ஆறு மாதங்களுக்கு முன்பு :-
கிட்டத்தட்ட மன்ஹாட்டன் சிட்டியின் அவுட்டரில் அமைந்திருந்த அந்த 'நைட் பியூட்டி' என்ற பார் நள்ளிரவு நேரத்தில் கலர்கலரான மின்விளக்குகளின் வெளிச்சத்தில் கூத்தாடிக் கொண்டிருந்தது...
உள்ளே வட்டவட்டமாய் போடப்போட்டிருந்த அநேக டேபிள்களில், வெளியே தெரியும் உடலின் பாகத்தில் பச்சைக் குத்திய முரடர்களின் தனித்தனிக் கூட்டம் தலைக்கு ஏறிய போதையில் தள்ளாட்டத்தோடு சாய்ந்திருந்தது...
முகர்ந்தாலே மூளையை மழுங்கச் செய்யும் அளவிற்கு மதுவின் வாடையும் நிக்கோடின் புகையும் உள்ளுக்குள் பலமாய் உலவ, அதோடு சேர்ந்து சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஆபாசம் என்று சொல்லிவிட முடியாத உடையணிந்த வெள்ளை முடி கொண்ட ஒருத்தி ஓரமாய் இருந்த மேடையில் கவர்ச்சியாக உடலை வளைத்து நெளித்து கம்பியை பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள்....
சுவரோடு சுவராக பதியப்பட்டிருந்த அலமாரியில் மது பாட்டில்களின் அணிவகுப்பு கண்ணை கூசும் அளவிற்கு தங்க நிறத்தில் ஜொலிக்க, அதற்கு முன்னால் நீண்டிருந்த டேபிளின் பின்னால் சுழலும் ஸ்டூலில் அமர்ந்து ஸ்ட்ராங் பியரை அருந்திக் கொண்டிருந்தான் சாய்பிரதாப்...
அவன் கண்களில் வெறுப்பு ஏகபோகமாக ஏறியிருந்தது.. எவ்வளவோ முயற்சித்தும் அந்த இடத்தை அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை... சீக்கிரமாக இங்கிருந்து வெளியே சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவசர அவசரமாய் மதுவை முழுங்கிக் கொண்டிருந்தான்..
ஆனால் அவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து, கையடக்க கண்ணாடி கோப்பையில் இருந்த காஸ்ட்லி சரக்கை ஒரே மூச்சாக முழுங்கிவிட்டு, "அனதர் ஒன்.." என கையை தூக்கினான் முழு போதையிலிருந்த நரேன்...
"டேய் வேணாம்.. இதோட நிறுத்திக்கோ! கிளம்பலாம் வா... நீ வேற ஏற்கனவே ஃபுல் டைட்ல இருக்க.. அப்புறம் முழுசா வீடு போய் சேர மாட்ட.." சாய்பிரதாப் தடுக்க முற்படும்போதே ஒரு கையால் அவனை சமாளித்துக் கொண்டு, அடுத்த கிளாஸையும் முழுங்கிவிட்டு 'டொக்'கென்று மேசையில் வைத்தான் அவன்...
"உனக்கு வீட்டுக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?" சாய்பிரதாப்பிற்கு இப்போது கோபம் எழ,
நரேன் நிதானமாக சாலட்டை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டு, "உனக்காக தேவதை மாதிரி ஒரு பொண்டாட்டி வீட்டுல வெயிட் பண்ணிட்டு இருப்பா... எனக்கு அப்படியா?? போனதும் குப்புற படுத்து தூங்க வேண்டியது தான்.. இதுக்கு எதுக்கு அவசரப்படனும்?" விரலை ஆட்டி பார்டெண்டரை அழைத்து கண்களில் உத்தரவிட்டான்...
உடலை இறுக்கிய கருப்பு நிற ஜிம் பனியனோடு மொட்டை தலையும் கழுத்து வரை தாடியுமாய் இருந்த பார்டெண்டர் சரக்கை ஊற்றி கிளாஸை நரேனை நோக்கி நகர்த்த, இடையில் புகுந்து வெடுக்கென பிடிங்கிக் கொண்டான் சாய்பிரதாப்...
"யோவ். அவன் தான் கேக்குறான்னா! நீயும் ஊத்தி குடுத்துட்டே இருக்க லூசு மாதிரி.." வந்த கடுப்பில் அவசரப்பட்டு இடம்பொருள் பார்க்காமல் வார்த்தையை விட்டுவிட்டான் சாய்பிரதாப்...
சுற்றியிருந்த ஆட்கள் எல்லாம் சத்தம் கேட்டுத் திரும்பி ஆர்வமாய் வேடிக்கைப் பார்க்க, தாடிக்கார தடியனுக்கு தன்மானம் உச்சந்தலையில் ஏறிக்கொண்டது... அனல் மூச்சோடு பாட்டிலை கீழே வைத்துவிட்டு, சாய்பிரதாப்பை நோக்கி முறுக்கிய உடம்போடு குனிந்து, கோபத்தை அடக்கியதில் சிவந்து போன முகத்தை நெருக்கமாய் கொண்டு வந்தான்....
"இப்போ நீ என்ன சொன்ன?" கணீரென்ற குரலில் வார்த்தைகளை பொடிப் பொடியாய் நசுக்க, உடலை பின்னால் இழுத்துக்கொண்டு பயத்தில் எச்சிலை விழுங்கினான் சாய்பிரதாப்...
"சாரி... அது... அது... அதுவந்து.." தந்தியடித்த வார்த்தைகளை செருமி சரிசெய்து, "அவன் மட்டையாகிட்டா இங்கேயே படுத்துருவான்... அப்புறம் நான் தான் கஷ்டப்பட்டு வீட்டுல கொண்டு போய் விடனும்.. சோ..சோ பிளீஸ் சார் இனிமே குடுக்காதீங்க.."
சாய்பிரதாப் சமாதானம் செய்தும் முறைப்பை குறைக்காமல் கூட்டிக்கொண்டே போனான் தடியன்... சாய்பிரதாப் தப்பிக்க வழி தெரியாமல், "அதான் சாரி கேட்டுட்டனே!?" பவ்யமாய் கெஞ்ச, நரேன் அடக்கி வைத்திருந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்துச் சிரித்தான்....
"சார்ல்ஸ் போதும் உன் விளையாட்டு... விடு அவனை.. அழுதுற போறான்..." தடியனின் கைகளில் உரிமையோடு தட்ட, அவனும் நரேன் சொன்னதை கேட்டு உடலை நிமிர்த்திக் கொண்டான்...
"என்ன விளையாட்டா??" சாய்பிரதாப் நடுக்கத்தை குறைத்துக் கொண்டு ஒழுங்காய் அமர,
நரேன் சிரிப்பை நிறுத்திவிட்டு, "பிரதாப் மீட் மை நியூ ப்ரெண்ட் சார்ல்ஸ்.." தடியன் பக்கம் பார்வையை மாற்றி, "சார்ல்ஸ் நான் சொன்னேன்ல! என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்... சாய்பிரதாப்.."
"ஹ்ம்ம்.. பார்த்தாலே தெரியுது.. இந்தியன்..."
சாய்பிரதாபிற்கு இப்போதும் பயம் போகவில்லை... இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தயக்கமாய் கையை நீட்டி, "ஹாய்..." என கஷ்டப்பட்டு புன்னகைத்தான்...
ஆனால் பதிலுக்கு தடியன் கை கொடுக்கவில்லை... "இந்த இடத்தில வேற யார்கிட்டையும் இப்பிடி கிறுக்கு தனமா பேசிடாத! அப்புறம் வீட்டுக்கு பார்சல்ல தான் போவ..." என்று மென்மையான வார்த்தைகளில் மிரட்டினான்...
சாய்பிரதாப் பதில் பேச முடியாமல் அஷ்டகோணலாய் சிரித்து வைக்க, அவனுக்கு பின்னால் பாரின் கதவை திறந்து உள்ளே நுழைந்த போலீஸ்காரர் ஒருவரை பார்த்ததும், "இவன மாதிரி ஆளுங்களை எல்லாம் இனிமே இங்க கூட்டிட்டு வராத.." நரேனின் காதில் ரகசியமாய் உத்தரவிட்டு, உடனடியாக அவரை நோக்கி நகர்ந்து விட்டான் சார்ல்ஸ்...
முதலில் அந்த போலீஸ் அதிகாரி பாரை முழுவதுமாக நோட்டமிட்டுக் கொண்டே அவனிடம் ஏதோ கேட்டார்... அதற்கு சார்ல்ஸ் பவ்யமாக ஏதோ பதில் தந்தான்... பின் அவரை முன்னால் நடக்கவிட்டு பின்தொடர்ந்தவன், ஆடிக் கொண்டிருந்தவளுக்கு பின்னால் இரண்டு முரடர்களின் பாதுகாப்பில் இருந்த அறையின் கதவை திறக்க சிக்னல் கொடுத்தான்.. இருவரும் அந்த அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் கதவை மூடிவிட்டான் வெளியே நின்றிருந்ததில் ஒருவன்...
"அவன் என்ன சொன்னான்?" கதவை பார்த்துக் கொண்டிருந்த நரேன் சாய்பிரதாப்பின் குரலை கேட்டு திரும்பினான்...
"என்ன?"
"இல்ல... போகும் போது அவன் உன்கிட்ட என்னவோ சொன்னானே!?"
"அதை கண்டுக்காத..." அலட்சியமாய் கேள்வியை உதறித் தள்ளிவிட்டு, "இந்த பாரே அவனோடது தான்... அவன்கிட்ட போய் ஏன்டா இப்படி நடந்துகிட்ட?" என்றான் நரேன்...
"பின்ன! எனக்கு இந்த இடமே சுத்தமா பிடிக்கல... அவனும் அவன் மண்டையும்... வா நாம போகலாம்..."
"டேய் கொஞ்சம் மெதுவா பேசுடா... அவனோட ஆளுங்க காதுல மட்டும் விழுந்துச்சு! என்னையும் சேர்த்து இங்கேயே பொதைச்சிடுவானுங்க... நல்லவேளை சார்ல்ஸ் இன்னைக்கு நல்ல மூட்ல இருந்தான்.. இல்ல..." பயமுறுத்தும் தோணியில் சொல்லிக்கொண்டே போனவன் திடீரென எதையோ பார்த்து மிரண்டு போய், "பிரதாப் என்னடா பண்ற?" என்றான் பயத்தில் உள்ளடங்கிப் போன குரலில்...
அவனது திடீர் மாற்றத்தில் குழம்பிப் போய், "நான் என்னடா பண்ணேன்?" என்றபடியே நரேனின் பார்வை போகும் இடத்தை நோக்கி பார்வையை நகர்த்த, அங்கே நேராக தொங்கிக் கொண்டிருந்த சாய்பிராதாப்பின் இடது கை, அவனை மீறி மறைவாய் பீர் பாட்டிலை இறுக்கிப் பிடித்து தாக்குவதற்கு தயாராக காத்திருந்தது சார்ல்ஸ் முறைத்த போதிலிருந்தே!
பார்த்ததும் பதறிப் போய் பாட்டிலை இரண்டு கையாளும் பிடித்து பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு அளவுக்கு அதிகமாய் மூச்சை சுவாசித்துக் கொண்டு நரேனை ஏறிட்டான் சாய்பிரதாப்...
நரேன் யோசிக்க அவகாசம் எடுக்காமல் அடைத்துக் கொண்ட நெஞ்சோடு, "நீ சொன்னது தான் சரி... வா நாம கிளம்பிடலாம்..." கார்டை தேய்த்து காசை கட்டிவிட்டு உடனடியாக அவனை வெளியே அழைத்து வந்துவிட்டான்...
சிறிது நேரத்திற்கு பிறகு சாய்பிரதாப் சாலையில் கவனத்தை வைத்து நரேன் தங்கியிருக்கும் வீட்டை நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருக்க, பின்னால் உட்கார்ந்திருந்தவனால் தான் பார்த்ததை இப்போதும் கிறகிக்க முடியவில்லை...
'இவன் மட்டும் அவனை அடிச்சிருந்தா என்ன ஆகிருக்கும்?' கற்பனை செய்து பார்க்கவே 'பக்'கென்று இருந்தது நரேனுக்கு.
ஆனால் பாரை விட்டு வெளியே வந்ததில் இருந்து சாய்பிரதாப் அதைப் பற்றி வாயையே திறக்கவில்லை... நரேனுக்கு தெளிவுபடுத்திக்கொள்ள ஆசையிருந்தாலும் கேட்க பயமாக இருந்தது... 'இப்படி பட்ட ஆளுக்கு ஆர்டிஃபிஷியல் லிவ்விங் பாக்டீரியா இஞ்செக்ட் பண்ணா என்னவெல்லாம் பண்ணுவானோ தெரியலையே?'
யோசனைக்கு இடையிலேயே நரேனின் வீடும் சீக்கிரமாகவே வந்துவிட, வேகத்தை குறைத்து அந்த அப்பார்ட்மெண்ட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினான் சாய்பிரதாப்...
பின்னால் அமர்ந்து வந்திருந்தவன் நினைத்ததை கேட்க முடியாமல், பார்த்ததை மறக்கவும் முடியாமல் மொத்தமாய் இறங்கிப் போன போதையில், "பாய்.." ஒரே வார்த்தையில் நகர,
அவன் கொஞ்சம் தள்ளிச் சென்றதும், "நரேன்.." என்று அழைத்தான் சாய்பிரதாப்...
அவனும் நடையை நிறுத்தித் திரும்பிப் பார்க்க, "பாருக்கு அந்த போலீஸ் வந்ததும் சார்ல்ஸ் ஏன் அவரை தனியா கூட்டிட்டு போனான்?" கதாசிரியன் என்ற முறையில் ஆர்வத்தையும் சுய கற்பனையையும் அடக்க முடியாமல் கேட்டான் சாய்பிரதாப்...
நரேனுக்கும் அது நன்றாகவே புரிய, "அங்க அவன் நடத்துறது வெறும் பார் மட்டுமில்ல... சில இல்லீகள் பிசினஸூம் தான்.. அதை கண்டும் காணாம இருக்க போலீஸ்க்கு வாரா வாரம் கமிஷன் கொடுப்பான்.. அதை வாங்க தான் அந்த போலீஸ்காரன் வந்தான்..." என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்...
சாய்பிரதாப்பும் செல்ஃப் பட்டனை அழுத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி விரட்டினான்....
தற்போது :-
நைட் லாம்ப்பின் மெல்லிய மஞ்சள் பூசிய ஆரஞ்சு நிற வெளிச்சத்தின் காவலில் போர்வையின் துணையின்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சுவேதா...
சாய்பிரதாப் திருந்திருந்த ஜன்னல் வழியாக அறையும் குறையுமாய் அறைக்குள் நுழைய முற்பட்ட நிலவு வெளிச்சத்தை மறைத்து, முதுகை காட்டியபடி முதுகெலும்பை வளைக்காத விரைப்போடு நின்றிருந்தான்...
ஜன்னல் வழியாக சாரதாவின் வீடு கம்பி வேலிகளை ஒட்டி வளர்க்கப் பட்டிருந்த செடிகளுக்கு பின்னால் முழுவதுமாக மறைந்து போகாமல் முக்கால் வாசி தெரிந்தது... சாய்பிரதாப்பின் இமைக்கா விழிகள் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன..
இரவு நெருங்கிய உடனேயே அனைத்து ஜன்னல்களையும் அடைத்து வைத்திருந்தார் சாரதா... இருந்தும் படுக்கை அறையின் உள்ளே மட்டும் உயிற்பெற்றிருந்த விளக்கின் வெளிச்சத்தில் காதில் பொருத்திய மொபைலோடு சாரதா அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தது நிழல் உருவமாக வெளியே தெரிந்தது...
அந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, "நீ சுவேதாவை கொலை பண்ண போறியா?" என்ற குரல் பின்னாலிருந்து எழுந்தது....
சாய்பிரதாப் நிதானமாக திருப்பிப் பார்த்தான்... கட்டிலுக்கு அந்தப் பக்கமிருந்த அலங்கார மேஜையின் கண்ணாடியில் அவனது சாதுவான உருவம் சுவேதாவின் கைகளை பற்றிக்கொண்டு பக்கத்திலேயே அமர்ந்திருந்தது....
சாய்பிரதாப் மெளனத்தை களைக்காமல் அமைதியாய் நிற்க, "பதில் சொல்லு.." என்று வேண்டினான் அவன்...
ஆழமாய் மூச்செடுத்தபின், "அதை இன்னும் முடிவு பண்ணல..." என்றுவிட்டு மீண்டும் திரும்பி நின்றுகொண்டான் சாய்பிரதாப்...
"வேற என்ன பண்ண போற?" குரலில் பயம் லேசாக பரவ தொடங்க,
தலையை லேசாக ஆட்டி, "சொல்றேன்.." என்றான்... "அதுக்கு முன்னாடி நீ சொல்லு..."
"என்ன சொல்லணும்?"
"இந்த சாரதாவை பத்தி என்ன நினைக்கிற?"
"உனக்கு தான் அவங்கள பிடிக்காதே! அப்புறம் எதுக்கு அவங்கள பத்தி கேக்குற?" கட்டிலில் இருந்து எழுந்து அவன் பின்னால் போய் நின்று கொண்டான்...
"எனக்கு பிடிக்காது... ஆனா உனக்கு நல்ல பழக்கம் ஆச்சே! அதனால கேட்டதுக்கு பதில் சொல்லு..." தலையை திருப்பாமல் மீண்டும் வினவ,
பிம்பமாய் இருந்தவனும் சாரதாவின் நிழல் உருவத்தை பார்த்துக் கொண்டே, "வாழ வேண்டிய வயசுலயே புருஷனை இழந்துட்டாங்க... வாழக்கைன்னு நினைச்சுட்டு இருந்த ஒரே பையனும் ஓடி போயிட்டான்... ரொம்ப பாவம் தான்..." என்றான் உள்ளார்ந்த வருத்தத்தில்...
"அப்போ அடுத்தவங்க நமக்கு குடுக்குற தனிமை ரொம்ப கொடூரம்னு நினைக்கிறியா?"
"நினைச்சாலும் நினைக்கலனாலும் அதுதான் உண்மை.."
சாய்பிரதாப் தலையை லேசாக திருப்பி பாதி முகத்தை மட்டும் அவனுக்கு காட்டி, "நான் சொல்றதை செய்யலன்னா! கூடிய சீக்கிரமே நீயும் அந்த கொடூரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.. அதுவும் வாழ்நாள் முழுக்க மென்டல் ஹாஸ்பிடல்ல..." என்று பயமுறுத்தினான்....
அந்த வார்த்தைகள் பின்னால் நின்றிருந்தவனிடம் நன்றாகவே வேலை செய்தது.. பதிலுக்கு எதுவும் பேசாமல் மீண்டும் சுவேதாவின் பக்கத்தில் போய் அமர்ந்து தலையை தாழ்த்திக் கொண்டான் சில வினாடிகளுக்கு...
பின் குனிந்திருந்த தலையை நிமிர்த்தி,. "சரி... நான் உன்னை தடுக்கல... நீ என்ன நினைக்கிறியோ அதை பண்ணு.. ஆனா.." தயக்கமாக இழுத்தவன் தூங்கிக் கொண்டிருந்தவளின் தலைமுடியை வருடிவிட்டு, "இவ உயிருக்கு மட்டும் எந்த ஆபத்தும் வரக்கூடாது... நிறைய லவ் பண்ணிட்டேன்..." என்றான் வருத்தத்தோடு...
ஆனால் அவனோ அதை கருத்தில் கொள்ளாமல், "மன்னிச்சிடு பிரதாப்... நீ சந்தோஷமா வாழ அதை செஞ்சித்தான் ஆகனும்னா! நான் அதையும் கண்டிப்பா செய்வேன்..." என்றுவிட்டு திருப்பி நிற்க, சரியாக அதே நேரம் சாரதா வீட்டில் ஓவர் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த விளக்கும் தன் இரவு பணியை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றது...
"வா போகலாம்..." ஜன்னல் அருகே நின்றிருந்தவன் கதவை நோக்கி நகர,
"இந்த நேரத்துல எங்க போக போறோம்?" என்றபடியே எழுந்து நின்றான் கண்ணாடியில் தெரிந்தவன்...
"நைட் பியூட்டி பார்..."
"எ.. எ..என்ன!!!! அங்க எதுக்கு???"
"ஒரு சின்ன பர்ச்சேஸ்..." சாய்பிரதாப் நடையை
நிறுத்தாமல் நகர்ந்து போக, பிம்பக்காரனும் வேறு வழியில்லாமல் பயத்தோடு சேர்ந்து நடந்து கண்ணாடியின் விளிம்பை கடந்து அவனோடு கலந்து போனான்...

********************

Author: Sathya
Article Title: அத்தியாயம் - 9
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.