Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

jananisri srinivasan

Administrator
Staff member
Joined
Apr 25, 2024
Messages
21
அழகனே

உலகத்தின்
பாஷைகளை எல்லாம்
உள்வாங்கி ஒலிவடிவமிட்டாலும்

உருகும் உள்ளத்தின்
உணர்வுகளை கலங்கும்
கண்ணீரில் சேர்த்து
உயிரைத் தாங்கி நிற்கும்
என் கண்களின் மொழிகள்
புரியவில்லையா உனக்கு...

உன் இறுகிய அணைப்பிற்குள்
துடிக்கும் இதயத்தின் ஓசைறியும்
ஆசையைக் கூறிட..

உடற்கூறுகளை ஒட்டுமொத்தமாய்
இயக்கி இருகரம் விரித்து
அழைக்காவிடினும்..

அங்க லாவண்யங்களை எல்லாம்
குழைத்துப் பூசி நிற்கும் மோகன
இமைகளின் அழைப்பு
புரியவில்லையா உனக்கு.

மத்தகாசமாய்
மனத்தினை நிறைக்கும்
மன்னவனின் மாசற்ற
நினைவுகளால் அனலெனப்
பற்றி எரியும் என்னின்
அணுக்களை அள்ளிஎடுத்து..

பாயும் விழிகளில் பரவசமாய்
படரவிட்டு நேசத்தை யாசிக்கும்
என் நேத்திரங்களின் காதல்
புரியவில்லையா உனக்கு...

வந்துவிடு ஏங்கும்
ஜீவனில் காதலை
கலந்துவிடு...
 

Author: jananisri srinivasan
Article Title: அழகனே
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top