- Joined
- Apr 25, 2024
- Messages
- 21
ஆண்டாண்டு காலமாய்
அடிமைப்படுத்தி
வைக்கத்தான்
அச்சம் கொண்டு
அடக்கி இருக்கச்
செய்தாயோ அவளை......
யுகங்கள் பல
கடந்த பின்னும்
மூடத்தனங்களுக்குத்
துணை போகத்தான்
மடம் கொண்டு
மாடத்தில் இருக்கச்
செய்தாயோ அவளை...
கவிதை கற்பனைகளில்
வர்ணித்து ...
வடிவழகை வரிகளில்
ஏற்றத்தான்....
நாணம் கொண்டு
நடைபயிலச்
செய்தாயோ அவளை....
பாடசாலைகளிலும்
பல்கலைக் கழகங்களிளும்
பயின்று விடாமல்
இருக்கத்தான்....
பயிர்ப்பு கொண்டு
அடக்கமாய் இருக்கச்
செய்தாயோ அவளை....
அந்தோ பரிதாபம்
அபலைகளே.....
உன்னை நிலவென்று
சொன்னால் ...
நிறைந்து போகாதே...
அவனுக்காக தேயவேண்டும்
என்றே ஆசைப்படுகிறான்...
உன்னை மலரென்றால்
மகிழ்ந்து போகாதே...
அவனுக்காக வாடி..வதங்கி
உதிர்ந்து போவதையே
விரும்புகிறான்....
வேண்டாமே.....இந்த
ஒப்பீடுகளும்...
உவமானங்களும்.....
அச்சம்.. மடம்...
நாணம்.. பயிர்ப்பு..
என்னும் வரையரைகளில்
நிறுத்தி வைக்காதே அவளை...
அன்பும்...அக்கறையும்..
பாதுகாப்பும் கொடுத்து
பத்திரப் படுத்திவை
அவளை....
அமைதியாய் நதிபோல்
ஓடிக்கொண்டிருப்பவளை
அலைக்கழிக்காதே...
ஆழிப்பேரலைகளையும்
தன்னகத்தே கொண்டவள்...
ஆர்ப்பரித்து பொங்கி பெருகி
உலகையே தன்னுள்
மூழ்கச் செய்துவிடுவாள்................♥
அடிமைப்படுத்தி
வைக்கத்தான்
அச்சம் கொண்டு
அடக்கி இருக்கச்
செய்தாயோ அவளை......
யுகங்கள் பல
கடந்த பின்னும்
மூடத்தனங்களுக்குத்
துணை போகத்தான்
மடம் கொண்டு
மாடத்தில் இருக்கச்
செய்தாயோ அவளை...
கவிதை கற்பனைகளில்
வர்ணித்து ...
வடிவழகை வரிகளில்
ஏற்றத்தான்....
நாணம் கொண்டு
நடைபயிலச்
செய்தாயோ அவளை....
பாடசாலைகளிலும்
பல்கலைக் கழகங்களிளும்
பயின்று விடாமல்
இருக்கத்தான்....
பயிர்ப்பு கொண்டு
அடக்கமாய் இருக்கச்
செய்தாயோ அவளை....
அந்தோ பரிதாபம்
அபலைகளே.....
உன்னை நிலவென்று
சொன்னால் ...
நிறைந்து போகாதே...
அவனுக்காக தேயவேண்டும்
என்றே ஆசைப்படுகிறான்...
உன்னை மலரென்றால்
மகிழ்ந்து போகாதே...
அவனுக்காக வாடி..வதங்கி
உதிர்ந்து போவதையே
விரும்புகிறான்....
வேண்டாமே.....இந்த
ஒப்பீடுகளும்...
உவமானங்களும்.....
அச்சம்.. மடம்...
நாணம்.. பயிர்ப்பு..
என்னும் வரையரைகளில்
நிறுத்தி வைக்காதே அவளை...
அன்பும்...அக்கறையும்..
பாதுகாப்பும் கொடுத்து
பத்திரப் படுத்திவை
அவளை....
அமைதியாய் நதிபோல்
ஓடிக்கொண்டிருப்பவளை
அலைக்கழிக்காதே...
ஆழிப்பேரலைகளையும்
தன்னகத்தே கொண்டவள்...
ஆர்ப்பரித்து பொங்கி பெருகி
உலகையே தன்னுள்
மூழ்கச் செய்துவிடுவாள்................♥
Author: jananisri srinivasan
Article Title: ஆண்டாண்டு காலமாய்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ஆண்டாண்டு காலமாய்
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.