அந்த உருவத்திற்கு வயது முப்பது இருக்க வேண்டும்... ஆனால் பார்ப்பதற்கு ஏழு எட்டு ஆண்டுகள் மூப்பாக தெரிந்தது...
வெளுத்துப் போன முகம்... ஆறுமாதமாக மழிக்கப்படாத தாடி மீசை.. மூன்று நாட்களாக குளியலறைக்குள் போகாத உடம்பில், ஒருவாறாக சகிக்காத வாடை... அதை மூடியிருந்த கசங்கிய சட்டை, அழுக்கான ஜீன்ஸ்... சிரிப்பை மறந்திருந்த கருத்த உதட்டில் எதையோ இழந்த சோகம் கோபமாக... அனைத்தையும் விட அவன் கண்கள்... அந்த தூக்கத்தை தொலைத்த இரத்த விழிகளில் தெரிந்த வெறி...
இழுத்துச் செல்லப்பட்ட அந்த சில நொடிகளில் இதை மட்டும் தான் கணேஷினால் பார்க்க முடிந்தது... அதற்குள் அந்த வலிமையான கரத்திற்கு சொந்தக்காரன் இருட்டுக்குள் இழுத்து வந்ததும், அவசர அவசரமாக கழுத்துப் பகுதியை தொட்டுத் தடவி ஆராய்ந்து சரியான நரம்புப் பகுதியை கண்டுபிடித்து அழுத்தித் திருக, சத்தமிட முடியாமல் அப்படியே மயங்கிச் சரிந்தான் கணேஷ்...
மூச்சு வாங்கியபடி, "இனி எழுந்திரிக்க ஒரு மணி நேரமாகும்..." தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் சாய்பிரதாப்...
மர்மக்கலை தெரிந்த காதாப்பாத்திரத்தை வைத்து கதை எழுதுவதற்காக எப்போதோ கற்றுக் கொண்ட வித்தை அவனுக்கு இப்போது கைகொடுத்தது... அடுத்த சில நிமிடங்களில் கணேஷின் யூனிஃபார்மை போட்டுக் கொண்டு இருளை விட்டு வெளியே வந்தான்...
நேராக இருந்த அறைக்குள் நுழைந்து திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்க, குழந்தை இன்னும் அங்கே தான் விளையாடிக் கொண்டிருந்தாள்... அந்தக் கணம் வெறி மட்டுமே தெரிந்த அவன் கண்களில் அவளைப் பார்த்ததும் வேதனை வெளிப்பட்டது... இன்னொரு பக்கம் பால்கனியில் நின்று கொண்டிருந்த இருவர் பார்வையில் பட்டதும் நொடியில் குரோதம் கொதித்தெழுந்தது...
இருந்தும் அதை அடக்கிக் கொண்டு அறைக்குள் திரும்பியவன், யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக சுவர் ஏறிக்குதித்து வந்ததற்கான வேலையை கனகச்சிதமாக முடிப்பதற்காக அந்த அறைக்குள் பார்வையை அலைபாயவிட்டான்... கடைசியில் அங்கிருந்த பெட்டிகளிலிருந்து சிறியதாக இருந்த ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்...
நடைபாதையில் இருந்த இருள் அவனை கொஞ்சமும் தயக்கப்படுத்தவில்லை... உலோக சிலையைக் கூட, 'நீ இங்கே நிற்பதைப் பார்ப்பது எனக்கு இது முதல்முறை இல்லை' என்பதைப் போல் அலட்சியமாய் கடந்து சென்றான்...
இப்போது அவன் தனக்கு சவால் என நினைத்தது, கீழே வேலை செய்துகொண்டிருந்தவர்கள் கவனம் தன்மீது விழுந்துவிடாமல், அவர்களை கடந்து வீட்டின் முன்பக்கம் செல்வது தான்...
படிக்கட்டின் பக்கம் நெருக்கமாய் வந்து நின்று தலையை மட்டும் நகர்த்தி கீழே கவனித்தான்... வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் வாசலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் சொல்லப்பட்ட வேலையை மட்டும் கீ கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல செய்துகொண்டிருந்தனர்...
"சரியான ஆட்டுமந்தைக் கூட்டம்..." பெட்டியை முகத்தை மறைக்கும்படி பிடித்துக் கொண்டு மெதுவாக கீழே இறங்க ஆரம்பித்தான் சாய்பிரதாப்....
"நியூயார்க் ரீச் ஆனதும் உங்களை பிக்கப் பண்ணிக்க என் ப்ரெண்ட் ஜானு ஏர்போர்ட் வாசல்ல தயாரா இருப்பா சுவேதா... நான் அங்க வர வரைக்கும் அவ உனக்கு உதவியா இருப்பா.." என்றான் பால்கனியில் நின்றிருந்த நரேன்...
"நீயும் எங்க கூட இப்பவே வந்துடேன்! கம்பெனி வேலையை வேற யாராவது பார்த்துட்டு போகட்டும்.."
"எனக்கும் உங்கள தனியா அனுப்ப மனசில்ல தான்... ஆனா என்ன பண்ண? நியூயார்க்ல இருக்க ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு சென்னை ஆபீஸ்ல உள்ள ஆளை ரெஃபர் பண்றது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் சுவேதா... நான் பர்சனலா கேட்டுக்கிட்டதுக்காக அவர் நமக்கு இந்த உதவியை செஞ்சிருக்கார்... இப்போ பதில்உதவி கேட்டுருக்கார்..."
"அதுக்குன்னு இப்படி கடைசி நேரத்துல வந்தா கேக்கணும்?"
"புரிஞ்சிக்க சுவேதா! மூணு நாள்ல வேலையை முடிச்சுட்டு அடுத்த ப்ளைட்லயே வந்துடுறேன்..." அவளை சமாதானப்படுத்திய நரேன், பின் குரலைத் தாழ்த்தி, "இதை நல்லபடியா முடிச்சு குடுத்தா தான், நியூயார்க் வேலை நானா கேட்டு வாங்குனதுன்னு வெளியில தெரியாம இருக்கும்.." என்றான் ரகசியமாய்...
சுவேதாவும் சரி என்பதற்காக தலையை ஆட்டிவிட்டு, சொல் பேச்சுக் கேட்காமல் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை பார்த்ததும், "இன்னும் என்ன விளையாட்டு உனக்கு? கேப் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்... வந்து ரெடியாகு.." என்று அதட்டினாள்... குழந்தையும் முகம் சுருங்கிப் போய் ஊஞ்சலில் இருந்து இறங்கினாள்...
வீட்டின் கீழே, 'தன்னை யாராவது பார்க்கிறார்களா?' என படபடப்புடன் ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டே கதவை தாண்டிய சாய்பிரதாப்பின் காதில் சுவேதாவின் வார்த்தைகள் வந்து விழுந்து அவனை பரபரப்பாக்க,
அதேநேரம் அவனுக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தள்ளி, ஒரு தூணில் சாய்ந்து நின்றிருந்த மேலதிகாரி அவன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்...
சாய்பிரதாப் அதிர்ச்சியில் அசையாமல் அப்படியே நின்றுவிட, துடித்த கருவிழிகள் அக்கம் பக்கம் நகர்ந்து ஓடி மற்றவர்களை கவனித்தது.. நல்லவேளையாக வேறு யாருமே நடப்பதை பார்க்கவில்லை... மேலதிகாரியும் கூட வைத்த கண்ணை எடுக்காமல் அவனையே வெறித்துப் பார்த்தாலும் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தார்...
நேரம் மிகக்குறைவாக இருந்ததால், சட்டென 'இவரையும் மயக்கமடைய வைத்துவிடலாமா?' என யோசித்து அவரை நோக்கி நகரப் போக,
"இங்க நின்னு என்ன வேடிக்கை உனக்கு ? போ.. போ.. போய் வேலைய கவனி..." கையில் பெட்டியை தாங்கிக்கொண்டு தயங்கி நின்ற மங்கலான உருவத்தைப் பார்த்தபடி, கண்ணாடியை கைக்குட்டையால் துடைத்தார் மேலதிகாரி...
சாய்பிரதாப்பிற்கு உடனே நடப்பது புரிந்து போய்விட்டது... அவர் கண்ணாடியை போட்டுக் கொள்வதற்குள் விரைவாக நடந்து, அங்கிருந்த ஒரு சுவருக்கு அடுத்தப் பக்கம் சென்று மறைந்ததும் தான் நிம்மதியாக மூச்சை வெளியேற்றினான்....
"அவனுக்கு இந்நேரம் விஷயம் தெரிஞ்சிருக்குமா?" சந்தேகத்தோடு மீண்டும் கேள்வி எழுப்பினாள் சுவேதா...
நரேன், "அதெல்லாம் கண்டிப்பா தெரிய வாய்ப்பேயில்ல." அடித்துக் கூறினான்...
"ப்ச்..." சுவேதா நம்பிக்கை இல்லாமல் திரும்பிக் கொள்ள, ஓரிடத்தில் தனியாக நின்றிருந்த அவள் குழந்தை யாருடனோ ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தது கண்ணில்பட்டது... குழந்தையோடு பேசிக் கொண்டிருந்தவனை சுவர் மறைத்திருந்தது....
"அப்படியே தெரிஞ்சிட்டா மட்டும் என்ன பண்ணிட முடியும் அவனால?" குறுக்கே வந்து நின்று கவனத்தை தன்மேல் மாற்றினான் நரேன்...
இருந்தும் சுவேதா சந்தேகத்தோடு அவனுக்கு பின்னால் பார்த்து, சுவரைத் தாண்டி லேசாக நீட்டிக் கொண்டிருந்த சிவப்பு தொப்பியை கண்டதும், குழந்தையை விட்டுவிட்டு, "இல்ல நரேன்.. நீ அவனோட பிரெண்ட்ஷிப்ப மட்டும் தான் பார்த்திருக்க... ஆனா நான் எட்டு வருஷம் ஒன்னா குடும்பம் நடத்திருக்கேன்... சரியான சைக்கோவா மாறிட்டான்... ஒருநாள் பேய் கதை எழுதணும்னு நட்ட நடு ராத்திரில சுடுகாட்டுல போய் உக்கார்ந்துட்டான் நியாபகம் இருக்கா?" என நரேனை ஏறிட்டாள்...
"அதெப்படி மறக்க முடியும்?" அவள் தோளில் கைபோட்டு தாடையை கொஞ்சலாய் பிடித்த நரேன், "அவனைத் தேடிப் போன அந்த நைட்ல தான நமக்குள்ள இந்த ரிலேஷன்ஷிப்பே வந்துச்சு!" என்றான்....
சுவேதாவும் அந்த இரவை நினைத்து வெட்கப்பட்டுச் சிரிக்க, "நீ அவனை நினைச்சு பயப்படாத.. அதான் விவாகரத்து வாங்கி ரெண்டு மாசம் ஆச்சுல! இனி அவனால எதுவும் பண்ண முடியாது.." என்று நம்பிக்கையூட்டினான்...
"ஆனா 'குழந்தைய வாரத்துக்கு ஒருதடவை நேருல வந்து பார்க்கலாம்'னு அவனுக்கு கோர்ட் ஆர்டர் குடுத்துருக்கே? சன்டே ஆனா போதும் காலையிலேயே வந்து நின்னுடுறான்.. பிச்சைக்காரன் மாதிரி!"
"அங்க தான் அவனோட வக்கீலுக்கு நான் கொடுத்த பணம் விளையாடியிருக்கு..." நரேன் சொன்னதை கேட்டு அவனை விளங்காமல் பார்த்தாள் சுவேதா...
அவனும் அதைப் புரிந்துகொண்டு, "கோர்ட் ஆர்டர் படி குழந்தைய அவன்கிட்ட கூட்டிட்டு போய் காட்ட வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்ல... அவனே வந்து பார்க்கத் தான் பர்மிஷன் கேட்டுருக்காங்க.." என்றான்...
"அப்போ...!" சுவேதா புரிந்தும் புரியாமலும் இழுக்க, "இனி குழந்தைய பார்க்கணும்னு ஆசைப்பட்டா! வாராவாரம் அவன் தான் வரணும்... நியூயார்க்குக்கு.." என்றான், தன் நண்பனை ஏமாற்றிய வெற்றிச் சிரிப்போடு...
சுவேதா உச்சபட்ச சந்தோஷத்தில் சட்டென நரேனை இறுக்கிக் கட்டிக் கொண்டு கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள்...
முத்த கிறக்கத்தில் மிதந்து கரை சேர்ந்த நரேன் அவளை இன்னும் நன்றாக அனைத்துக் கொண்டு, "உன் எக்ஸ்.ஹஸ்பண்ட் சில பப்ளிஷர் கிட்ட காசு வாங்கிட்டு கதை எழுதவும் முடியாம காசை திருப்பி குடுக்கவும் முடியாம பல பிரச்சனையில இருக்கான்.. அவன் வெளிநாடு என்ன? வெளியூர் போறதை பத்திக்கூட யோசிக்க முடியாது... ஆனா நமக்கு இன்னும் பத்தே நாள்ல நியூயார்க்ல கல்யாணம்..." என்றான்...
அவன் அணைப்பில் ஆதரவாக கண்ணை மூடியிருந்த சுவேதா, "இப்போ தான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு நரேன்.." என்றுவிட்டு ஆசைகளோடு இமைகளை விடுவிக்க, அவள் கண்முன்னே குழந்தையை தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி பதுங்கி பதுங்கிப் போய்க் கொண்டிருந்தான் அவள் முன்னால் கணவன் சாய்பிரதாப்...
மிரண்டு போன சுவேதா நரேனை உதறிவிட்டு, "அய்யோ என் பொண்ணு! யாராவது பிடிங்க... அவன பிடிங்க..." என்று கத்தினாள்... அவனை பிடிப்பதற்காக கீழே ஓடினாள்... நரேன், அவள் பார்த்த இடத்தைப் பார்த்து பதறிப் போய் அவள் பின்னாலேயே ஓடினான்...
சாய்பிரதாப்பும் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் குழந்தையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கண்முன் தெரியாமல் தப்பித்து ஓட, சத்தம் கேட்டு திடுக்கிட்ட வேலையாட்கள் எல்லாம் பெட்டியை போட்டுவிட்டு பதறிப் போய் அவனை துரத்த ஆரம்பித்தனர்...
பிடிக்க வந்த ஆட்களை எல்லாம் ஆக்ரோஷமாக இடித்துத் தள்ளிவிட்டு கிட்டத்தட்ட காம்பவுண்ட் கேட்டை நெருங்கிய நேரம், திடீரென ஒளிந்திருந்து முன்னால் வந்து குதித்தான் டிரக் டிரைவர்...
'மாட்டிக்கிட்டோம்!' ஒருநோடி பயந்தாலும் குழந்தையை இழந்துவிடக் கூடாது என்ற வெறி மூர்கத்தனமாக மாற, வந்த வேகத்தில் முகத்தில் ஒரு குத்துவிட்டான்...
மூக்கு உடைந்து இரத்தப் போக்கினால் டிரைவர் தரையில் துடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சுவேதா ஓடி வரும்போது, சாலையில் ஓரமாய் நிறுத்தியிருந்த தன் காரில் குழந்தையை உட்கார வைத்துவிட்டு வண்டியை கிளப்பியிருந்தான் அவளது முன்னால் கணவன்...
"டேய் ராஸ்கல்... நில்றா..." சுவேதா பயமும் கோபமுமாய் கத்திக்கொண்டே சாலையில் ஓட, டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தை, "அப்பா.. அம்மா ப்பா... அம்மாவையும் கூட்டிட்டு போலாம்..." என்றாள் பிஞ்சு மொழியில்...
சாய்பிரதாப்பினால் பேசவே முடியவில்லை... பலமாக மூச்சு வாங்கியபடி, சைடு மிரரில் கவனித்தான்... நரேனின் கார் தரையில் தேய்த்துக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தது...
பதற்றத்தில் நடுங்கும் கையோடு வண்டியை இன்னும் வேகமாக விரட்டிக் கொண்டே மறுபக்கம் குழந்தைக்கு சீட் பெல்ட்டை மாட்டிகிட்டு, "அம்மா வேணாம்... சரியில்ல... உனக்கு நான்.. எனக்கு நீ... வேற யாரும் வேண்டாம்.. இந்த ஊரே வேண்டாம்... எங்கயாவது போயிடலாம்.." சொல்லிக்கொண்டே கவனத்தை சாலைக்கு திருப்பி, பிரதான சாலையில் அதிரடியாக நுழைய, இதை எதிர்பார்க்காமல் அதிவேகமாக வந்து காரில் மோதியது ஒரு லாரி..
சாய்பிரதாப்பின் கார் இரவின் நிசப்தத்தை கிழித்து பெருத்த சத்தத்துடன் தடதடவென உருண்டு கடைசியில் தலைகீழாக கவிழ்ந்து அடங்கியது... ஓடி வந்து கொண்டிருந்த சுவேதா விபத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி தாளாமல் அங்கேயே சரிந்து விழுந்து விட்டாள்... நரேன் காரை நிறுத்திவிட்டு தலைதெறிக்க ஓடினான்....
அனைத்தும் கண்மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்தது. கார் கண்ணாடிகள் நொருங்கிப் போய் சாலை எங்கும் சிதறிக் கிடந்தன... அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் கூச்சலோடு புகையும் காரை நோக்கி ஓடி வந்தனர்....
சீட் பெல்ட் போடாததால் சாய்பிரதாப்பிற்கு தலையில் பலமான அடி... இடது கையிலும் எதோ ஒரு காலிலும் எழும்பு முறிந்திருந்தது... எக்கச்சக்க இடங்களில் வெட்டுக்கள் விழுந்து இரத்தக் கிளரியாய் கிடந்தான்... நெற்றிக் காயத்திலிருந்து வெளியே வந்த இரத்தம் தலைமுடிகளுக்குள் நுழைந்து கார் மீது சொட்டிக் கொண்டிருந்தது... அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத உடம்பு தன்னை மீறி நடுங்க, தலைகீழாக விழுந்து கிடந்ததில் மூச்சு விடவே மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் சிரமப்பட்டு தலையை திருப்பி பக்கத்தில் கிடந்த பெண் பிள்ளையை கவனித்தான்...
முறையாக சீட் பெல்ட் போடப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அதிகம் அடிபடாத அவளும் இவனைப் பார்த்து நிறுத்தா அழுகையோடு விக்கி விக்கி, "அ..ப்..பா..." அழுத்தி உச்சரிக்க, எவ்வளவோ முயற்சித்தும் இறுதியில் தன்னைமீறி மெதுமெதுவாய் இமைகளை மூடினான் சாய்பிரதாப்...
சுற்றி எங்கும் கருமை சூழ்ந்தது... எதையுமே பார்க்க முடியாமல், வானும் இல்லாத தரையும் இல்லாத புவியீர்ப்பு விசையற்ற இருட்டுக்குள் எங்கோ மிதப்பது போலிருந்தது... உடலைக்கூட பார்க்க முடியவில்லை... ஆனால் அதீத வலியை உணர முடிந்தது... அது உடல் எங்கும் பரவியிருந்தது...
திடீரென அவை நகர ஆரம்பித்தன... பரவியிருந்த வலி எல்லாம் சுருங்கிச் சுருங்கிச் கடைசியில் ஒரே புள்ளியில் ஒன்றாக சேர்ந்து சுறுக்கென குத்த, "ஸ்.. ஆஆஆ..." என கழுத்தை பிடித்துக் கொண்டு கண்ணை திறந்தான் பிரதாப்...
அதிர்ச்சி!!! அதிர்ச்சி!!! கண்ணில் பட்ட எல்லாமே அதைத் தான் உண்டாக்கியது... விபத்து நடந்து நிமிடம் கூட ஆகாத நிலையில், ஹாஸ்பிடல் ஒன்றின் அறையில் அமர்ந்திருந்தால் வேறு எப்படி இருக்கும் அவனுக்கு?
நிகழ்ந்த விபத்தின் தாக்கம் குறையாமல் வாய் வழியாக மூச்சை பலமாக இழுத்து இழுத்து விட்டு, வலி ஏற்பட்ட கழுத்துப் பகுதியில் கைவைத்து அழுத்திக் கொண்டே பேயைப் பார்ப்பது போல சுற்றி முற்றிப் பார்த்தான்...
பக்கத்தில் நின்று பின்னங் கழுத்தில் ஊசிப் போட முயற்சி செய்திருந்த லேடி டாக்டர், "பிரதாப்!! ஆர் யூ ஆல்ரைட்?" அவனது திடீர் மாற்றத்தால் பயந்து போய் கேட்டாள்...
அவன் காதிலேயே வாங்கவில்லை... குழந்தையைத் தேடி அவளை காணவில்லை என்றதும் அறையை விட்டுவிட்டு வேகமாக அவள் பக்கம் திரும்பி, "எ.. என்.. பொண்ணு... என் பொண்ணு எங்க?" உடல் நடுங்க பரிதவிப்போடு திக்கினான்...
டாக்டர் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், "உங்களுக்கு ஒண்ணுமில்ல பிரதாப்... ஈஸி.. ஈஸி... இந்த இன்ஜெக்சன் போட்டா! எல்லாம் சரியாகிடும்... ஓகே. ஜஸ்ட் ரிலாக்ஸ்.." தட்டிக்கொடுத்து அவன் கையை விலக்கி ஊசியை குத்திவதில் குறியாய் நின்றாள்...
பிரதாப்பிற்கு ஏதோ தவறாக தோன்றியது... எதிர்பார்க்காத நேரத்தில் அவளை பிடித்து தள்ளிவிட்டு, அறையின் கதவை படாரென திறந்தான்... மீண்டும் அதிர்ந்தான்....
வெயிட்டிங் ஹாலை ஆக்கிரமித்திருந்தவர்கள் எல்லாருமே வெளிநாட்டவர்கள்!
'என்ன இடம் இது?'
அனைவரும் இவனை மிரட்சியாக பார்க்க, பிரதாப்பினாலும் எதையும் யோசிக்க முடியவில்லை... தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்... எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் பைத்தியத்தை பார்த்தது போல பயந்து ஒதுங்க, குழப்பமும் கேள்வியும் கோபமாக மாற ஆரம்பித்தது அவனுக்கு...
ரிசப்ஷனிஸ்ட் கண்ணில் மாட்டியதும், அவசர அவசரமாக ஓடிச் சென்று, "எனக்கும் என் பொண்ணுக்கும் ஆக்ஸிடென்ட்... எங்க அவ?"
பதறி எழுந்தவள் பதில் சொல்லாமல் நடுங்க, "கேக்குறேன்ல... வேர் இஸ் ஷி?"ரௌத்திரமாய் டேபிளை தட்டினான் ..
பயந்து போய் பின்னால் நகர்ந்து, "டாக்டர்... டாக்டர்... செக்யூரிட்டி..." அலற ஆரம்பித்தாள் வெள்ளைக்கார ரிசப்ஷனிஸ்ட்...
"ஹே! வாட்ஸ் யூவர் ப்ராப்ளம்?" செக்யூரிட்டி பாய்ந்து வந்து அவனைப் பிடிக்க, ஒரே உதறலில் அவரை கீழே தள்ளிவிட்டு, "என் பொண்ணை எங்கடா வட்சிருக்கீங்க?" காது கிழியும் அளவிற்கு கோபத்தில் கொப்பளித்தான் சாய்பிரதாப்...
அவன் பின்னாலேயே ஓடி வந்து மூச்சிரைத்த டாக்டர், "பிரதாப்.. பிளீஸ் காம் டவுன்... உங்களுக்கு குழந்தையே கிடையாது.. எல்லாம் உங்க கற்பனை..."
"லூசாடி நீ??" ஆத்திரத்தில் அவளை அடிக்கவே போய்விட்டான்.. ஆனால் செய்யவில்லை... மாறாக அவளுக்கு பின்னால் கட்டிடத்தின் ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடியில் விழுந்திருந்த லேசான தன் பிம்பத்தைப் பார்த்து ஸ்தப்பித்து நின்றுவிட்டான் அப்படியே!
கண்ணாடியை நோக்கி தயக்கமாய் நகர்ந்தவனை செக்யூரிட்டி தடுக்க முனைய, வேண்டாம் என தடுத்துவிட்டாள் லேடி டாக்டர்...
கண்ணாடியை நெருங்க நெருங்க கொஞ்சம் தெளிவாக தெரிய ஆரம்பித்த தன் பிம்பத்தைப் பார்த்து பிரம்மித்துப் போனான் பிரதாப்... அவன் முகத்தில் அடர்த்தியான தாடி மீசை இல்லை.... அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருந்தது... மிகச் சுத்தமான உடை அணிந்து அதை 'டக் இன்' செய்திருந்தான்... எல்லாவற்றுக்கும் மேலாக அவன் உடலில் எங்குமே காயமில்லை... காயம்பட்ட தடமும் இல்லை... நம்பமுடியாமல் நெற்றிப் பொட்டை நடுக்கத்தொடு தொட்டுத் தடவினான் சாய்பிரதாப்...
தன் பிம்பத்தை தானே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணாடியைத் தாண்டி வெளி உலகம் கவனத்தில் விழ, என்ன சொல்வதென்றே விளங்கவில்லை...
பார்ப்பதை ஏற்றுக் கொள்ளத் தோனாமல் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்து விழியை அகல விரித்தான்... அவன் கண்முன்னால் நிலவு வெளிச்சத்தில் நகர்ந்து கொண்டிருந்த நதியைத் தாண்டி, பல பிரம்மாண்ட பன்மாடி கண்ணாடிக் கட்டிடங்கள் கண்ணை கூசும் வெளிச்சத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு கம்பீரமாய் எழுந்து நின்றிருந்தன...
பார்வையை அதிலிருந்து எடுக்க இயலாமல், "நான் எங்
க இருக்கேன்?" டாக்டர் பின்னால் வந்து நின்றதை உணர்ந்து கேட்டான்...
அவள் அழுத்தம் திருத்தமாய் பதிலளித்தாள்..
"மன்ஹாட்டன்... நியூயார்க்..."

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 2
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.