இராவணச்சி
New member
- Joined
- May 18, 2024
- Messages
- 29
எல்லோரும் உணவு உண்டு கொண்டே இந்த ப்ராஜெக்ட் பற்றி அதிகம் பேசிக் கொள்கையில் ;மீனு தான் முதல் கேள்வி கேட்டாள்.. "ஏன் டி இத லெமூரியா கண்டம்னு சொல்றாங்களாமே அப்போ இது குமரிக் கண்டமா ? இல்லை லெமூரியா கண்டமா?" என கேட்க அவளை அண்ணார்ந்து பார்த்த கவி "நீ எப்போ இவ்வளவு அறிவா யோசிக்க ஆரம்பிச்ச" எனக் கேட்டான்.. மீனா கவியை முறைக்க ரத்னா அக்கா "அட சும்மா இருங்கபா; வெயினி நீ சொல்லுமா?" என்றார் அவர்... மீனா கவிக்கு பழிப்புக் காட்டினாள்... இதைப் பார்த்து சிரித்துக் கொண்டே வெயினி கூறத் தொடங்கினாள்...
"மடகாஸ்கர் ,இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இது மூன்றையும் சேர்த்த மாதிரி வரையப்பட்ட கடலுக்கு அடியில இருக்ற நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்" என அவள் கூற; "எவ்வளவு பெரிய நிலப்பரப்பு" என்றான் ஸ்டீவ்.. "யூ கௌசிக் இடைல பேசாம வாய மூடு ...எங்க அக்கா பேசும் போது இடைல யாரும் பேசினா அவ சொல்ல வர்ரது மறந்துடும் சீ இஸ் எ பேஷண்ட் "என்றால் சுமி ..."ஒரு விஷயத்தை உருப்படியா பேச விடுதுங்களா நீ மேல சொல்லுடா" என்றான் எசக்கி... தலையாட்டிய வெயினி" இது மூன்றையும் சேர்ந்த நிலப்பரப்பு தான் நாம் கூறும் குமரிக் கண்டம்...
"1864 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த விலங்கியலாளர் பிலிப் ஸ்கேட்லர் னு சொல்ற ஒருத்தர் உலகில் வாழ்ந்து அழிந்து போன லெமூர் னு சொல்லப்படுற ஒரு வகை குரங்குகளோட படிமங்கள கண்டுபிடிச்சார்.... இதுல சுவாரஸ்யம் என்னனா அந்த படிமங்கள் மடகாஸ்கர், இந்தியாவின் தென் முனை மற்றும் அவுஸ்திரேலியால கிடைச்சது தான்..." என வெயினி கூற "அக்கா மடகாஸ்கர்னா ஆபிரிக்கால தானே? அங்கதான் அதிக விலங்குகள் இருக்கே..." என தன் ஐயத்தை சுமி முன் வைக்க; "உனக்கும் மூளை இருக்கு பாரேன்" என கவி சுமியை வம்பு செய்தான்...
இதெல்லாம் கண்டு கொள்ளாமல் வெயினி மேலும் தொடர்ந்தாள்... "ஆபிரிக்க நிலப்பகுதியில் மடகாஸ்கர் ஒரு அங்கமாக இருந்தாலும், அங்கு இந்த படிமங்கள் கிடைக்கவில்லை... மடகஸ்காரில் மட்டும் தான் கிடைத்தது ...அது பற்றி தான் பிலிப் ஸ்கேட்லர் மடகஸ்காரின் பாலூட்டிகள் என்கிற தன் நூலில் தெளிவாக விளக்குகிறார்... இந்த லெமூர் குரங்குகளோட எச்சங்கள் கிடச்சதால தான் இந்த நிலப்பரப்புக்கு லெமூரியானு பேர் வெச்சாங்க... இத தமிழ்ல எழுதும் போது உயிர் எழுத்து சேர்த்து இலெமூரியானு சொல்ல ஆரம்பிச்சோம்.. அப்பறம் தான் இத குமரிக்கண்டம்னு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் அடையாளம் கண்டு கொண்டாங்க......
" அட இவ்வளவு விஷயம் இருக்கா?" என சுருதி கேட்க; "ஆமா சுருதி 1903 ல பரியமார் கலைஞர் என்கிற ஒருத்தர் தமிழ் மொழியும் வரலாறும் எனகிற தன்னுடைய நூலில் முதல் முதலில் குமரி நாடு என்கிற சொல்லை பயன்படுத்தினாரு... அப்டியே அது பிற்காலத்தில் குமரிக்கண்டம் எனப்பட்டது..." என அவர்களின் பேச்சு உணவோடு சேர்த்து அரட்டை, அறிவென சென்றது ...அவரவர் தங்களுடைய கூடாரத்தினுள் நுழைந்து தூக்கத்தை எட்டிப் பிடிக்க ஆரம்பித்தனர்...
அருணன் சாரதியாய் அமர ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பகலவன் பாந்தமாய் விடியலை பரப்பினான்.... தூக்கம் விட்டெழுந்த வெயினி காலைக் கடனை முடித்து விட்டு வெளியே வரவும், கார் ஒன்று சரேலென வந்து நிற்கவும் சரியாக இருந்தது..." யார்ரா இவன்! கண்ணு என்ன பிடரில இருக்கா ?என்று அவள் கேட்க காரில் இருந்து செம்ம ஸ்டைலாக இறங்கினான் அவன் வேறு யாரு ருத்ரன் எனப்படும் ருத்ரேஷ்வரன் தான்.. அசோக் வெயினியிடம் ஓடி வந்தான்.." மேடம் முகேஷ் சார் சொன்ன ஆளுங்க இவங்க தான்... கடலுக்கு அடியில ரிசர்ச் பண்ண நமக்கு உதவியா அனுப்பி இருக்காரு.. அப்பறம் மேடம் நம்ம ப்ராஜெக்ட்கு கவர்மெண்ட் பாதி இந்த சார் பாதி இன்வெர்ஸ்ட் பண்ணி இருக்காங்க.. நீங்க கொஞ்சம் அமைதியா பேசுங்க மேடம் "என அவன் சொல்ல, வெயினிக்கு எரிந்தது ...அவன் பார்வையும், ஆட்டிடியூடும் அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை..."சே அங்க தான் அந்த முகேஷ் கிட்ட அமைதியா இருக்கனும்னா, இங்க இவன் கிட்டயா" என எரிச்சலோடு கூறி விட்டு கூடாரத்தினுள் நுழைந்தாள்...
"ஹலோ சார் நான் அசோக்" என அவன் கை நீட்ட அசோகை என்ன என்று கூட பாராமல் கடந்து சென்றான் ருத்ரன்... அசோக் நீட்டிய கை மடக்காமல் அவன் போகின்ற திசையை ஆவென பார்த்தான்... அவன் பின்னால் வந்த சுமி அசோகின் தலையில் நங்கென்று கொட்டிய பின்னரே சுற்றம் உணர்ந்தான்... ஆஆஆ என தலையைத் தடவிக் கொண்டே "ஏய் குட்டி சாத்தான் எதுக்கு தலைல கொட்டின "என அசோக் கேட்க;" ஏன்யா தென்னை மரம் அந்த போற சார பாத்து எதுக்கு இப்டி ஜொல்லு விர்ர? ஓஓஓஓஓ அவனா நீ!" என சுமி சொல்ல ஒரு சில வினாடிகள் எதுவும் புரியாத அசோக்கு அந்த வார்த்தை புரிந்ததும் உன்னை, என சுமியை அடிக்க திரும்பினான் ...
"அவ போய் பத்து வருஷம் ஆச்சு "என கூறிக்கொண்டே வந்தான் ஸ்டீவ் ..."ஓடிட்டாளா அவளுக்கு இருக்கு" என அசோக் கறுவிக் கொள்ள; "சரி அப்பறம் அவள பாக்கலாம்.. யாரு அவன் ஆளே ஒரு மாதிரி திணிசா இருக்கான் .."என ஸ்டீவ் வினவ அசோக் விவரம் சொன்னான்..." ஓஓஓ "என கூறி விட்டு ஸ்டீவ் அவ்விடம் விட்டு அகன்றான்..
வெயினி கோப்புகளை புரட்டும் போது கூடாரத்தின் முன் நிழலாடுவதைக் கண்டு "அசோக்" என அழைக்க உள்ளே நுழைந்து அவளது படுக்கையில் அவளின் அருகேயே அமர்ந்து அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.... "யூ இடியட் இப்டி தான் வருவியா? எருமை மாடு மாதிரி அறிவு இல்லை!" என அவள் கேட்க;" அச்சோ சுவிங்கம் தீர்ந்து போச்சு இதோ இருக்கே இந்த ஸ்ட்ராபெரி இத தரியா மென்னுட்டு திரும்ப கொடுத்துடுவேன்" என அவளது உதடுகளைப் பார்த்தவாறே அவன் பேச அவள் மூச்சடைத்து விட்டாள்... பல பேர் தன்னை சைட் அடித்து உள்ளார்கள்... இப்படி யாரும் பச்சையாக பேசவில்லை..."சீ என்ன ஜென்மமோ "என அவள் கூறும் போதே கவி உள்ளே நுழைந்தான்...
வெயினி ஏதோ சங்கோஜமாக இருப்பது தான் கவிக்கு முதலில் கண்ணில் பட்டது ..."என்னாச்சு ஆண்டி உனக்கு... ஒரு மாதிரி இருக்க!" என அவளை ஆராயும் போது தான் பக்கத்தில் ருத்ரனை அவதானித்தான் கவி....
"ஹலோ சார் இங்க பாருங்க இருக்றதுக்கு கதிரை இருக்கே ... சார் அங்க போய் எதுக்கு உக்காந்து இருக்கீங்க?" என கவி அவன் பாட்டுக்கு பேச; ருத்ரனின் பார்வை வெயினியை விட்டு அகலவே இல்லை... பொறுமை இழந்த கவி வெயினியின் கை பற்றி "வா வெளியே" என அழைத்து செல்ல முற்பட அவளை தன் கை வளைவில் கொண்டு வந்த ருத்ரன் கவியைப் பார்த்து "அக்கானு சொல்லு மைண்ட் இட் "என ஒற்றை விரல் நீட்டி எச்சரித்து விட்டு போனான்....
கவிக்கோ கோவம் தாளவில்லை..." யாரு அவன் நீயும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல அவன் கிட்ட நிக்கிற" என கத்த;" ஏன் டா சத்தம் போர்ர காலைல இருந்து தலைவலி என ஒன்று விடாமல் அனைத்தையும் அவனிடம் கூறினாள் வெயினி...
" ஓஓஓஓ... ப்ராஜெக்ட்காக வந்த மாதிரியே தோணல வெயினி... கரடு முரடா இருக்கான் பாக்க.." என கவி கூற ;கவியை சீண்ட நினைத்த வெயினி "பட் ஆள் பாக்க சூப்பரா இருக்கான்ல, பரவால எனக்கும் சைட் அடிக்க ஒரு மூஞ்சி கிடச்சிட்டு" என அவள் கூற ;"ஆண்டி வாய மூடிட்டு போய் குளி "என கவி கூற ;"ஆமாடா அவன் தொட்ட இடம் அருவருப்பா இருக்கு "என கூறிவிட்டு இளவெயினி குளிக்க சென்றாள்...
இதை அனைத்தையும் வெளியே கேட்டுக் கொண்டிருந்த ருத்ரனுக்கு நரம்பு புடைத்தது... எத்தனையோ பெண்கள் தன் ஆளுமைக்கு அடிமையாக உள்ளனர் ... இவள் தான் தொட்ட இடம் தீட்டு என்பது போல் கூறுகிறாளே ..என கொந்தளித்து விஷமமாக சிரித்து கொண்டே சென்றான் ...அங்கு அவனுடன் வந்த ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டிருக்க அதைப் பார்த்தவாறே தன் பைப்பை எடுத்து வாயில் வைத்து புகைத்தான் ருத்ரன்...
எல்லாரும் தயாராகி கடலினுள் செல்வதற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர்... வெயினி சிஸ்டத்தில் தனக்கு தேவையானவற்றை பொருத்திக் கொண்டிருந்தாள்...
புகைத்த படியே வெயினியின் அருகில் வந்தான் ருத்ரன் "இவ்வளவு அழகான பொண்ணு !!பண்ற வேலை தான் பொருத்தமே இல்லாம இருக்கு... எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுர" என வக்கிரமாக ருத்ரன் கேட்க;" நீ எதுக்கு வந்தியோ ,அத மட்டும் பாரு ஓகே "என ஆவேசத்துடன் அவனுக்கு பதில் அளித்தாள் வெயினி...
"என் வேலைய கண்டிப்பா சிறப்பா பண்ணிடுவேன்.. நீயில்லாமலா! என சிரித்துக் கொண்டே அவளது கன்னத்தில் தட்டி சொல்லி விட்டு கடலினுள் செல்வதற்கு அவனுமே தயாரானான்...
அசோக் என அவள் அழைக்க அசோக் வந்து நின்றான் படகு தயாரா ஒட்சிசன் சிலிண்டர் ரெடியா கேமரா எல்லாம் சரிவர பாத்தாச்சா அப்பறம் அசோக் இதுக்காக எவ்வளவு அலஞ்சோம்னு நியாபகம் இருக்கும் சோ முடிஞ்ச வரைக்கும் கவனமா தெளிவா பண்ணனும் என்று அவள் கூற இதை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.. "
தொடரும்.....

Last edited:
Author: இராவணச்சி
Article Title: ஏகாந்தமே ஏந்திழை மடி - அத்தியாயம் 3
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.