Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

எஸ் பி.பாலசுப்ரமனியத்துக்கு

jananisri srinivasan

Administrator
Staff member
Joined
Apr 25, 2024
Messages
21
தாயைவிட அதிகமாய் நம்மை
தாலாட்டிய தாயுமானவன்...

கர்வமில்லாக் கலையின்
நாயகன்..

தன்னிகரில்லா தாராள மனம்
கொண்ட ரசிகன்..

அவனின்றி நிறைவடையாது
அந்நாளின் துவக்கமும் முடிவும்...

மனம் தடுமாறி தத்தளிக்கையில்
தலைகோதி இதம்தரும் நாதம் அவன்..

கானங்களின் வழியே காதலை
உலகிற்கு உணர்தியவன்...

ஸ்வரங்களாய் நரம்புகளோடு ஒன்றாய்
கலந்து சுவாசமாகிப் போனவன்...

தனது தாளக்கட்டுகளுக்கு ஏற்ப நமது
இதயத்துடிப்பை இயக்கிவைத்தவன்...

ஒலியாய்ச் செவியில் ஊடுருவி உயிரை
உருகிக் கரைய வைத்தவன்....

உற்சாகமான பாடல்களால் உடலைச்
சொடுக்கெடுக்கும் உன்னத மருத்துவன்..

மயங்கவைக்கும் போதைக் குரலால் நமை
ஆட்டுவிக்கும் மாய வித்தைக்காரன்...

அவனுக்கு இறப்பா...
இசையும் அவனும் வேறல்லவே..
இசைக்கேதடா இறப்பு..

இவ்வுலகில் இசையென்ற பெயரால்
உயிர்பெரும் ஓசை ஒன்று உள்ளவரை
நீயும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய்
எங்களோடு ஒலியின் வடிவமாய்.....❤️😔😔🙏
 

Author: jananisri srinivasan
Article Title: எஸ் பி.பாலசுப்ரமனியத்துக்கு
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top