- Joined
- Apr 25, 2024
- Messages
- 21
கட்டித் தங்கமே..
கண்மணியே...
முக்கனியே...
முத்துச்சரமே...
அம்மா என்ற ஒற்றைச்
சொல்லில் என்னை
மறுபிறவி எடுக்க வைத்த
மாணிக்கமே....
என் கண்ணீர் துளிகளை
தளிர் கரம் கொண்டு
துடைத்து எறியும் செல்வக்
களஞ்சியமே....
என்னை ஆட்டிப்படைக்கும்
உன் அன்பிற்கு என்றும்
அடிமையாகத் தோணுதடி
அஞ்சுகமே...
கட்டியணைத்து முத்தமென்ற
பெயரில் கடித்து வைக்கும்
உன் எச்சில் அமிர்தத்தில்
மயங்கித்தான்
போனேனடி மரகதமே....
தட்டுத்தடுமாறி அடிமேல்
அடிவைத்து நடைபயின்று
எந்தன் மடிசேரும் அழகில்
அகம் மகிழ்ந்தேனடி
அழகுப் பெட்டகமே....
கைகொட்டி கண் சுருக்கி
பொக்கை வாய் காட்டி
கிளுக்கிச் சிரிக்கும் அழகில்
உதிரம் குளிர்கிறதடி
என் முழுமதியே....
பெண்ணாய்ப் பிறந்த
பெரும் பேற்றினை
உன்னை பெற்ற பின்னே
அடைந்தேனடி கோகிலமே....❤️❤️
கண்மணியே...
முக்கனியே...
முத்துச்சரமே...
அம்மா என்ற ஒற்றைச்
சொல்லில் என்னை
மறுபிறவி எடுக்க வைத்த
மாணிக்கமே....
என் கண்ணீர் துளிகளை
தளிர் கரம் கொண்டு
துடைத்து எறியும் செல்வக்
களஞ்சியமே....
என்னை ஆட்டிப்படைக்கும்
உன் அன்பிற்கு என்றும்
அடிமையாகத் தோணுதடி
அஞ்சுகமே...
கட்டியணைத்து முத்தமென்ற
பெயரில் கடித்து வைக்கும்
உன் எச்சில் அமிர்தத்தில்
மயங்கித்தான்
போனேனடி மரகதமே....
தட்டுத்தடுமாறி அடிமேல்
அடிவைத்து நடைபயின்று
எந்தன் மடிசேரும் அழகில்
அகம் மகிழ்ந்தேனடி
அழகுப் பெட்டகமே....
கைகொட்டி கண் சுருக்கி
பொக்கை வாய் காட்டி
கிளுக்கிச் சிரிக்கும் அழகில்
உதிரம் குளிர்கிறதடி
என் முழுமதியே....
பெண்ணாய்ப் பிறந்த
பெரும் பேற்றினை
உன்னை பெற்ற பின்னே
அடைந்தேனடி கோகிலமே....❤️❤️
Author: jananisri srinivasan
Article Title: மகள் யமுனாக்காக
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: மகள் யமுனாக்காக
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.