கொன்னுட்டு" என அவள் பேசும் போது இடை மறித்த கவி," நீயும் செத்துடுவியா?" என்றான்...

" எதேய் நான் சாகனுமா? கிராமத்துக்காரினா தேன்மொழி, கவிமொழினு நினைச்சியா என்னை நீ!B.A English literature.."என அவள் சொல்ல, "அப்படியா" என்று ஒரு மார்க்கமாக சிரித்தவன் அவளது கனி இதழை களவாடிக் கொண்டான்.."ஆஆஆ கிஸ் பண்றேன்னு ஏன் டா கடிச்சு வெச்ச" என அவள் கேட்க "வேணும்னா இன்னொரு வாட்டி பண்றேன் வா" என்றான் கவி...

அவள் அரிவாள்மனையை தூக்கி காட்டி விட்டு எழுந்து செல்ல "ஹேய் பேரென்ன சொல்லு" என்றான் கவி.... திரும்பி பார்த்து சிரித்தவள் "விதுஷிகா" என்றாள்..." ஐஐஐ! செம்ம மாடர்னா இருக்கே பேரு.... கைப்புள்ள உன் எதிர்காலம் ஒளிமயமா விளங்குது" என குத்தாட்டம் போட்டான் கவி...

மீனா அமைதியாக கடலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்... துரத்தும் நினைவுகளை தூரமாக விரட்ட வழி தேடினாள்.. கடலின் பரதத்தை ரசித்தவளது கையைப் பற்றியது ஓர் கரம்...உணர்வுகளின்றி இருந்தவளுக்கு இதமான தொடுகை அது... மென்மையாக திரும்பியவள் முகத்தில் பேரதிர்ச்சி... ஒரு வருடத்திற்கு மேலாக எவன் இனி பூமியில் இல்லை என்று நினைத்து வாழ்ந்தாளோ அவன் கண்ணெதிரே நிற்கிறான்...

விழிகளில் நீர் திவலை திரள மீனா பிம்பத்தை தடவினாள்... காற்றில் கரையவில்லை... சட்டென எழுந்தவள் "யார் நீ !"எனக் கேட்டாள்.. "கூல்! கூல்! ரிலாக்ஸ்" என கூறியவன் அவளை அழைத்து சென்று நிழல் ஓரமாக உட்கார வைத்தான்.. "என் பேரு இசை.. நான் பிஸ்னஸ் பண்றேன்... ஆறு மாசமா உங்க பின்னாடி வரேன்.. உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசை பர்ரேன்.." என கூற அவனின் "இசை" என்ற பெயர் மட்டுமே அவள் செவியில் புகுந்தது ..எசக்கிக்கு இவளாய் வைத்த செல்லப் பெயர் தான் இசை... ஆனால் இன்று இசை என்ற பெயரில் ஒருவன் நிற்கிறான்... உருவம் ஒன்று தான் எனினும் தான் நேசித்தவன் இவன் இல்லை என அவள் மனது வலித்தது....

அவள் அருகில் வெயினி வந்தாள்..."நீ! இங்க என்ன பண்ற "என மீனா வெயினியிடம் கேட்க "வா கொஞ்சம் பேசணும்" என மீனாவை அழைத்தவள்; "நில்லுங்க இசை வரேன்" என அவனிடம் கூறி விட்டு மீனாவை தனியாக கூட்டி சென்றாள்..

மீனாவை ஓரிடத்தில் நிறுத்திய வெயினி "இசை ஈஸ்வரோட பிஸ்னஸ் பார்ட்னர்... ஆறு மாசம் முன்னாடி நம்ம வீட்ல உன்னை பாத்து பிடிச்சு போய்ட்டு.. அதை ஈஸ்வர் கிட்ட சொல்லி இருக்காரு... அதை தான் நைட் ஈஸ்வர் உன் கிட்ட சொல்ல வரும் போது நீ கேக்காம எந்திரிச்சு போய்ட்ட.. ரொம்ப நல்ல பையன் மீனா" என இசை பத்தி வெயினி கூற; " என்னால எசக்கி இடத்தில யாரையும் வெச்சு பாக்க முடியாது" என்றாள் அவள்...

"மீனா ஒரு மனிசனுக்குள்ள நல்லது, கெட்டதுனு ரெண்டு முகம் இருக்கும்... அதுல கெட்டது அழிஞ்சு நல்ல முகத்தோட எசக்கி உன் இசையா வந்து நிக்கான்... அவனை கஷ்டப்படுத்தி அவன் முகம் வாடினா உன் மனசு ஏத்துக்குமா? "என வெயினி கேட்க மீனா அமைதியாக நின்றாள்... "பிளீஸ் புரிஞ்சுக்க!" என்று வெயினி கூறினாள்...

ஆறு மாதங்களின் பின் இசை மீனாவின் திருமணம் ஊரிலேயே மிகவும் பெரிய மண்டபத்தில் கோலகலமாக நடந்தது...
கவி ஒரு ஓரமாக நின்று சோக கீதம் இசைத்தான்... என்னவென்று கேட்டதற்கு விதுஷிகாவிற்கு மேற்படிப்பு முடிய இன்னும் மூன்று வருடங்கள் ஆகும் என்பதால்" திருமணமும் மூன்று வருடங்கள் கழித்து தான்" என அவள் கராராக கூறிவிட்டாள்... மூன்று முடிச்சுகளும் இசையே இட்டான்... மீனா மனமுருகி கடவுளை எண்ணி அவனை மணவாளனாய் ஏற்றாள்....

அசோக் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வருகை தந்திருந்தான்... சுமியின் குறும்பு தனத்தால் அசோக்கின் வீட்டினர் மனதில் நீங்கா இடம் கொண்டாள் அவள்... சுமியின் பெற்றோர் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாய் ருத்ரன் சொற்படி ஆடினர்...

இரவு மீனா ,இசையின் சடங்கிற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டது... பெண்கள் எல்லோரும் ஓர் அறையில் மீனாவை தயார் செய்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்...

"என்னமா மீனா நீயும் இந்த சுருதி மாதிரி சேலைய தொடாத.. பேட் டச் பண்ணாதனு.. காலைல பூ கூட கசங்காம பிரஷ்ஷா வருவியா?" என வெயினி கேட்க "அவ அதுல எல்லாம் கில்லாடி கரெக்டா முடிப்பா.. சரி தானே மீனா" என சுருதி சொன்னாள் ...கேலியும், கிண்டலுமாக குறித்த நேரத்திற்கு மீனா முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டாள்.. சடங்கு நிமித்தமாக இசையின் காலில் விழ," இதெல்லாம் வேணாம்" என்று அவன் தடுத்து விட்டான்...

அன்று கடற்கரையில் வைத்து வெயினி சொன்னதும் உடனே மீனா ஏற்கவில்லை... இசையின் நற்பண்புகள் தான் அவளை சம்மதிக்க வைத்தது... இன்று இல்லற வாழ்வில் இருவரும் இன்பம் காண வழி வகுத்தது...

தக்க ஆதாரங்களுடன் வெயினி குற்றமற்றவள் என நிரூபிக்கப்பட்டாள்... அவள் கண்டுபிடித்த தொல்பொருட்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ,அவளது துறைசார் உயர் விருது வழங்கப்பட்டது.. ரவியின் குற்ற செயல்களுக்கு அவனது பெற்றோர் உடந்தையாக இருந்ததால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது... வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்களை கடந்து, எடுத்த செயலில் வெற்றியடைந்து, உடன் சார்ந்தோருக்கு கடமைகள் புரிந்து, இன்று ருத்ரனின் கைச் சிறையில் சிக்குண்ட மலர் தாராய் வெயினி நிற்கிறாள்...

"இன்னைக்கு என்ன சொல்லியும் நீ எஸ்கேப் ஆக முடியாது" என ருத்ரன் பேச அவனது முகம் பார்த்து மீசை திருகி சிரித்தாள் வெயினி... "வெயினி காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு உன் கிட்ட தான் அறிஞ்சேன்.. இன்னைக்கு என் காதலோடு சேர்ந்த காமப்போர ஒன்னு உன் கூட ஆரம்பமாக போகுது என்று முதல் அடி அவனே எடுத்து வைத்தான்...

முத்தத்தில் பல வித்தைகள் புரிந்து.. மெல்லிடையாள் மேனியில் நூலாடை கூட பாரமே என்று அத்தனைக்கும் விடுதலை அளித்தான் அவன்...யினி என்னும் தன் இனியவள் சரீரம் தன் எடை தாங்குமோ என்று தன் மேல் அவளை கிடத்தி ஆட் கொண்டான்...இடுப்பிற்கு கீழ் இயங்கும் போதெல்லாம் யினி! யினி! என மூச்சிரைத்து மோட்சம் கண்டான்....

ஏறு போல் உள்ளவன் இன்று தன்னிடம் மகவுவாய் மாறி... கூடலில் வஞ்சியவளை கொஞ்சி கனி இரண்டும் உண்டு களித்து...வலிக்குமோ என ஐயம் கொண்டு மருந்தும் அவனே இட்டு காதலும் காமமும் கலந்த கூடலின் இன்பத்தை வெயினிக்கு அளித்து கொண்டிருந்தான் ருத்ரேஷ்வரன்..

அதிகாலை வரை அவளை அயராது புசித்தான்... போஜனம் அவளாய் இருக்க அவனோ அளவு கடந்து உட்கொண்டான்..நிலவு கூட வெட்கி இருப்பிடம் விட்டு தூர போனது.. தளிர் மேனி சேர ஆடைகள் அவசரம் கொண்டது.. எனினும் அவனே அவளுக்கு ஆடையாகவும்...பஞ்சணையாகவும் மாறி பளிங்கு அவளை பாந்தமாய் நெஞ்சணைத்து உறங்கினான்...

இரண்டு வருடங்களுக்கு பிறகு "டேய்! உன் அப்பனை மாதிரியே இருக்கியே.. டேய்!ஏன்டா படுத்துற .." என ருத்ரன் வெயினி தம்பதிகளின்"விகாஸ், ரியாஸ்" எனும் இரட்டை ஆண் குழந்தைகளோடு செல்ல சமர் புரிந்தான் கவி..

அவனது பேச்சைக் கேட்டவாறே வெயினி, ருத்ரன், சுமி, அசோக்,மீனா,இசை,சுருதி, பிரகலாதன் என அனைவரும் சிரிக்க "மிஸ்டர் கவி வெயினி அக்கா இப்போவும் மூனு மாசம் .. சோ உங்க ஆயா வேலைக்கு முடிவே கிடையாது " என குழந்தைகளுக்கு பால் பாட்டிலை கவியிடம் நீட்டியபடி விதுஷிகா கூற "எதேய்" என்றான் கவி..

சிரிப்பும், சந்தோஷமும் என அவ்விடம் நிறைவாய் இருந்தது...
( என்னுரை - இந்த தளத்தில் எழுத ஊக்குவித்து வழி காட்டிய 🤓 உள்ளத்திற்கு என் நன்றிகள் உரித்தாகட்டும் 😉)

முற்றும்.
 

Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி (அத்தியாயம் -25) இறுதி பாகம்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top