சுவேதாவிற்கு இதயமே நின்றது போலிருந்தது... வேகமாக வண்டியை செலுத்தி ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையை தாண்டி தங்களது 'இன்வுட்' டவுனுக்குள் நுழைந்திருந்தாலும் கூட அவளால் இப்போதும் அதை மறக்க முடியவில்லை...
சாய்பிரதாப்பின் அந்தப் பார்வை... அப்படி ஒன்றை இதுநாள் வரையில் அவனிடம் அவள் பார்த்ததே கிடையாது... சில நொடிகளிலேயே அவன் பழையபடி பார்வையை திருப்பிக் கொண்டிருந்தாலும், அதுவே அவளுக்கு அவன்மீது பயத்தை ஏற்படுத்தியிருந்தது...
அந்த பயத்தின் காரணமாக, 'டாக்டர் சொன்னபடியே சாய்பிரதாப்பை மனநல மருத்துவனையில் அனுமதித்து விடலாமா?' என்ற எண்ணம் எழ ஆரம்பித்து விட்டது அவளுக்குள்...
தயக்கத்தோடு தலையை திருப்பி அவனை கவனித்தாள் சுவேதா... சாய்பிரதாப் முன்பு போலவே கண்ணாடியில் தலையை சாய்த்து குழந்தையை போல அமைதியாய் அமர்ந்திருந்தான்.. அவளால் நம்பவே முடியவில்லை...
'இவனா? இவனா தன்னை அப்படி ஒரு பார்வை பார்த்தான்? கொலை செய்யப்பட போகிறவனை பார்க்கும் கொலையாளியை போல!' ஒருவேளை அது தன்னுடைய கற்பனையாக இருக்குமோ என்றுகூட யோசித்து தன்னை சமாதானப் படுத்திக் கொள்ளப்பார்த்தாள்...
ஆனால் மூளை அதை நம்ப மறுத்து, 'இப்போதே வண்டியை திருப்பிவிடு' என்றது.. மனமோ 'காதல் கணவனை அப்படி அனுமதித்து விடாதே!' என்று கெஞ்சியது...
மூளைக்கும் மனதிற்கும் நடந்த சண்டையில் தவிப்போடு தத்தளித்தவள் கடைசியில் அந்த முடிவை அவனிடமே விட்டுவிட ஒரு யோசனை செய்தாள்...
சுவேதாவின் கார் கிட்டத்தட்ட அவர்களது வீட்டை நெருங்கியிருந்தது... வரப்போகும் இரண்டாவது வளைவில் நுழைந்தால், அந்தச் சாலையின் எட்டாவது வீடு அவர்களுடையது... சாய்பிரதாப் மட்டும் அதை மறக்காமல் நியாபகம் வைத்திருந்தால், மனநல மருத்துவமனை பற்றிய யோசனையை தூக்கிப் போட்டுவிடலாம் என்று தீர்க்கமாக முடிவு செய்தாள்...
'ஒருவேளை அவனால் அது முடியாமல் போனால்?' நினைக்கும் போதே வண்டி அந்த வளைவில் திரும்பியிருந்தது... ஓரக்கண்ணால் அவனைப் நோட்டமிட்டுக் கொண்டே வண்டியின் வேகத்தை குறைக்காமல் ஓட்டினாள் சுவேதா...
ஒவ்வொரு வீட்டை கடக்கும் போதும் அவள் இதயத் துடிப்பு எல்லையை மீறிக் கொண்டிருந்தது... சாய்பிரதாப்பிடமோ எந்த ஒரு சின்ன மாற்றமும் இல்லை... வேகமாக சென்ற கார் கடைசி வீட்டையும் தொட்டு தன் வீட்டை நெருங்க நெருங்க சுவேதா நடக்கப்போவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்களை இறுக்கிக்கொள்ள, கடைசி நொடியில், "ஹே சுவேதா! வீட்டை தாண்டி போற பாரு..." என்றான் சாய்பிரதாப்...
சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்திய சுவேதா, உள்ளத்தின் மகிழ்ச்சியை வெளியே காட்டுவதை மறைக்க முடியாமல், "சாரி.. கவனிக்கல.." என்றாள் சந்தோஷ சிரிப்போடு...
அவளை வினோதமாக பார்த்தவன், "என்ன ஆச்சு உனக்கு?" என்றான் அவளது திடீர் சந்தோஷத்தால்...
"எனக்கென்ன? நான் நல்லா தான் இருக்கேன்..." சொல்லிக்கொண்டே கேன்ட் பேக்கை எடுத்தவள், கையை உள்ளே நுழைத்து, வீட்டுச் சாவியையும் அவனுக்கான மாத்திரைகளையும் வெளியே எடுத்து அவனிடம் நீட்டினாள்....
"என்ன என்கிட்ட குடுக்குற? நீ வரலையா?" கேள்வி கேட்டாலும் அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொண்டான் சாய்பிரதாப்....
"இல்ல சாய்... உடனே போயாகணும்... ஏற்கனவே ரொம்ப லேட்..."
"எங்க போகனும்?"
"ஆஃபீஸ்க்கு தான்.. முக்கியமான கிளைன்ட் மீட்டிங் ஒண்ணு இருக்கு.. லீவ் சொல்ல முடியல... அதான் டூ ஹார்ஸ் மட்டும் பர்மிஷன் கேட்டுருந்தேன்... நீ வீட்டிலேயே இரு... மீட்டிங் முடிஞ்சதுமே வரப் பாக்குறேன்.. எங்கையேவாது வெளியில போகலாம்... மதியத்துக்கு சாப்பாடு டைனிங் டேபிள்ல வச்சிருக்கேன்.. மறக்காம சாப்பிடு.. முக்கியமா டேப்லெட்ஸ் போட்டுக்கோ!" சுவேதா மூச்சுவிடாமல் ஒப்பித்துவிட்டு பரபரப்பாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தாள்...
சாய்பிரதாப் அவள் சொல்லியதற்கெல்லாம் தலையை ஆட்டி காரை விட்டு கீழே இறங்க, "பாய் சாய்..." உதட்டை குவித்து காற்றில் முத்தமிட்டு நிம்மதியோடு வண்டியை கிளப்பினாள் சுவேதா...
கார் கண்பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றவனை திடுக்கிட வைக்கும்படி பின்னாலிருந்து 'லொல்' என குறைத்தது பக்கத்து வீட்டு நாய்...
நொடியில் பயந்து போனவன், நெஞ்சில் கைவைத்துக் கொண்டே அதன்பக்கம் திரும்பி, "ஒரு நிமிஷம் தூக்கி வாரிப் போட்டுடுச்சி தெரியுமா உன்னால.." என்று செல்லமாய் திட்டினான் நாயை...
சந்தன நிறத்தில் கொழு கொழு உடம்போடு ரோஸ் நிற நாக்கை தொங்கவிட்டு வாலை ஆட்டிய அந்த நாய் அவன் காலுக்கு நடுவே புகுந்து கொஞ்சி விளையாட, நாயை காணாமல் கையில் பூவாளியோடு பின்னால் வந்து சேர்ந்தாள் பக்கத்து வீட்டு கிழவி.. சாரதா....
சாய்பிரதாப் நாயின் ரோமத்தை பாசமாய் தடவிக் கொடுத்துக் கொண்டே, "ஹாய் மேம்.." என்றான் மரியாதை நிமித்தமாக...
நாய்க்கு நேர்மாறாக ஒல்லியான உடல்வாகு கொண்ட சாரதா, "வா பிரதாப்... எப்போ வந்த?" சிரித்த முகமாய் கொஞ்சம் மூச்சு வாங்கியபடி பக்கத்தில் வந்து நின்றார்..
"இப்போ தான் மேம்.. அதுக்குள்ள 'சேசன்' வந்துட்டான்.. அப்படியே நின்னுட்டேன்..."
"நீ வரதை எங்க நிண்ணு பார்ப்பானோ தெரியல! உடனே வெளியில வந்துடுறான்... ஆமா சுவேதா எங்க? காரையும் காணும்?" அக்கம் பக்கம் பார்வையை செலுத்தி கேட்டார்...
"ஆஃபீஸ் மீட்டிங்குனு உடனே கிளம்பிட்டா மேம்..."
"ஒஹ்... ஆனா ரொம்ப பாவம்பா சுவேதா... மூணு நாளா நீ கூட இல்லாம ஆளே ஒருமாதிரி ஆகிட்டா! நீ வேற எதோ டாக்டரையே அடிக்க போயிட்டியாமே! நேத்தி சுவேதா சொல்லிட்டு இருந்தா.. ஒன்னும் பிரச்சனை ஆகிடலையே? எல்லாம் ஓகே தான?" சாரதா கேட்டதுமே சாய்பிரதாப்பின் முகம் மீண்டும் கவலையில் மூழ்கியது...
"ஏன் அப்படி பண்ணேன்னு எனக்கே புரியல மேம்... எதனால எனக்கு இப்படி ஆச்சுன்னு தெரியல... ஒரே பிளாங்க்கா இருக்கு..." என்றான் வருத்தத்தோடு...
அவனை தட்டிக் கொடுத்து தேற்றிய சாரதா, "கவலைபடதா பிரதாப்... கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்... உனக்கு ஒன்னு தெரியுமா! உன் வயசு இருக்கும் போது எனக்கும் இதே பிரச்சனை இருந்துச்சு... ரொம்ப மூர்க்கத்தனமா நடந்துவேன்னு சொல்வாங்க... அதுல பயந்து என் பையனே சின்ன வயசுல என்னைவிட்டு ஓடிட்டான்... எல்லாம் சரியாகும் போது எனக்குன்னு யாருமே இல்ல... அவனை கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. முடியல! அதான் எல்லாத்தையும் மறக்கணும்னு கடைசியில இந்தியாவை விட்டே வந்திட்டேன்..." என்றுவிட்டு கடந்த காலத்தை நினைத்து கண்கலங்க ஆரம்பித்தார்...
முதலில் அதைக் கேட்டு அதிர்ந்தாலும், அவர் கஷ்டபட்டுவதை பார்க்க முடியாமல், "கையில என்ன மேம்? பூவாளி!" என பேச்சை திசைதிருப்பி இயல்புக்கு மாற்ற முயற்சிதான் சாய்பிரதாப்...
அவருக்கும் அது புரியவே கையில் வைத்திருந்ததை தூக்கி ஒருமுறை பார்த்து, "ஆமா பிரதாப்... பூச்செடிக்கு எல்லாம் தண்ணீ ஊத்தனும்னு எடுத்தேன்.. அதுக்குள்ள சேசன் வெளியில ஓடி வந்துட்டான்.." என்றுவிட்டு கண்ணை துடைத்துக் கொண்டார்...
"ஏன் நீங்க பண்றீங்க? வேலைக்கு ஒருத்தங்க வருவாங்களே என்னாச்சு மேம்?"
"அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல பிரதாப்.. ஒரு வாரம் லீவ் கேட்டுருக்கா... புது ஆளுங்களையும் உள்ள சேர்க்க எனக்கு என்னவோ மனசு வரல.. காலம் ரொம்ப கெட்டு கிடக்கு.. அதான் நானே எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கேன்.." சாரதா சொல்லி முடிக்கும்போது சாய்பிரதாப்பின் மொபைல் பாக்கெட்டுக்குள் இருந்து ரிங்டோனை வெளியிட்டது...
அதை வெளியே எடுத்துப் பார்த்தவன் திரையில் நரேன் என்ற பெயரைப் பார்த்ததும், "ஓகே மேம்... யூ கேரி ஆன்.. நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்..." என்றான்...
புன்னகையோடு தலையசைத்த சாரதா, "முடிஞ்சா டின்னருக்கு வாங்களேன் ரெண்டு பேரும்.." என்று அழைப்பு விடுத்தார்...
சாய்பிரதாப், "ஹ... சாரி மேம்.. சுவேதா இன்னைக்கு வெளியில போகலாம்னு சொல்லிருக்கா.." தயக்கத்தோடு இழுக்க,
"அப்போ நாளைக்கு வாங்க.." அன்புக் கட்டளையிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார் சாரதா...
சாய்பிரதாப் அழைப்பு துண்டிக்கப்படப்போகும் கடைசி நொடியில் அதை தவறவிட்டு விடாமல் ஏற்று, "டேய் ராஸ்கல்... நேருல வருவன்னு பார்த்தா! இப்படி போன்ல வந்துருக்க! எங்கடா இருக்க?" என்றான் எடுத்த எடுப்பிலேயே...
அந்தப் பக்கம் இருந்தவன், இவன் கோபத்தை கண்டு கொள்ளாமல், "எங்க நீயே கண்டுபிடி பார்ப்போம்.." என வீம்புக்கு விளையாட,
"என்ன? பார்ல மூக்கு முட்ட குடிச்சிட்டு வீட்டுக்கு போக வழி தெரியாம உட்கார்ந்துருக்கியா?" வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டே பதிலடி கொடுத்தான் சாய்பிரதாப்...
"டேய்..! டேய்...! அடங்குடா... இல்ல, அடுத்த தடவை ஜானுகிட்ட சொல்லி எக்ஸ்ட்றா ரெண்டு ஊசியை சொருக சொல்லிருவேன்..."
"என்ன ஜானுவா? யார் அது?" நடப்பதை நிறுத்தி தயங்கி நின்று கேள்வி எழுப்பினான் சாய்பிரதாப்...
"எது யாரா? டேய் நல்லா தான இருக்க? ஒன்னும் பிரச்சினை இல்லையே?" நரேனின் குரல் திடீரென சீரியஸை மாற,
"ம்ச்.. அத விடு.. யார் அந்த ஜானு?" மீண்டும் அழுத்திக் கேட்டான் சாய்பிரதாப்...
"உனக்கு ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்க டாக்டர்டா.. ஷி இஷ் மை ப்ரெண்ட்... நான் தான் அவகிட்ட உன்னை காட்டச் சொல்லி சுவேதா கிட்ட சொன்னேன்.. மறந்துட்டியா?" என்றவன் ஜானு தன்னிடம் இதற்கு முன்னால் சொல்லியிருந்த விஷயங்கள் நினைவுக்கு வரவும், "சரி.. சரி. அதைவிடு... நான் எங்க இருக்கேன்னு கேட்டீல?! இந்தியால..." என்று சாய்பிரதாப்பை யோசிக்கவிடாமல் தடுத்தான்...
சாய்பிரதாப்பும் அவன் நினைத்தது போலவே, "அங்க எப்போட போன?" என்று சுவாரஸ்யமாக கேட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தான்...
"ரெண்டு நாள் ஆச்சுடா... ஒரு சின்ன பிராஜெக்ட் விஷயமா வந்தேன்... வேலை முடிஞ்சுது.. ஆனா மார்னிங் தான் பிளைட்... செம போர் இங்க! பேசாம நீ ஒரு கதை எழுதனும்னு சொல்லிட்டு இருந்தியே! அத சொல்லேன்... கேட்போம்.." நரேன் சொன்னதை அலட்சிய சிரிப்போடு கேட்டுக் கொண்டே சாவியை நுழைத்து கதவை திறந்த சாய்பிரதாப், அடுத்த நொடியில் அச்சத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்...
சாய்பிரதாப் வீட்டுக்கு வெளியே இல்லை.. உள்ளே நின்றிருந்தான்... அவன் பிடித்திருந்த கதவு வெளியே போவதற்காக திறக்கப்பட்டிருந்தது... நொடியில் இதயம் தாறுமாறாக துடிக்க, வேகவேகமாக மூச்சை இழுத்துவிட்டு பயத்தில் முன்னும் பின்னும் மீண்டும் மீண்டும் பார்த்தான்...
பூச்செட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த சாரதா அவன் நிலையைப் பார்த்ததும், "பிரதாப்... என்னாச்சு? ஒன்னும் பிரச்சனை இல்லயே?" பதறிப் போய் கேட்டார்...
பதில் சொல்ல முடியாமல் திணறியவன், கிட்டத்தட்ட அனைத்துச் செடிகளும் தண்ணீரில் காலை கழுவியிருந்ததை கண்டதும், மேலும் பலமாய் மூச்சை உள்வாங்கி வெளியேற்றி, "யா மேம்.. ஐம்..ஐம் ஓகே.." உடனடியாக கதவை அறைந்து சாற்றினான்...
காதில் அழுத்தப்பட்டிருந்த மொபைலில், நரேனின் குரல், "ஹலோ.. டேய்.. சீக்கிரம் கிளைமாக்ஸ் சொல்லுடா.. சஸ்பென்ஸ் தாங்கல.." என அவசரப்படுத்த,
அதை காதில் ஏற்றிக் கொள்ளாமல், "நான் அப்புறம் கூப்பிடுறேன்..." அழைப்பை துண்டித்து விட்டு கிட்சனை நோக்கி ஓட ஆரம்பித்தான் சாய்பிரதாப்...
வெளிரிப்போன முகத்தோடு டேபை திறந்து வழிந்து ஓடும் அளவிற்கு கிளாஸில் தண்ணீரை பிடித்தவன், சுவேதா கொடுத்த மாத்திரைகளை உடைகளுக்குள் தேட, அது ஏற்கனவே டைனிங் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்தது...
வந்த அழுகையை பல்லை இறுக்கிக் கடித்து கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் கையால் மாத்திரைகளை கிழித்து மொத்தமாய் வாய்க்குள் போட்டு மடமடவென தண்ணீரை குடித்தான்..
மருந்தின் வீரியம் கொஞ்ச நேரத்திலேயே அவனை தள்ளாட வைக்க, அரைமயக்கத்தில் தடுமாற்றத்தோடு நடந்தவன், உத்திரத்தை பார்த்தபடி சோஃபாவில் சரிந்து அமர்ந்தான்....
பின் தன்னை மீறியே இமைகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தவனின் தூக்கத்தை வீட்டுக்குள் கேட்ட லேசான ஒரு சத்தம் கலைத்தது....
கண்களை பாதி திறந்து மொபைலை கவனித்தான்... அது மாத்திரை போடாமலேயே நன்றாக தூங்கியது... நிமிர்ந்து அமர்ந்து அக்கம் பக்கம் கவனிக்க, கிட்சன் டேபின் நுனிக்கு ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்த வந்த சில தண்ணீர் துளிகள் அடுத்தடுத்து வரிசையாக தற்கொலை செய்து கொண்டிருந்தன..
முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு எழுந்த சாய்பிரதாப் நேராக சென்று அதை தடுத்து நிறுத்த, சத்தம் மட்டும் நிற்கவே இல்லை... குழப்பத்தோடு வீடு முழுவதையும் கவனித்தான்... டிவி ஓடவில்லை... பணிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தின் முட்கள் சத்தம் எழுப்பாமல் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டிருந்தன...
சாய்பிரதாப் காதை கூர்மையாக்கி உற்று கவனிக்க, கேட்டுக் கொண்டிருந்த சத்தம் வந்தது வீட்டின் பேஸ்மென்ட் பகுதியிலிருந்து... தயக்கத்தோடு நெருங்கிச் சென்றவன் அழுத்தமாய் எச்சிலை முழுங்கிவிட்டு கதவின் கைப்பிடியில் கையை வைத்தான்...
கதவை திறந்து விழுந்து கிடந்த படிக்கட்டில் பத்திரமாய் கால்வைத்து, கீழே இறங்க இறங்க அந்தச் சத்தம் ஒரு குரலாக மாற ஆரம்பித்தது... அதுவும் தூசிப் படிந்த அந்த பேஸ்மென்ட்டின் ஒரு மூலையில் இருந்த சின்ன அறைக்குள் இருந்து தான் வந்தது...
சத்தம் எழுப்பாமல் மிக மெதுவாய் நகர்ந்து சென்று அந்த அறையின் கதவில் காதை அழுத்த, குரல் இப்போது தெளிவாய் கேட்க ஆரம்பித்தது சாய்பிரதாப்பிற்கு...
அந்தக் குரல்... ஒரு குழந்தையின் குரல்... பெண் குழந்தையின் குரல்.. அது எதையோ சொல்லியது.. சொல்லிக் கொண்டே இருந்தது... சாய்பிரதாப் துடிதுடித்துப் போய் மேலும் அழுத்தமாய் கதவில் காதை பதிய, கு
ளறுபடியான அந்தக் குழந்தையின் வார்த்தைகளுக்கு நடுவே ஒன்றே ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாய் காதில் விழுந்தது....
"அப்பா...."

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 4
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.