- Joined
- Apr 25, 2024
- Messages
- 21
ஆறடி ஆணழகனே...
மயக்கும் மன்மதனே....
புலர்கின்ற காலைகூட
புண்ணாகிபோகுதடா
நீயென் பக்கம் இல்லாததால்...
நிச்சயித்த நாள்முதல்
நிழலாய்த் தொடரும்
நினைவுகளால்
நித்திரையின்றித்
தவிக்கின்றேனே...
உன் கன்னக் குழியில்
இடறிவிழுந்த இதயத்தை
எழவிடாமல் இரும்பெனப்
பிடிக்கிறது ஆசைக்கரங்கள்...
நெஞ்சை நிமிர்த்தி
கம்பீரமாய் நீ நிற்கும்
தோரணையில் என் கர்வங்கள்
அனைத்தும் கனிந்து
காணாமல் போகிறதே...
மங்கையின் தோள்களில்
மாலைசூட்டும் மகிழ்வான
நாளை எண்ணியே மனம்
மயங்கித் தவிக்கின்றேனே..
போதும் வந்துவிடு
நான் இளைப்பாற
இதயம் தந்துவிடு.....❤️❤️
மயக்கும் மன்மதனே....
புலர்கின்ற காலைகூட
புண்ணாகிபோகுதடா
நீயென் பக்கம் இல்லாததால்...
நிச்சயித்த நாள்முதல்
நிழலாய்த் தொடரும்
நினைவுகளால்
நித்திரையின்றித்
தவிக்கின்றேனே...
உன் கன்னக் குழியில்
இடறிவிழுந்த இதயத்தை
எழவிடாமல் இரும்பெனப்
பிடிக்கிறது ஆசைக்கரங்கள்...
நெஞ்சை நிமிர்த்தி
கம்பீரமாய் நீ நிற்கும்
தோரணையில் என் கர்வங்கள்
அனைத்தும் கனிந்து
காணாமல் போகிறதே...
மங்கையின் தோள்களில்
மாலைசூட்டும் மகிழ்வான
நாளை எண்ணியே மனம்
மயங்கித் தவிக்கின்றேனே..
போதும் வந்துவிடு
நான் இளைப்பாற
இதயம் தந்துவிடு.....❤️❤️
Author: jananisri srinivasan
Article Title: ஆறடி ஆணழகனே
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.