Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!
  • வணக்கம் மக்களே! நீரதி உங்களை அன்போடு வரவேற்கிறது! கடிவாளமற்று எழுத ஆசையா neerathitamilsite@gmail.com மெயில் பண்ணுங்க!

jananisri srinivasan

Administrator
Staff member
Joined
Apr 25, 2024
Messages
21
கவிதை இளவரசனுக்குப்
பிறந்தநாள்..

காற்றைத் தூதுவிட்டேன்
கவிஞனுக்கு ஏற்ற
கவிதையைத் தரச்சொல்லி..

பூக்களைத் தூதுவிட்டேன்
பாவலிற்கேற்ற
பாடல்களை தரச்சொல்லி..

ஆகாயத்தைத் தூதுவிட்டேன்
அழகனிற்கேற்ற
அர்த்தங்களைத் தரச்சொல்லி..

கடலைத் தூதுவிட்டேன்
உன் கம்பீரத்திற்கேற்ற
காவியத்தை தரச்சொல்லி..

அனைத்தும் கைவிட்ட
கையறு நிலையில்
வாழ்த்துவதற்கு
வக்கணையான
வார்த்தைகளின்றி
வாடியே நிற்கிறேனடா...

கடைசியாக கையிலிருக்கும்
அப்பழுக்கற்ற அன்பினை
அர்ப்பணிக்கின்றேன்..

அகம்நிறைந்த மகிழ்வோடு
ஏற்றுக்கொள்ளடா அழகனே..

உலகப்பூக்கள் கொண்டு
வாழ்த்த முடியாதென்பதால்
உயிர்ப் பூ கொண்டு
வாழ்த்துகிறேனடா என்னவனே❤️❤️❤️❤️

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 

Author: jananisri srinivasan
Article Title: வாழ்த்துகிறேனடா என்னவனே
Source URL: Neerathi-https://neerathi.com/forum
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Back
Top