- Joined
- Apr 24, 2024
- Messages
- 48
அத்தியாயம் 4
கோக்கனதையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒற்றை கருவேப்பிலை கொத்து. தவமிருந்து கிடைத்தவள்.
வழக்கமாய் குழந்தை வரம் வேண்டுபவர்கள் பேச்சாய் அம்மனைத்தான் வணங்கிடுவார்கள்.
ஆனால், காஞ்சனாவோ வீட்டு பக்கத்திலிருந்த வாமலோசனையிடமே (லக்ஷ்மி) பிள்ளைக் கேட்டு மடியேந்தினாள்.
பக்தையின் அன்பில் மகிழ்ந்த மாதிருவோ (லக்ஷ்மி) பத்தாண்டுகள் கடந்து அருள் பாளித்தாள் காஞ்சனாவிற்கு.
பொன்னை வாரிக்கொடுக்கும் திருமகளே, மகளாய் அவதரித்திருந்தாள் க்ஷீராப்திதனயையின் (லக்ஷ்மி) பால் வண்ண தேகத்தோடு.
லேட்டாக கொடுத்தாலும் கேட்டதைக் கொடுத்த அரிப்பிரியையின் (லக்ஷ்மி) பெயரான கோக்கனதையையே மகளுக்கு சூட்டி நன்றி மறவா உத்தமர்கள் ஆயினர் தெய்வீகன் மற்றும் காஞ்சனா தம்பதிகள் இருவரும்.
சம்பாரிப்பது வெறும் மூன்று வேளைக்கு மட்டுமே சரியாக இருந்த நேரத்தில் பிறந்த கோக்கனதையோ, மூன்றே மாதங்களில் படுத்திருந்த தெய்வீகனின் தொழிலை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தினாள்.
அப்படித்தான் பார்ப்போர் சொல்லினர். ராசியான பெண் குழந்தை. அதுவும் புதன்கிழமை பிறந்த அம்போருகை (லக்ஷ்மி) என்று.
இதனாலேயே, அதிர்ஷடமிக்க கோக்கனதையைக் காண சொந்த பந்தங்களைத் தாண்டி, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலரும் விசிட் அடித்திட வந்தனர்.
முடங்கி கிடந்த தொழில் மீண்டும் புத்துணர்வு கொள்ள, நல்லவர்கள் கூட்டு, சாதிக்காரர்களால் ஏமாந்த தெய்வீகனை நம்பிக்கையோடு மறுபடியும் பீடு நடைப்போட வைத்தது.
பணம் கொழிக்கும் நிலைக்கொண்டாலும், நடுத்தரமான வாழ்க்கை முறையையே பின்பற்றினார் தெய்வீகன்.
காரணம், வருங்காலத்தில் பணம்தான் எல்லாமே என்ற எண்ணத்தில் கோக்கனதை இப்புவியை நோக்கிட கூடாதென்ற திண்ணமே.
கணவரின் கொள்கையை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட காஞ்சனாவும், பணத்தின் அவசியத்தையும் அத்தியாவசியமான தேவைகளையும் உணர்த்தி வளர்த்திட ஆரம்பித்தார் மகளை.
ஆகவே, கோக்கனதையை பொறுத்த வரைக்கும் பேடையின் தந்தை தெய்வீகன் ஐந்து இரும்பு தொழிற்சாலைகளின் உரிமையாளர், அவ்வளவே.
அம்மா காஞ்சனாவோ, வீட்டுத்தலைவி. அவர்களின் குடும்பமோ மூவர் கொண்ட அளவான வரவோடு, மடியில் கனமில்லா நிம்மதியான சிறிய குருவிக்கூடே.
அழகுக்கு குறைவில்லா கோதைக்கு படிப்பும் நன்றாகவே வந்தது. தனியொருத்தியாய் வளர்ந்த தெரிவைக்கு துடுக்குத்தனம் ஜாஸ்தி. அதனால், வாய் கொஞ்சம் நீளம்.
மற்றப்படி சொக்கத்தங்கம். ஒழுக்கத்திலும் சரி, மரியாதையிலும் சரி. அதுவும், அவளை சீண்டிடாத வரைக்கும்.
சிம்பிளி டெல்லிங், அமைதியில் கோக்கனதை ஒரு டால்பின், கோபத்தில் பிராணா.
நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாருமில்லை பாவையவளுக்கு. பத்து பதினைந்து பேர் கொண்ட நட்பு வட்டத்தில் இவளும் ஒருத்தி எனலாம்.
பாலின பேதமன்றி பழகியவளின் நண்பர்கள் அனைவருக்கும் கோக்கனதையின் வீடுதான் குரூப் ஸ்டடிக்கான விசாலமான இடமாகும்.
ஆகவே, அந்திகையின் ஆண் பெண் தோழர்கள் அத்தனை பேரையும் தெய்வீகன் மற்றும் காஞ்சனாவிற்கு தெரியும். அவர்களில் ஒருவனின் தகப்பன் மூலமாகத்தான் குருமூர்த்தியை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது தெய்வீகனுக்கு.
பழசை அசைப்போட்டவர்கள், அவரவர் தரப்பு குற்றங்களுக்கு பிராயச்சித்தமாய் அவர்களின் வாரிசுகளை இணைக்க முடிவெடுத்தனர்.
தெய்வீகனோ பேசி முடித்து வந்த சம்மந்தத்தை பற்றி காஞ்சனாவிடம் கூற, கணவனுக்கு ஏற்ற குத்துவிளக்கே மறுவார்த்தைக் கொள்ளாது சம்மதம் தெரிவித்தார்.
கோக்கனதையோ முதலில் கல்யாணம் வேண்டாமென்று மறுக்க, காரணம் கேட்டறிய முற்பட்ட பெற்றோர்களோ மகள் சொன்ன விடயங்களைக் கேட்டு சிரியோ சிரி என்று சிரித்தனர்.
சமீபத்தில் திருமணம் முடித்த முற்றிழையின் நண்பிகளோ, ஆளுக்கு ஒரு கதையைச் சொல்லி சுந்தரியை அச்சத்தில் தள்ளியிருந்தனர்.
தனிக்குடித்தனம் போன தோழியோ, தினம் புதுசு புதுசாய் சமைத்து போடச்சொல்லும் புருஷன் வீட்டு வேலைகளில் துளியும் உதவிடவில்லை என்றுக் குமுறினாள்.
கூட்டுக் குடும்பத்திற்கு வாக்கப்பட்டவளோ, பிடித்த உணவாகினும் குடும்பத்தாருக்கு ஒம்பாது போனால், சமைக்க மட்டும் தடையல்ல, பெண்ணவள் உண்ணக்கூட தடாதான் என்றாள்.
இதில் வரனொன்று பார்த்து பிக்ஸாசகி போன புண்ணியவதியோ, படித்திருந்தாலும் வேலைக்கு போக வேண்டாம் என்று மாப்பிள்ளை தரப்பு கட்டளைக் கொள்வதாய் தெரிவித்தாள்.
பெண்கள்தான் இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்கள் என்றால், இந்த ஆண் நண்பர்களும் சும்மா கிடக்காமல் ஏத்தி விட்டனர் கோக்கனதையின் வேபனத்தை.
சுமார் மூஞ்சி தோழனோ, பேசி முடித்த வருங்கால மனைவி இப்போதே பெண் நண்பர்களின் நட்புக்கு முழுக்கு போட சொல்லுகிறாள் என்றான்.
மற்றொருவனோ, சந்தேகங்கொண்டு கல்யாணத்தையே நிறுத்த பார்க்கிறாள் மணப்பெண் என்றான்.
இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்ல, வாயாடி கோக்கனதையை தெருவோர கடைக்காரர் கூட சபித்தார், வரப்போறவன் வாய் மீதே ஏறி மிதிக்க போகிறான் என்று.
இது போதாதென்று, காஞ்சனாவும் வீட்டு வேலைகள் செய்யாமல் சோம்பேறித்தனம் கொண்ட மகளிடத்தில், மாமியார் உப்பு வெச்சு தொடையில் திருகி விரட்டி துரத்தி வேலை வாங்கிட போகிறார் என்று பயங்காட்டினார்.
இதையெல்லாம் யோசித்த யுவதிக்கோ, காய்ச்சலோ வந்து விட்டது தெய்வீகன் மாப்பிள்ளை விஷயத்தை சொல்ல. கண்ணீர் கொண்டே கல்யாணம் வேண்டாமென்று கெஞ்சினாள் செல்ல மகளவள் அப்பாவிடம்.
மூக்கு சளியை உறுஞ்சியப்படி கதறிய புதல்வியை கட்டாயப்படுத்திட வேண்டாமென்று முடிவெடுத்த தெய்வீகனோ, சில நாட்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் திருமண மேட்டரை.
காத்து கருப்பைக் கண்ட அரிட்சியில்தான் எதையோ பறிகொடுத்தவள் போலிருக்கிறாள் மகள் என்ற பெத்த தாயோ, தளிரியலை இழுத்து போனார் கோவிலுக்கு சாமி கயிறு கட்டிட.
எது செய்தும் வேளைக்கு ஆகாது போக, ஒரு மாதமாய் சிரிப்பைத் தொலைத்திருந்த மகளிடம் என்னதான் பிரச்சனையென்று பெற்றோர்கள் நேரடியாய் வினவவே, மங்கையின் மனக்குமுறல்கள் அத்தனையும் ஆதங்கமாய் வெளிவந்தது.
புரிந்துக் கொண்ட தம்பதிகளோ, கோக்கனதையை சமாதானம் செய்தனர் அவர்களையே உதாரணமாய் காட்டி.
தெளிவான புரிதல், ஆழமான அன்பிற்கு வழி வகுக்கும் என்றார் தெய்வீகன். நேசத்தின் வெளிப்பாடாய் விட்டுக்கொடுத்தல் சுலபமாகி போகும் என்றார் காஞ்சனா.
குறை சொன்ன நண்பர்களோ ஆளுக்கொரு நல்ல செய்தியைச் சொல்லினர் அடுத்த மாதமே.
குழப்பங்கொண்டாள் ஆயிழையவள். பார்ட்னர்களை கழுவி ஊற்றிய நடப்புகளா இப்படியென்று.
நேயத்தின் மாயம் அவளை வியக்க வைத்தது. எவ்வளவோ யோசித்தாள் வல்வியவள். புரியவில்லை பேதை அவளுக்கு.
மாயோளும் அதற்கு மேல் மெனக்கெடவில்லை. காரணம், புரியாத ஒன்றுக்காய் அவளின் சிந்தையைப் பாடாய் படுத்தி பேடையவள் நிம்மதியிழக்க விரும்பவில்லை.
ஆகவே, நண்பர்களுக்கு வாழ்த்துக் கூறியவள், அதற்கு பின்னாடியான அவர்களின் கம்பளைண்ட்டுகளை, அலைபேசியை மியூட் செய்தே கேட்டிட ஆரம்பித்தாள்.
இப்படியே நாட்கள் போக, தெய்வீகனோ மீண்டும் கல்யாண பேச்சை எடுத்தார் கோக்கனதையிடம். அப்பாவை ரொம்பவே சங்கடப்படுத்துவதாய் உணர்ந்த மகளோ, ஒப்புக்கொண்டாள் கல்யாணத்திற்கு.
அவளின் சம்மதத்தின் பேரிலேயே ஆர்.வி. குரூப்ஸின் கடைக்குட்டியான ஆகுரதனுக்கு, நேரிழை அவளை நேரடியாக பெண் பார்த்திட வந்தனர் ரத்னவேலுவின் குடும்பம்.
ஆனால், கனவிலும் கோதையவள் நினைக்கவில்லை கண்ட நொடியே இருவருக்கும் முட்டிக் கொள்ளுமென்று.
உண்மையிலேயே, திருமணத்திற்கு ஓகே சொன்ன அரிவையோ, மாப்பிள்ளையை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்ற எந்த கோரிக்கைகளையும் கொள்ளவில்லை அவள் டேடியிடம்.
இருந்தும் பொண்ணை பெத்த டேடியோ, மகளுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார் வருங்கால மருமகனின் படத்தை, குருமூர்த்தியிடம் பெற்று.
நேரடி டவுன்லோட் கொள்ளா வாட்ஸ் ஆப்பில் ரிசீவ்வாகிய படத்தை தரவிறக்கம் செய்யா சேயிழையோ, தெய்வீகன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு மட்டும் தம்ஸ் ஆப் போட்டு பதில் அனுப்பினாள்.
''சாண்டா!''
என்று சபித்த கோக்கனதையோ, ஒரே கிளிக்கில் டிலீட் செய்தாள் ஆணவன் படத்தை சூனியக்காரி பாணியில்.
அதுவும் பெண் பார்க்கும் சடங்கில் ரகு அமராது நிற்க, சுத்தமாய் அவன் முகத்தை ஏறெடுத்துக்கூட பார்த்திடாத பெதும்பையோ, முதல் முறை அவனை பார்த்ததே ஆணவன் ஹலோ சொல்லி அம்மணியவள் திரும்புகையில்தான்.
இதழ் மிடறும் முத்தம்...

Author: KD
Article Title: இதழ் மிடறும் முத்தம்: 4
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.