- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் பத்து
இரவு நேரம் - சாலை ஓரம்
மணி இரவு பதினொன்று. சாலையில் நடந்தாப்படி கைப்பையில் அலறிய போனை காதில் வைத்தாள் திரிலோ.
எதிர்முனையில் தம்பி.
''அக்கா.. எங்க போன நீ.. எவ்ளோ நேரமா ட்ரை பண்றேன்.. எங்க இருக்க நீ!''
பதற்றமாய் தம்பி வரிசையாய் கேள்விகளை அடுக்க, சிரித்தவள் அவனுக்கு பெருமூச்சின் ஊடே பதில் சொன்னாள்.
''டேய்.. டேய்.. அலறாதடா.. வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்.''
''ஏன் உனக்கு இப்படி மூச்சு வாங்குது..''
''நடக்கறேண்டா.. அதான்..''
''என்னாச்சு ஏன் நடந்து போற..''
''அதை ஏன் கேட்கறே.. கார் பிரேக் டவுனாச்சு (break down).. சரின்னு சொல்லி கிராப் (grab) புக் (book) பண்ணி.. அதுல வந்தேனா.. பாதி வழியில அதுவும் புட்டுக்கிச்சு.. அந்த ட்ரைவர் அப்பவும் சொன்னான்.. இன்னோரு கார் பார்த்து தறேன்னு.. நான்தான்.. வீடு பக்கத்துலத்தான் இருக்கின்னு சொல்லி.. நடந்தே வந்துட்டேன்.."
''என்னக்கா நீ! அங்க இப்போ ராத்திரி எத்தனை மணி! இந்நேரத்துக்கு இப்படி வெளிய.. அதுவும் தனியா.. என்னவோ போ! சரி.. சாப்பிட்டியா..''
செல்ல கோபத்தோடு விசாரித்தான் தம்பி.
''ஆஹ்.. நீ..''
''சாப்பிட்டேன்கா.. அப்பறம் அந்த கர்ணா.. ஏதும்..''
தனக்கு தேவையானதை குடைய ஆரம்பித்தான் விதுர். இல்லை, நாசூக்காய் போட்டு வாங்கிட பார்த்தான்.
ஆனால், திரிலோவிற்கோ போலீஸ்காரன் அவன் பெயர் கேட்ட மாத்திரத்திலேயே கண்கள் தெப்பக்குளம் ஆகிப் போயின.
நாட்கள் கொஞ்சம் ஆகியிருந்தது, சரியாக அன்றைய கஃபே சண்டை நடந்தேறி. நெஞ்சு புண்ணாய் போன கதைகளைப் பற்றி பேசிட, திரிலோவிற்கு துளியும் விருப்பம் இல்லை. எல்லாம் கர்மா என்று நினைத்துக் கொண்டாள் காரிகை.
ஒருகாலத்தில் அவளுக்காகவே வாழ்ந்து கொழுத்தவள், இன்று பாமர மக்களோடு கலக்கையில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கத்தானே செய்யும்.
நெஞ்சுக்கு குறுக்கே அவளின் நாவலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடந்தவாக்கில் ஊமையாகி கிடந்தவள் எதுவும் நடந்ததாய் காட்டிக் கொள்ளவில்லை தம்பியிடத்தில்.
''உனக்கென்ன பைத்தியமா விதுர்.. அன்னிக்கி ஒரு நாள் உதவி பண்ணேன்.. அவ்ளோதான் தான். அதுக்கு அப்பறம் அவரை நான் பார்க்கவே இல்ல.. ஆமா.. நீ ஏன் அவரை பத்தி சும்மா சும்மா கேட்டுக்கிட்டே இருக்க..''
அவனின் பால் சொல்ல முடியா ரணமான கோபம் இருந்தும் அவர், இவருக்கு பங்கம் வரமாலே இருந்தது.
இப்படியான குழப்பம் கொண்ட வலி வேதனைக்கான காரணம் அலர் அவள் அறியவில்லை. உணர்ச்சி மட்டும் சுனாமியாய் அவளை தாக்கி மூச்சு முட்ட வைத்தது மூக்குறுஞ்சிட.
''யார் கண்டா.. மிஸ்ட்டர் கர்ணா என் மாமாவாயிட்டா..''
''விதுர்.. பிளீஸ்..''
தம்பி விளையாட்டாய் மாமா என்றிட பெண்ணாக பிறப்பெடுத்த காரணத்தால் என்னவோ இவளுக்கு மட்டும் குலுங்கி குலுங்கி ஆழ வேண்டும் என்றிருந்தது அப்போதே. ஆனால், சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவளின் அழுகையெல்லாம் கர்ணன் ராதேயனுக்குத்தான்.
''உனக்குத்தான் போலீஸ்னா ரொம்ப பிடிக்குமேக்கா.. அதே மாதிரி போலீஸ்க்கும் களவாணிகளை ரொம்ப ரொம்ப பிடிக்குமே..''
கண், காது, மூக்கு வைத்து பேசிட யாரும் வேண்டாம். விதுர் போதும். இப்படி சொல்லியே தனக்கு வேண்டியதை கறந்துக் கொள்வான். அக்காவிடம் மட்டுமல்ல. யாராக இருந்தாலும்.
''போதும் விதுர்.. போதும்! நான் எதையும் கேட்கற மூட்ல (mood) இல்ல!''
''சரிக்கா.. நான் உனக்கு அப்பறமா கோல் பண்றேன். ஒரு மீட்டிங் இருக்கு.. முடிச்சிட்டு வறேன்.. பார்த்து பத்திரமா போ.. போய்ட்டு ஆப்டேட் பண்ணு..''
''ஹ்ம்ம்..''
என்று சொல்லி போனை வைத்திட, கடந்த மூன்று நாட்களாய் திரிலோவை பின் தொடர்ந்து வரும் அதே உருவம் இப்போதும் அவளை பின்னோக்கி வந்து கொண்டிருந்தது.
பயந்தவள் நடையை வேகமாக்கினாள். தம்பி விதுரிடம் திரிலோ இதைப்பற்றி மூச்சே விடவில்லை. விதுர் போலீசிடமிருந்து தள்ளி இருக்க நினைக்கும் மிக நல்லவன்.
கழுத்து வியர்வைகளை துடைத்துக் கொண்டு, கையிலிருந்த அலைப்பேசியில் அழுத்தினாள் 999 என்ற அவசரகால எண்ணை. அவளின் கெட்ட நேரம், ஒருத்தரும் அவளின் அழைப்பினை எடுக்கவில்லை.
அவளை விட இன்னும் பலருக்கு என்ன சோதனையோ என்று மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்ட திரிலோ நடையை அவசரப்படுத்தினாள். அவள் வீட்டின் ஏரியாவில் சில நாளாய் தெரு முனை விளக்குகள் பழுதாகி கிடப்பதால் ஒரே கும்மிருட்டு என்று கூட சொல்லலாம்.
அலைப்பேசி டார்ச்சை (torch) ஆன் செய்து வைத்து நடந்தவள் மூச்சிரைக்க கொஞ்சம் நிறுத்தி திரும்பி பார்த்தாள். பின்னால் வந்த உருவமோ அவளைத் தள்ளி நின்று கவனிக்க, மிருட்சி கொண்ட விழிகள் மிரண்டு போக நெஞ்சை இறுக்கியிருந்த அவளின் நாவலை அவளறியாது கீழே தவற விட்டாள் திரிலோ.
அரக்க பரக்க நாவலை கையிலெடுத்தவள், அதோடு சேர்த்து புத்தகத்திலிருந்து வெளிவந்து விழுந்திருந்த புக்மார்க்கும் சிறிய விசிட்டிங் கார்ட்டும். அவைகளை எடுத்து புத்தகத்துக்குள் திணித்து நடந்தாள் கீழே விழாத குறையாய்.
மண்டை மூளை சூடாகி பயத்தில் உடல் கிடுகிடுக்க, விதுருக்கு அழைத்தாள் திரிலோ. அவன் எடுக்கவில்லை. யாருக்கு அழைக்கலாம் என்றெண்ணி பரிதவித்தவளை நாவலின் உள்ளிருந்து எட்டி பார்த்தது அந்த விசிட்டிங் கார்ட்.
விடுக்கென்று அதை இழுத்து பெயர் பார்க்கையில் அது கர்ணாவுடையது என்று அறிந்துக் கொண்டாள். முகத்தை சுழித்தவள் ஆபத்துக்கு பாவமில்லை என்று அவனின் எண்ணிற்கு அழைத்தாள்.
ஹீரோவோ கர்பவதி கண்மணியின் காலை மடியில் போட்டு அமுத்திக் கொண்டிருக்க, போனின் தொடுதிரையில் பாம்ஷெல் திரிலோ என்ற பெயர் வர ஒரு கணம் ஆடிவிட்டான் கண்கள் ரெண்டும் அகல விரிய.
போனை எடுத்து திருதிருவென அவன் முழிக்க புரிந்தது இது கௌதமுடைய வேலைதான் என்று. அவன்தான் ரெண்டு நாட்களுக்கு முன் அம்முவிடம் பேச வேண்டும் என்று சொல்லி கர்ணாவின் போனை பிடிங்கிப் போனான் அவன் போனில் சார்ஜ் இல்லை என்றுச் சொல்லி.
அந்நேரம் பார்த்துதான் கௌதம் இவ்வேலையை ஓட்டியிருக்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டவன் கண்மணியின் காலை கழட்டி விட்டு போனோடு ஓரம் போனான்.
"டேய்.. எரும.. எங்கடா போற பாதியில கழட்டி விட்டு.."
"ஒக்கே நிமிஷம்.. வந்துடறேன்.."
என்றவனோ திரும்பிப் பார்த்து கண்ணடித்து ஒடினான் கண்மணியை.
யாரென்று அறிந்தும் தெரிந்தும் வேண்டுமென்றே தெரியாதவனாட்டம் வினவினான் கர்ணா போனை காதில் வைத்து.
''ஹலோ.. யாரு..''
''ஹ்ம்ம்.. உங்களுக்கு கட்டு போட்டவ..''
''ஓஹ்.. திருடி மேடம் நீங்களா..''
புகையை ஊதி விட்டவன் சிரித்தான்.
''கர்ணா.. பிளீஸ்..''
அவளின் கோபமான தொனி என்னவோ அவனுக்கு
சிரிப்பைத்தான் வரவழைத்தது.
''சரி என்ன இப்போ.. எந்த பேங்க்க கொள்ளையடிக்கறதா பிளான் மேடம்.. உதவி ஏதும் வேணுமா என்ன..''
மூச்சு வாங்க நடந்தவள் நிறுத்தி வருந்தினாள் அவளின் அறியாமைக்காய்.
''சே! உங்களுக்கு போய் போன் பண்ணேன் பாருங்க! என் புத்திய செருப்பால அடிக்கணும்!''
பால்கனியில் சுவற்றில் சிகரெட்டை தட்டியவன் சிரித்தான்.
''அடிச்சிக்கோங்க.. யார் வேணாம்னு சொன்னா.. அதை எதுக்கு என்கிட்ட போன் பண்ணி சொல்றிங்க கொள்ளக்காரி மேடம்..
அவன் கிண்டலாக சொல்லிக்கொண்டே இருக்க, திரிலோவின் பக்கத்திலிருந்து மூச்சு வாங்கும் சத்தம் மட்டுமே வந்தது.
அது என்னவோ கர்ணாவின் மனதை சஞ்சலப்படுத்திட அவளின் பெயரை இருமுறை அழைத்தான் பதற்றமாய்.
''திரிலோ.. திரிலோ..''
பின்னால் நடந்து வந்தவன் இப்போது துரத்துவதைப் போல் உணர, ஓட்டமெடுத்தாள் திரிலோ. அதன் விளைவே மூச்சு வாங்கியது அவளுக்கு பேச கூட முடியாதா அளவுக்கு.
''கர்.. கர்ணா.. ஹ்ஹ்..ஹா..ஹ்.... கர்ணா..''
மூச்சிரைத்தவள் சொன்னதெல்லாம் அவனின் பெயர் மட்டுமே.
''திரிலோ.. என்னாச்சு.. எங்க இருக்க..''
வாங்க போங்க எல்லாம் காணாமல் போய், உரிமையோடு அவளை ஒருமையில் அழைத்தவனின் மனதில் இனம் புரியா தவிப்பு ஒன்று துளிர்த்து அவனை படுத்தி எடுத்தது.
''திரிலோ.. திரிலோ..''
அவனறியாது படபடத்தது அவனின் நெஞ்சம். அவளுக்கு என்னவோ ஏதோ என்று பதறிடும் முன் பேசினாள் அவள்.
''எனக்கு ரொம்ப.. ரொம்ப.. பயமா இருக்கு கர்ணா..''
''திரிலோ முதல்ல எங்க இருக்க சொல்லு..''
''மூணு.. மூணு நாளா ஒருத்தன் என்ன ஃபோலோ (follow) பண்ணிக்கிட்டே வரான்.. கர்ணா..''
''ஓஹ்.. ஓஹ்.. அதான் மேட்டரா.. நீங்கதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே மேடம்.. நீங்களே பார்த்து பண்ணிருக்கலாமே அவனை.. ஏதாவது..''
என்னதான் அவனின் வாய் அவளை நக்கலடித்தாலும், கை என்னவோ துருதுவென்றுதான் வேலைப் பார்த்தது.
அவனின் இன்னொரு போனின் மூலமாய் போலீஸ் டீமில் இருக்கும் அர்ஜுனுக்கு தகவல் அனுப்பி திரிலோ இருக்குமிடம் கண்டறிய சொன்னான் கர்ணா.
''நீங்க மனுஷனே இல்ல கர்ணா.. உங்களுக்கு போய் போன் பண்ணேன் பாருங்க..''
ஓட்டமாய் ஓடியவள் இப்போது நடக்க ஆரம்பித்திருந்தாள்.
''அம்மா பாம்ஷெல் தெய்வமே.. சாபம் கீபம் விட்றாதே.. உன்ன ஃபோலோ பண்ணிக்கிட்டு வர்ரது போலீஸ் தான்.. நான் தான் அனுப்பி வெச்சேன்.. திருடி பாம்ஷெல் திரிலோவை கண்காணிக்க..''
என்றவன் எப்போதோ பெண்ணவள் இருக்குமிடத்தில் அந்நேர ரோந்து பணி போலீஸ்காரனை பணித்து திரிலோவை பின் தொடர்பவனை தேடி பிடித்து அடியை கிளப்பியிருக்க சொன்னான்.
''கர்ணா..''
அழுத்தமாய் சொல்லி திரிலோ சத்தம் போட,
''கத்தாதிங்க திருடி மேடம்.. இப்போ, பாருங்க திரும்பி.. அவன் இருக்க மாட்டான்.. போயிருப்பான்..''
கர்ணா சொல்ல திரிலோ திரும்பி பார்த்திட, நிஜமாகவே அவளின் பின்னால் ஆள் இல்லை. திரிலோவும் வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
''என்ன பாம்ஷெல் திரிலோ.. ஆள் இல்ல தானே..''
நெட்டி முறித்து நெழிவு எடுத்த கர்ணா பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து வலது காலை மேல தூக்கி வைத்து இழுத்தான் கையிலிருந்த சிகரெட்டை.
''இல்ல..''
என்றவள் குரலில் நிம்மதி தெரிந்தது.
''அதான் சொன்னேனே மேடம்.. கண்காணிச்சிக்கிட்டே இருப்பான் இந்த கர்ணா.. பாம்ஷெல் திரிலோவ.. கையும் களவுமா சிக்கனீங்க.. பாஞ்சிடுவேன்! பாஞ்சி!''
கர்ணா கிண்டலாய் சொல்லிட, பதிலுக்கு அவனுக்கு கிடைத்தது என்னவோ விபூதிதான் திரிலோவிடமிருந்து.
''ஆமா.. இவரு பெரிய பாயும் புலி.. போனை வைங்க..!''
''ஏய்..''
அவன் என்னதான் ஒய், ஏய் என்றாலும் திரிலோ போனை வைத்து விட்டாள்.
'ச்சை! எவன் ஆள் வெச்சானோ அவன்கிட்டையே போய் உதவிக்கு நின்னிருக்கோம்!'
தன்னை தானே கழுவி ஊற்றிக் கொண்டவள் குளியலைப் போட்டு மெத்தையில் சரிந்தாள்.
கர்ணாவின் மனமாற்றத்திற்கு கண்மணிதான் காரணம். முழுமையாக எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் என்று சொல்லிட முடியாது. ஆனால், அவனின் கோபம் அவனை இன்று எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதனை நன்றாகவே புரிந்துக் கொண்டான்.
ஒருவனுக்கு கோபம் அதீதமாய் வருகின்ற ஒரே காரணத்திற்காக அவன் செய்வதெல்லாம் சரியென்று ஆகிவிடாதே. இது ஒன்றும் படமல்லவே எல்லா கோபமும் நியாயமாகவும் தர்மமாகவும் இருக்க.
வங்கி கொள்ளையை பொறுத்த மட்டில் அவனால் கயவர்களை பிடித்திட இயலவில்லை. அதே வேளையில் கஸ்தூரி அம்மாவின் உடல் நல குறைவு, போதாக்குறைக்கு டமன் மற்றும் கௌதமின் மெத்தன போக்கு.
இப்படி தொடக்க தப்புகள் எல்லாம் அவன் பக்கம் இருக்க அதை கேள்வி கேட்டவர்களிடத்தில் கோபம் வந்தது கர்ணாவிற்கு காரணம் அவனிடத்தில் பதில் இல்லை அவர்களின் வினாக்களுக்கு. சமாளிக்க முடியாமல் தான் திணறினான் கர்ணா. ஆதலால், பார்ப்போர் அனைவரும் அவன் கண்ணுக்கு தவறிழைத்தவர்களாகவே தெரிந்தனர்.
கண்மணி அன்றைக்கு செருப்பால் அடிக்காத குறையாய் அவன் கோபத்தின் உச்சத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டிட, நிஜமாகவே நொறுங்கி விட்டான் கர்ணா. அன்றைய பொழுது அம்மா கஸ்தூரியின் மடியில் தலை சாய்த்து கிடந்தவன் இரவு உணவை கூட வேண்டாமென்று தவிர்த்து அவன் அறையில் தனியே தஞ்சம் கொண்டான்.
கண்மணி கணவன் உட்பட வந்து அழைத்தும் தலைவலி என்று சொல்லி அவர்களை துரத்தாமல் துரத்தி விட்டான். மேஜை மீதிருந்த திரிலோவின் பாம்ஷெல் அழகி நாவலை முதல் முறை சாந்தமான மனதோடு தொட்டு பார்த்தான் கர்ணா.
குற்றம் கண்டுப்பிடிக்கணும் என்ற எண்ணத்தை தள்ளி வைத்து அவள் புனைவினை இயல்பாய் வாசிக்க ஆரம்பித்தான். அவன் தான் எடுத்து வந்திருந்தான் கண்மணி கணவன் புத்தக குவியலிலிருந்து இந்நாவலை.
புதிய கொலை மற்றும் கொள்ளை சார்ந்த கதை ஒன்றிக்காக இப்படியான புத்தகங்களை அதிகமாய் வாங்கி வைத்திருப்பதாக கண்மணியின் கணவனே சொன்னான்.
திரிலோவின் நாவலை முதலில் வாசித்த போது அவனுக்கு இருந்த கோபமானது இப்போது கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது. நிஜமாகவே அவளின் எழுத்துக்கள் மெய்தான் பேசியிருந்தன.
அதுவே, கர்ணாவின் அன்றைய ஆத்திரத்திற்கு காரணம். ஒரு போலீஸ்காரனாக கர்ணாவால் கண்டறிய முடியாத பல விடயங்களை ஒரு சாமானிய பெண்ணொருத்தி அவ்வளவு நுணுக்கமாய் கண்டுக் கொண்டது பாராட்டத்தக்க விடயமே.
அதையே, அவள் புத்தகமாய் எழுதி வெளியிட்டிருப்பது ஏற்கனவே இத்திருட்டு சம்பந்தமாய் போலீசை கழுவி ஊற்றிடும் கூட்டத்திற்கு வசதியாகி இருப்பதும் மனவருத்தமே.
தெரிந்ததும் தெரியாமலும் திரிலோ அதிகமான பாதிப்பையோ ஏற்படுத்தி இருந்தாள் கர்ணாவின் பணியில்.
ஆனால், இன்றைக்கு நல்ல தெளிவான சிந்தனையோடு கர்ணா அவளின் எழுத்துக்களில் உள்ள உண்மையினை உணர்ந்துக் கொண்டான். அவளோடு கைக்கோர்த்தால் இத்திருட்டை வருங்காலத்தில் தடுத்திடலாம் என்று நம்பியவன் அறிவாளியான திரிலோ விரும்பினாள் அவளை சைபர் கிரைம் பிரிவினில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்றுக் கூட யோசித்திருந்தான்.
இந்த ஞானயோதயமெல்லாம் பிறந்து வாரங்கள் ஆகியிருக்க, நேரம் வரட்டும் அவளை மீண்டும் சந்திக்கலாம் என்று தான் நினைத்திருந்தான். ஆனால், அவன் சற்றும் எதிர்பார்த்திடவில்லை இன்று அவளாகவே அவனை அழைப்பாள் என்று.
நிஜமாகவே முதலில் அவளை கண்காணிக்க ஒரு போலீஸை ஏற்பாடு செய்திருந்தான் கர்ணா. ஆனால், கண்மணியின் வார்த்தையானது அவனை மாற்றியிருந்தது. அவனின் உள்ளுணர்வும் அதற்கு சரியென்றிட அவனின் அத்திட்டத்தைக் கைவிட்டிருந்தான் கர்ணா.
எங்கே திரிலோ பயந்திடுவாள் என்றுதான் அவன் அனுப்பிய போலீஸ் என்று பொய்யுரைத்து அவளை பதற்றம் அடையாமல் பார்த்துக் கொண்டான் கர்ணா. அதே வேளையில் அவளைப் பின் தொடர்ந்தவனை பிடித்து உருட்டிட, அவனோ கஞ்சா அடிப்பவன் என்று தெரிய வந்தது.
திரிலோ வீட்டில் தனியாக இருப்பதைக் கண்டுக் கொண்டு அவளிடம் ஏதாவது தேறுமா என்று திருடிடவே அவளை தொடர்ந்து வந்திருக்கிறான் என்ற சங்கதி தெரிய அவனைப் பிடித்து போதை பொருள் மறுவாழ்வுக்கு அனுப்பி வைத்தான் அர்ஜுன் நண்பன் கர்ணா சொல்லிட.
திரிலோவோடு பேசி விட்டு ஹாலுக்கு வந்தவனை மேலிருந்து கீழே மார்க்கமாக பார்த்தாள் கண்மணி.
''என்னடா.. போன் எடுத்துக்கிட்டு தனியாலாம் போறே.. என்ன கேர்ள் பிரெண்டா..''
''அதான் குறைச்சல் போ..''
என்றவனின் இதழில் மட்டும் புன்னகைக்கு குறைச்சல் இல்லாமல்தான் இருந்தது.
''புலி வழக்கமா பதுங்கும்.. பாயரத்துக்கு முன்னாடி.. ஆனா, இப்போ என்னவோ பம்பர மாதிரிலே இருக்கு..''
சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் கௌதம் அம்முவோடு. அம்முக்குட்டி அவள் பெயர். மலையாளி. கௌதம் கல்யாணம் செய்துக் கொள்ளப் போகும் பெண்.
கௌதமை பார்த்த கர்ணா ஏதும் சொல்லாமல் உதடு மடக்கி சிரிக்க, என்னவோ அன்றைய சம்பவம் வேறு கண் முன் வந்து போனது கர்ணாவிற்கு.
பின்னந்தலையை அழுந்தக் கோதியவன் யோசித்தான் அன்றைக்கு ஏன், கர்ணன் ராதேயன் திரிலோவை முத்தமிட போனான் என்று. பாவம் அவனுக்கு விடைக் கிடைக்கவே இல்லை.
அவனின் சிந்தையைக் கலைத்தான் கௌதம்.
"டேய்.. வாடா.. டொங்கி (donkey) கார்ட் விளையாடலாம்.."
"எரும.. டொங்கி கார்ட் விளையாடற வயசாடா உனக்கு.."
என்றவன் சிகரெட் பாக்கெட்டோடு வெளியே போக, அவனை பாதியிலே தடுத்தான் கௌதம்.
"நீ எவ்ளோ சீரியஸா பேசினாலும்.. விளையாண்டுத்தான் ஆகணும்.. ஒழுங்கா வா.."
"முடிஞ்சா.. என்ன இழுத்திட்டு போ.."
என்ற கர்ணா சிரிப்போடு கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு உடலை இறுக்கமாக்கி நிற்க,
"கர்ணா.. வா.. விளையாடலாம்..
கஸ்தூரி அம்மா ஓரே ஒரு அழைப்பு தான். ஓடியே விட்டான் புயலேன கார்ட் விளையாடிட கர்ணா, சிகரெட் பாக்கொட்டை லைட்டரோடு சேர்த்து கௌதமின் கையில் திணித்து.
கர்ணா சிகரெட் பிடிப்பது கஸ்தூரி அம்மாவுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், கர்ணா அதை வெளிப்படையாக அவர் முன்னிலையில் காட்டி கொள்ள மாட்டேன். மறைத்தே பிடிப்பான்.
அவ்வப்போது அம்மா சொல்லிடுவார் சிகரெட்டை குறைக்க சொல்லி. தலையை மட்டும் ஆட்டிடுவான் கர்ணா.
அனைவரும் அரட்டை அடித்து முடிக்க மணி விடியற்காலை மூன்று. மற்றவர்களுக்கு வராத துயில் கர்ணாவின் கண்ணை எட்டிப்பார்க்க, எல்லாருக்கும் குட் நைட் சொல்லி; அவனறைக்கு வந்தவன் மெத்தையில் சரிந்தான்.
காதில் ஹேண்ஸ் ஃபிரீ (hands free) மாட்டி பாட்டு தட்டிட, அதுவோ பாடியது கண்மணி கேட்டு நிறுத்திய இடத்திலிருந்து இப்படி கர்ணாவின் செவிகளுக்குள் உதித் நாராயணனின் குரலில்.
"தேன் தேன் தேன்..
என்னை நானும் மறந்தேன்..
உன்னைக் காண பயந்தேன்..
கரைந்தேன்..
என்னவோ சொல்லத் துணிந்தேன்..
ஏதேதோ செய்யத் துணிந்தேன்..
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.."
பாடல் நெஞ்சை இதமாய் வருடிட, மீண்டும் கர்ணாவிற்கு அதே ஞாபகம். அவன் கரம் தாங்கியிருந்த திரிலோவின் முகம். கர்ணா அவன், அதரங்கள் சேர முனைந்த நூலிழை இடைவெளிக் கொண்ட காரிகையின் இதழ்கள்.
ஒன்றன் பின் ஒன்றாக ஏசி அறையில் மணி மூன்று முப்பதற்கு தோன்றி மறைய, சிலிர்த்த உடலை போர்வைக்குள் அடக்கிக் கொண்டான் கர்ணா.
அவனின் மனமோ மந்திரித்து விட்ட கோழியாட்டம் திரிலோவை யோசிக்க, மணி பார்த்தவனுக்கு அவளை வம்பு பண்ணிட ஆசையாக இருந்தது.
வீட்டிற்கு சென்று விட்டாளா இல்லையா என்ற விடயத்தை வினவும் சாக்கில் அவள் குரல் கேட்க ஆசைப்பட்டவன் அழைத்தான் திரிலோவை.
அலறியது திரிலோவின் போன். ரசனைக்காரி அவளுக்கு பிடித்த வரியை மட்டும் தனியே பிரித்து ரிங்டோனாய் வைத்திருந்தாள்.
"திருடனே உன்னை அறிந்தேன்..
திருடினாய் என்னை அறிந்தேன்.. இன்னும் நீ திருடத்தானே..
ஆசை அறிந்தேன்"
'எவண்டா அது இந்த நேரத்துல..'
சலித்து பாதி தூக்கத்தில் விழித்தவள் கர்ணாவின் எண்ணை கண்டதும் பட்டென கண்களை உருட்டி எழுந்தாள். அவளுக்கு கர்ணாவின் எண் மனப்பாடம் ஆகியிருந்தது.
மணி மூன்றைக்கு மேல் ஆக, யோசிக்கவே இல்லை திரிலோ. முனகினாள்.
''எந்த பேங்க்ல எவன் கொள்ளையடிச்சானோ.. இவன் இப்போ நம்ப உயிரல்ல எடுப்பான்.. எல்லாம் என் தலையெழுத்து!''
உருண்டை தலையணையை தூக்கி தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள் திரிலோ.
கர்ணாவோ மெத்தையில் உருண்டி,
''என்ன தூங்க விடாமே பண்ணிட்டு.. இவ நல்லா நிம்மதியா தூங்கறாளோ.. முடியாதுடி! முடியவே முடியாது! நீ போனை எடுக்கற வரைக்கும் அடிப்பேன்..''
இப்படி சொல்லி அவன் நிறுத்தாமல் அழைக்க, முதல் அழைப்பு மிஸ்ட்டு காலாக போனது.
போனை மெத்தையில் போட்டு வேடிக்கை பார்த்தவள் முகம் மழலையாய் உதடு பிதுங்கியது.
''சும்மாவா சொன்னாங்க.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு.. ஐயா!!! இவன் வேற விடாமே அடிக்கிறானே..''
அங்கே கர்ணாவோ போனை கையில் வைத்துக் கொண்டு பெருமூச்சின் ஊடே சொன்னான் ஏக்கமாய்.
''ஹ்ம்ம்.. பாம்ஷெல் திரிலோவுக்கு அப்படி என்ன அசதியோ.. இப்படி ஒரு தூக்கம்.. சரி பொழைச்சு போ.. உன்ன நாளைக்கு நேரா வந்து வெச்சுக்கறேன்.. லாஸ்ட் ட்ரை.. எடுக்கறியா இல்லையான்னு பார்ப்போம்..''
கர்ணாவின் இரண்டாவது அழைப்பு மூன்றாவது அழைப்பாகாமல் இருக்க வழி வகுத்தாள் திரிலோ.
''கடவுளே! இவன் விட மாட்டான் போலிருக்கே! ஐயையோ! போன் எடுக்கலன்னு.. திடிர்னு வீட்டு முன்னுக்கு வந்து நின்னா.. என்ன பண்றது! இவன் வந்து நின்னாலும் நிப்பான்! அப்புறம் இவன் ஸ்ட்ரெஸ்க்கு நம்பதான் ஊறுகா இவனுக்கு!''
தூக்கம் வேறு ஒருப்பக்கம் கண்ணை சொருகியது திரிலோவிற்கு. பொத்தென மெத்தையில் விழுந்தவள்,
''இவனை நேரலாம் சமாளிக்க முடியாதுப்பா! போன்லையே டீல் பண்ணிட வேண்டியதுதான்!
தனக்குத்தானே புலம்பியவள், என்ன நடந்தாலும் சரி அவனிடத்தில் பிடி கொடுக்காமல் பேசிடவே நினைத்தாள் போனை எடுத்து குரலை செருமி.
''ஹேலோ யாரு..''
''ஹ்ம்.. உங்க மூஞ்சில தண்ணி ஊத்தனவன்..''
சிரித்துக் கொண்டே தலையணைக்கு கீழ் கரம் சொறுகியவன் சொன்னான்.
''ஓஹ்.. நீங்களா மிஸ்ட்டர் ஸ்ட்ரெஸ்..''
கண்களை தேய்த்துக் கொண்டு சொன்னாள் தூக்க கலக்கத்தில் திரிலோ.
''ஒய்.. என்ன நக்கலா..''
''ஹலோ.. இந்நேரத்துக்கு போன் பண்ணி.. தூங்கிக்கிட்டு இருந்த என்னைய எழுப்பி நக்கல் பண்ணிக்கிட்டு இருக்கறது நீங்கதான்.. நான் இல்ல..''
சொன்னவள் சரிந்தாள் கண்களை மூடி உருண்டை தலையனை மீது.
''சரி.. எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தே..''
''ஏன்.. நீங்க அனுப்பன போலீஸ் சொல்லலையா..''
அவனும் சரி அவளும் சரி, அன்றை மான பிரச்சனையான அவர்களின் கஃபே சம்பவத்தை தூரப்போட்டு இருந்தனர்.
எதோ சண்டைப் போட்டு முறுக்கி கொண்டு சமாதானமாக முக்கிக் கொண்டிருக்கும் காதலர்களை போலதான் இருந்தது இருவரின் அலும்பல்களும்.
''சொல்லல.. போதுமா! அவன் பார்க்கறான்.. இவன் பார்க்கறான்னு சொல்லும் போது மட்டும் போன் பண்ண தெரியுதுல.. ஏன் வீட்டுக்கு வந்துட்டேன்னு ஒரு வார்த்தை சொல்ல தெரியாதா..''
நேத்திரங்கள் மூடியிருந்தும் மால்லாக படுத்திருந்தவனின் முகம் இறுகி மாறியது.
திரிலோவோ உருண்டை தலையணைக்குள் முகம் புதைத்து சொன்னாள்.
''பிரச்சனையே உங்களாலதான்.. நீங்க மட்டும் எவனையும் அனுப்பாம இருந்திருந்தா.. உங்கக்கிட்ட உதவி கேட்கற நிலைமையே வந்திருக்காது எனக்கு.."
அவள் உளறல் குரலில் பேசிட அரைத் துயிலில் புன்னகைத்தவன்,
''சரி போதும்.. குட் நைட்.. பாய்..''
போனை வைத்திட போனான் கர்ணா.
''ஹலோ.. என்ன நீங்க பாட்டுக்கு கோல் பண்ணி என் தூக்கத்த கெடுதிட்டு இப்போ குட் நைட்னா.. என்ன அர்த்தம்..''
துயில் கலைந்த கடுப்பில் அவள் இருக்க, நக்கலாக சொன்னான் கண்களை மூடி நித்ரா தேவி அழைக்க குப்புறப்படுத்தவன்.
''பேசனது போதும் தூங்குங்க திருடி மேடம்னு அர்த்தம்..''
''ஆர்ர்ர்ர்.. கர்ணா..''
முஷ்டி மடக்கி வெறுப்பில் மெத்தையை குத்தினாள் திரிலோ. எழுந்து அமர்ந்திருந்தாள் சிகையெல்லாம் கலைந்து பைஜாமா போட்டு.
''ஆமா.. அதான் என் பேர்.. ஆனா.. இவ்ளோ அழுத்தமா யாருமே கூப்பிட்டதில்ல..''
என்றவன் அவளை கடுப்பேத்தி போனை வைத்தான்.
"டேய்! ஸ்ட்ரெஸ் கர்ணா!!! உன் ஸ்ட்ரெஸ்செல்லாம் என்கிட்ட இறக்கிட்டு நீ இப்போ நிம்மதியா தூங்க போயிட்டியா!"
திரிலோவோ அவளின் உருண்டை தலையணையை எடுத்து சுவற்றை நோக்கி விசிறினாள் அலறி கோபத்தில்.
*
பரபரப்பான நகரம்
நகர மையத்தில் இருக்கும் வங்கி
மாலை மணி நான்கு. வழக்கமாய் வெள்ளிக்கிழமைகளில் சீக்கிரமாகவே வங்கியை இழுத்து சாத்திடுவார்கள். சாதாரண நாட்களில் நான்கு முப்பதுக்கு அடைத்திடுவார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை. நான்கு மணிக்கு வங்கி அடைப்பு என்பதால் அனைவரும் வீட்டிற்கு கிளம்பிட தயாராகிக் கொண்டிருந்தனர். இதில் வருகின்ற திங்கள், செவ்வாய் பெருநாள் என்பதால் விடுமுறை வேறு.
ஆதலால், முக்கால்வாசி வங்கி தொழிலாளர்கள் ஏற்கனவே விடுமுறை எடுத்திருந்தனர். மிச்ச மீதியோ எப்போது கிளம்பலாம் என்று காத்திருந்தனர்.
அந்நேரம் பார்த்து வங்கிக்குள் அத்தரின் நறுமணத்தோடு நுழைந்தது ஒரு உருவம்.
அணிந்திருந்த செருப்பு முதற்கொண்டு கருப்பாக இருக்க முழு பர்தாவுக்குள் ஒளிந்திருந்தது அவ்வுருவம்.
கண்கள் மட்டும் மினுமினுக்க பர்தா அணிந்திருந்த தேகத்தை காவலாளி சந்தேகத்தின் பெயரில் பட்டும் படாமலும் மட்டுமே சோதித்தான். பர்தா பெண்கள் என்றால் மரியாதை ஜாஸ்தித்தான். மதம் சார்ந்த பிரச்சனையில் சிக்கிக் கொள்ள யார் விரும்பவர்.
சோதனைகள் முடிய நேராய் கவுண்டர் சென்ற பர்தாக்காரி நீட்டினாள் அவளின் கையிலிருந்த கடிதத்தை.
கவுண்டரில் இருந்த மலாய் பெண்ணோ பார்க்கவே சிறியவள் போலிருந்தாள். வெகுளியாய் இருந்தவைகள் முகம் வெளிறிப் போனது கடிதத்தை படிக்க.
அதில் எழுதி இருந்தது இப்படி.
'நாமே எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாக போறோம். என் உடம்புல போம் இருக்கு. நான் ஒரு மனித வெடி குண்டா உருமாற்றப்பட்டிருக்கேன். நம்ப உயிரெல்லாம் போறதும் போகாமல் இருக்கறதும் உங்க கையில தான் இருக்கு.
கவுண்டர்ல எவ்ளோ பணம் இருக்கோ அது அத்தனையையும் எடுத்து என்கிட்ட கொடுத்திடுங்க. வெளியில இருக்கறவங்க என் உடம்புல இருக்கற வெடிகுண்ட ஸ்டாப் பண்ணிடுவாங்க.
பிளீஸ்.. தயவு செஞ்சு எல்லார் உயிரையும் காப்பாத்துங்க. உங்க கையிலத்தான் இருக்கு இந்த பேங்க், நான், இங்க இருக்கற அத்தனை பேரோட உயிரும்.
நீங்க நினைச்சா கண்டிப்பா முடியும்.. உதவி செய்யுங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கு.. உடம்பு வேற பாரமா இருக்கு.. எவ்ளோ நேரம் என்னால பொறுத்துக்க முடியும்னு எனக்கு தெரியலே..'
தயவு செஞ்சு காப்பாத்துங்க..'
அக்குட்டி பெண் ஏறெடுத்து, பர்தா உருவத்தை பார்த்திட; கண்கள் மட்டுமே தெரிந்த முகம் வாடி வதங்கி இருந்தது.
விழிகளில் நீர் சுரக்க கொஞ்சமும் தாமதிக்காது அம்மலாய் குட்டி அவள் கவுண்டர் மட்டுமின்றி பக்கத்து கவுண்டர் முதற்கொண்டு திறந்து மொத்தமாய் ரொக்கங்கள் பலதை எடுத்து பையில் போட்டு பர்தா உருவத்திடம் தந்தாள்.
அதைப் பெற்றுக் கொண்ட பர்தா உருவமோ அங்கிருந்து வெளியேறியது. போகும் முன் தனக்கு பணம் கொடுத்த மலாய் குட்டிக்கு ஒரு சிறிய அத்தர் போத்தலை கவுண்டர் மேஜையில் வைத்து போனது அந்த உருவம் அன்பளிப்பாய். படித்த முட்டாள் அவளோ டாட்டா காட்டி வழியனுப்பினாள் பர்தா உருவத்தை.
துரத்திடுவான் கர்ணா பாம்ஷெல்லை..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://neerathi.com/forum/forums/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B.137/