Anusha David
New member
- Joined
- Nov 6, 2024
- Messages
- 3
நேசன் 2
பிரியவாகினிக்கு குடிப்பதற்கு பழச்சாறு எடுத்து வந்த அலர்விழி அவளது அறைக்கு சென்று பார்க்க அவளோ அங்கு இல்லை. அழைத்து பார்த்தும் பயனின்றி போக ஏனைய அறைகளை திறந்து பார்த்து உறுதி செய்து கொண்ட பின்னரே வெளியே வந்து எங்கேயும் நிற்கிறாளோ என்று சுற்றி முற்றி பார்த்தார்.
பின்னர் ப்ரிய நேசனின் அறைக்கு வந்து அவனிடம் சொன்னார்.
அலர்விழி சொன்ன செய்தியில் என்ன செய்வது என்று யோசித்த ப்ரிய நேசன் தன் சரிபாதியானவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அவளோ அறையிலேயே அலைபேசியை வைத்துவிட்டு அல்லவா சென்றிருந்தாள். முழு அழைப்பும் ஒலித்து அடங்கியது. மீண்டும் அழைத்து பார்த்தான்.
"ப்ச்.. இந்த நேரத்தில் எங்கே போனா இவ? என்கிட்ட கூட சொல்லாம... ச்ச... ஓகே மாம் இப்ப யார் கிட்டேயும் எதுவும் சொல்ல வேணாம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்க்கலாம்"
"யாராவது கேட்டா என்னடா சொல்ல?"
"பார்லர் போயிருக்கதா சொல்லிக்கலாம் . அவ வந்துடுவா எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவன் மீண்டும் அழைப்பு விடுத்தான். ஏற்று பேச தான் அவனவள் அலைபேசியின் அருகில் இல்லை.
***
மணப்பெண் அறையில் ஓய்வாக அமர்ந்திருந்த பிரியவாகினிக்கு அவளது வீட்டில் வேலை செய்யும் முல்லையன் அழைப்பு விடுத்தான்.
"இஷாம்மா நான் முல்லையா பேசுரேன்மா"
"சொல்லுங்க முல்லையா அண்ணா. எப்படி இருக்கீங்க? சாஷா ரோஜா எப்படி இருகாங்க? சாப்டாங்களா?"
"எங்கம்மா உங்களை காங்காம இந்த சாஷா ஒரு வாய் வாங்குவேனானு அடம் பண்ணுறா. நானும் மல்லுக்கட்டிட்டேன். காலைல ரூம்ல போய் படுத்தவதான் இன்னும் எழும்பாம கிடக்கா. ரோஜா கூட பராவல தேடுனாலும் சாப்பிட்டுறா. சாயாங்காலமே ஐயா அம்மா எல்லாம் பங்சனுக்கு கிளம்பிடாவ. இப்பம் அவியலுக்கு போன் போட்டும் எடுக்கல. அதான் உங்ககிட்ட ஒத்த வார்த்தை சொல்லிபுடுவோம்னு பண்ணேன்மா"
"சரிங்க அண்ணா எனக்கும் ரொம்ப மிஸ் பண்ண பீல்தான் நானே வரேன்."
"அம்மா நீங்க எப்படி?"
"ரெண்டு நாளா பாக்கலனு ரொம்ப பீல் பண்றா போல நான் வந்து இங்கயே கூட்டிட்டு வந்துரேன்"
"சரிங்கம்மா" என்று அழைப்பை துண்டித்தார். உடனே வந்து விடலாம் என்றெண்ணியே யாரிடமும் சொல்லாமல் வேறொரு வாசல் வழியே அவளது வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.
பயணத்தின் போது பனிக்கூழ் கடையைக் கண்டவள் சாஷாவுக்கு பிடித்த சுவையில் இரண்டு மூன்று வாங்கி வைத்தாள். அரை மணி நேர பயணம் முடிவுக்கு வந்தது.
வீட்டின் இரும்பு வாயிற்கதவை திறந்தாள். தன் சகோதரியின் வாசத்தை இளங்காற்று வீசி சென்று சாஷாவிடம் சமர்ப்பித்தது போலும். துவண்டு படுத்திருந்தவள் நிமிர்ந்து எழுந்து நின்றாள்.
இளம் பழுப்பு நிற பாதாம் வடிவ குளத்தில் நீந்திய நீல உருண்டை விழிகள் அந்த இருட்டறையில் ஒளிர்ந்தது.
குவி மாட அமைப்பை கொண்ட தலையும் தலைக்கு மேல் முக்கோண செவிகளிரண்டும் வான் நோக்கி செங்குத்தாக நின்றன.
கருத்த நாசியினூடே இளஞ்சிவப்பு நிற நாவை தொங்க விட்டு நாலேகால் பாய்ச்சலில் தாவி ஓடி வந்தாள் நம்பிக்கையின் நாயகி.
ஓடி வந்து தாவிய அஃறிணை பெண்ணவள் தான் சகோதரியாக பாவித்தவளை தன் நாவால் நக்கி அன்பினை வெளிப்படுத்தினாள். 'வ்வவ் வ்வவ் வ்வவவவ்' என்று தன் கோவத்தையும் காட்ட மறக்கவில்லை. அவள் கூடவே மீசையை முறுக்கியபடி ஆரஞ்சும் வெள்ளையும் கலந்த வண்ணங்கள் கொண்ட ரோஜாவும் 'ய்யாவ் ம்ய்யாவ்' என்று அழைத்தபடியே ஓடி வந்தாள். இருவரையும் அணைத்தவள்
"சாஷா ஏண்டி சாப்பிட மாட்டேங்கிற? அடம் பண்ணாம ஒழுங்கா சாப்பிடு போ. அண்ணே இப்ப சாப்பாடு என்ன செய்திருகீங்க? கொண்டு வாங்க போங்க"
அஃறிணையானவளோ செல்ல கோவம் கொண்டு முகத்தை திருப்பி வைத்துக்கொண்டாள். பிரியவாகினி சிரித்துக் கொண்டே எழுந்து தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் வந்தமர்ந்தாள்.
"ம்ம்ம் வாவ்" கொண்டு வந்திருந்த பனிக்கூழை முகர்ந்து பார்த்தாள். தாவி ஓடி வந்த சாஷா அதனை பிடுங்கி அவளின் அருகில் ஊஞ்சலில் அமர்ந்தபடி ருசித்தாள்.
"ஐஸ்கிரீம் சாப்பிட்டு டின்னரும் பினிஷ் பண்ணினா என் கூடவே உன்னை கூட்டிட்டு போவேனாம். டீலா" என்று ஒப்பந்தம் பேசினாள். அவள் சொன்னதற்கு சரியென்று தன் கைகளை பிரியவாகினியின் கைகளில் வைத்தாள்.
இவர்கள் இருவரும் கதைப்பதை வீட்டு வாயிலில் அமர்ந்து அமைதியாக கவனித்த ரோஜா அவளது கவனத்தை திசைதிருப்ப "ய்யாவ் ம்யாவ்" என்றழைத்து பார்த்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிய பிரியவாகினி " அச்சோ ரோஜாவை கவனிக்கலயா வாகினி? இங்க வா" என்று அவளையும் தூக்கி ஊஞ்சலில் அமர்ந்து ஆடினாள்.
சிறிது நேரத்தில் முல்லையன் தட்டில் உணவை எடுத்து வைத்து கொண்டு தர தானே ஊட்டி விட்டாள் பிரியவாகினி. மழலையாய் அவளிடம் உணவு வாங்கி உண்டு கொண்டிருந்தாள் சாஷா.
சாப்பிட வைத்தபின் அவள் மடியிலே படுத்துக்கொண்டாள் சாஷா.
"நேரம் ஆகுது சாஷா. கிளம்பனும்" என்று அவள் சொன்னதும் கைகளால் எங்கும் நகரவிடாதபடி அணைத்து கொண்டாள்.
"உன்னையும் கூட்டிட்டு போறேன்டி. எழுந்திரு" என்று பலவாறு பேசி சமாதானம் செய்தவள் தேவையானவற்றை எடுத்து வைத்து ரோஜாவையும் சாஷாவையும் அழைத்துக் கொண்டு விரைந்தாள்.
***
நேசனின் ஆழ் மனம் அவள் வந்திடுவாள் என்று உறுதியுடன் இருந்தாலும் தன்னிடம் கூட சொல்லாமல் இந்த நேரத்தில் எங்கே சென்றாள் என்று மனமோ சுணங்கியது. அழைத்து அழைத்து பார்த்தவன் ஏற்கபடாமல் போகவே அலைபேசியை மெத்தையில் வீசினான்.
( அவ்வளவு கோவம் இருந்தா ஏன் தரையில் வீச வேண்டியதுதானே? உடைஞ்சிடும்னு தெரியுதுல்ல ஆனால் சீன் போடுறது எல்லாரும் அப்படி தான் 🤭🤭)
"டேய் பிரியன் இது கோவபடுர நேரம் இல்லைடா. கோவத்துல ஏறுக்கு மாறா ஏதாவது செஞ்சு வச்சிடதாடா. கொஞ்சம் பொறுமையா இரு" என்று சொல்லி விட்டு அலர்விழி வெளியே சென்று பொழிலனை தேடினார். அவரிடம் விஷயத்தை சொல்லி அவன் கூட இருக்குமாறு அனுப்பி வைத்தார்.
***
நேரம் சென்று வந்தவளோ அவளவனிடம் சொல்லாமல் போன தன் மடமையை நினைத்து நொந்து முன் செல்லவே சாஷா பின்தொடர்ந்தாள். வாயிலில் நின்றிருந்த பிரியவாகினியின் அன்னை தமிழினி
"இஷா!!! நீ என்னடி இங்கருந்து வர்ர? சாஷாவ கூட்டிட்டு வரவா போன?" என்று கேட்க சேந்தனும் அங்கு வந்திருந்தார்.
"அப்புறம் சொல்றேன்ம்மா. அவர் தேடிட்டு இருப்பார்" என்று புன்னகை முகமாக அவள் உள் நுழையும் காட்சி அறையை விட்டு வெளியே வந்த நேசனின் விழிகளில் பட ஆசுவாசத்துடன் அவளை நோக்கி ஓடி வந்தான். அதற்குள் அவளது கைகளில் அமர்ந்திருந்த ரோஜா தமிழினியுடனும் சாஷா சேந்தனுடனும் சென்றிருந்தனர்.
"பிரியா எங்கே போன நீ? உன்னை காணாமல் இங்கு எல்லாரும் பயந்துட்டோம் தெரியுமா?" நேசன் படபடப்புடன் வினவ
"சாரிங்க முல்லையாண்ணே கால் பண்ணாங்க சாஷா சாப்பிடலனு. ரெண்டு நாளா என்னை பாக்கலனதும் ரொம்ப டல்லாயிட்டா அதான் அவளையும் கூட்டிட்டு வந்துட்டேன்" பிரியவாகினி யாரை சொல்கிறாள் என்று அவளின் பின் திரும்பி பார்த்தவன் யாரையும் காணாது விழிக்க
"ஓ அதுக்குள்ள அப்பாவை பாத்துட்டா போல அங்கு ஓடிட்டா பாருங்க" என்று கைகாட்டினாள்.
"அவளை அப்புறம் பாத்துக்கலாம் பிரியா பஸ்ட் நீ வா என் கொலிக்ஸ் வெயிட் பண்றாங்க"என்று இழுத்து கொண்டு போனான்.
"சாரிங்க மொபைல் ரூம்ல வச்சிட்டு போய்ட்டேன்"
"ஓகே அப்புறம் இதை பற்றி பேசலாம்" என்று தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்தான்.
குளிர்பானங்கள் பரிமாறப்பட்டன. இன்னிசை கச்சேரியும் ஆரம்பமாகின. மெல்லிசையில் ஆரம்பித்த இசையின் ஸ்வரங்கள் நேரம் ஆக ஆக மெல்ல சுருதியை ஏற்றி ஆட வைத்தது.
நேசனின் நண்பன் இனியன் ஒலிவாங்கியில்
"ஹலோ மைக் டெஸ்ட் ஒன் டூ த்ரி. கைய்ஸ் இப்ப ஒரு மியூசிக் பிளே பண்வாங்க. அதுக்கு டுடே ஹீரோவும் ஹீரோயினும் டான்ஸ் பண்வாங்க. கூடவே நாமளும் நம்ம கபுள் கூட ஆடலாம். கபுள் இல்லாதவங்க வயறு எரியாம கூல்டிரிங்க் குடிச்சி வயித்தை கூல் பண்ணிகோங்க"
அவன் சொல்லி முடிக்கவும் இரண்டு பேர் வந்து அவனை துரத்தினார்கள்.
"டேய் இனியா நீயா வந்து ரெண்டு குத்து வாங்கிக்கோ இல்லை அவ்வளவு தான்" மகிழன்
"ஏண்டா டேய் நான் என்ன தப்பு பண்ணேனு இப்ப மொத்த வர்ர நீ? ஏய் நூதனா நீயும் ஏன் துரத்துர" இனியன்
"மகிழா அவனை பிடிடா வயறு எரிஞ்சா கூல்டிரிங்க் குடிக்கனுமாம்ல. வயத்துலயும் குத்துனா வயிற்றெரிச்சல் சரியாகிடுமாம் பிடிடா" என்று நூதனாவும் துரத்தினாள்.
ஒருவழியாக இருவரும் மொத்தின பிறகே இனியனை விட்டனர்.
🎶
என்னையே திறந்தவள்
யார் அவளோ
உயிரிலே நுழைந்தவள்
யார் அவளோ
வழியை மறித்தாள்
மலரைக் கொடுத்தாள்
மொழியைப் பறித்தாள்
மௌனம் கொடுத்தாள்
மேகமே மேகமே அருகினில் வா
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா
அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை
திரும்பிப் பார்க்கிறேன்
🎶
மெல்லிசை ராகத்தோடு இன்னிசை இசைக்க நேசனும் பிரியவாகினியும் இசைக்கேற்ப இசைந்து ஆடினார்கள். அவளின் ஹேசல் விழிகளை ரசித்தபடியே நேயத்துடன் நெருக்கமாய் நின்று ஆடினான்.
ஆடல் முடிந்து பார்ட்டி கலகலப்புடன் செல்ல உணவு பரிமாறும் நேரம் வந்தது. தானே தனக்கு தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் மேலை நாட்டு முறையில் உணவு தயாராக இருக்க தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தங்களுக்கு விருப்பமான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டனர்.
நேசனும் பிரியவாகினியும் அருகருகே அமர்ந்து உணவு உண்டு எழ பிரியவாகினியின் அப்பா சேந்தன் சாஷாவுடன் அங்கு வந்தார். பிரியாவை பார்த்ததும் தாவி வந்து அவளின் முகத்தை நாவினால் வருடியவள் அவளை அணைத்துக் கொண்டாள்.
பிரியவாகினியும் சாஷாவின் நுதலில் முத்தமிட நேசனின் வதனம் செம்மையை பூசிக்கொண்டது. அதே கோவத்துடன் அந்த இளம் செம்மஞ்சள் நிறமும் நிலக்கரி நிறமும் கலந்து நின்ற அஃறிணையை வெறி வந்தவன் போல் ஓங்கி மிதித்தான்.
அவளோ 'வீல் வீல்' என்று கத்திகொண்டே சுவரோரம் பயந்து ஒடுங்கி நின்றாள். ரோஜாவோ சாஷாவின் அருகில் ஓடி நின்று நேசனைப் பார்த்து சீறினாள்.
விதிர்விதிர்த்து அவன் செய்கையை பார்த்த பெண்ணவள் அதிர்ச்சி விலகாமல் அவனை வெறித்தாள்.
பிரியமானவள் வருவாள்…
🎶
சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை
பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல்
மரங்கள் ஆனந்த பூசொறியும்
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ
வெயிலோ முயலோ
பருகும் வண்ணம்
வெள்ளை பனி துளி ஆவேனோ
உப்பு கடலோடு
மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை
மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும்
சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து கொள்கிறதே
மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழை துளி ஆவேனோ
இயற்கை தாயின் மடியில் பிறந்து
இப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
🎶
Author: Anusha David
Article Title: பிரியமானவளின் நேசன் 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பிரியமானவளின் நேசன் 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.